வணக்கம்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

எனது இலட்சியம்!-பொறியியலாளராக வருவதே மகாஜனக் கல்லூரி மாணவன்`?

எதிர்காலத்தில் பொறியியலாளராக உருவாகி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதே எனது இலட்சியம் எனத் தெரிவித்தார் இவ்வருடம் இடம்பெற்ற தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகள் பெற்று யாழ்.மாவட்டத்தில் ஒன்பதாவது இடம் பிடித்துச் சாதனை பிடித்த தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவன் நித்தியானந்தராஜா கஜானன்.

தமிழ் சி.என்.என் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே குறித்த மாணவன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நான் தெல்லிப்பழை பன்னாலைப் பகுதியிலிருந்து தினமும் பாடசாலைக்கு அம்மாவுடன் வந்து செல்கிறேன்.எனது அப்பா வவுனியாவில் ஆசிரியராகக் கடமை புரிகிறார். எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.அவர்களும் இந்தப் பாடசாலையில் தான் கல்வி கற்கின்றனர். எனது வகுப்பாசிரியர் திருமதி-சத்தியநிதி சசிதரன் நன்றாய்ப் படிப்பித்தார்.

அத்துடன் வீட்டிலே பெற்றோர்கள், அதிபர், சக மாணவர்களும் எனது கல்விக்கு ஊக்கமளித்தனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

நான் தரம் -05 கற்கும் போது இரவு -6 மணியிலிருந்து 10 மணி வரையும், காலையில் 4.30 மணியிலிருந்து 6.30 மணி வரையும் கற்றலில் ஈடுபட்டேன்.

என்னைப் போல ஒவ்வொரு மாணவரும் கற்றலில் கவனம் செலுத்தினால் நல்ல பெறு பேறுகளைப் பெறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக