வணக்கம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நேற்று இரவு வர்த்தக நிலையம் கொள்ளையிடப்பட்டுள்ளது

வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்திலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 08.00 மணிக்கு வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு வந்த போது எனது கடையின் 08 பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக பொலிஸிற்கு தகவலை வழங்கியதை அடுத்து அவர்களின் உதவியுடன் 700,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதை அறியக் கூடியதாக இருந்தது.

மேலும் பல பொருட்கள் களவு போய் இருக்கலாம் என்று கருதினாலும் குற்றவாளிகளின் தடயங்கள் மறைந்து போய்விடுமாகையால் என்னை பொலிஸார் உள்ளே சென்று பார்வையிட அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஆலயத்தில் தங்க ஆபரணங்கள் திருடிய ஆறு பெண்கள் கைது

யாழ் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று சனிக்கிழமை(26.9.2015) இடம்பெற்ற போது சன நெரிசலைப் பயன்படுத்தி அடியார்களின் தங்க ஆபரணங்கள் களவாடிய ஆறு பெண்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து 16 தங்கஆபரணங்கள் 
மீட்கப்பட்டுள்ளன.
தங்க ஆபரணங்கள் அபகரிப்புக் குறித்துப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.இதனையடுத்துத் தீவிர விசாரணைகளில் இறங்கிய பொலிசார் ஆறு பெண்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியாவையும்,மூவர் நீர்கொழும்பையும் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 16 தங்க ஆபரணங்கள் பொலிசாரினால் துண்டுகளாக
 மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்றைய தினம் ஆலயத்தில் தங்க ஆபரணங்களைப் பறிகொடுத்தவர்கள் பருத்தித் துறைப் பொலிஸ் நிலையத்தில் ஆதாரங்களைக் காட்டிச் சட்ட நியதியின் படி பெற்றுக் கொள்ள முடியுமெனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் இயன்றவரை தங்க நகைகள் அணிந்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 23 செப்டம்பர், 2015

.கீரிமலையைச் சேர்ந்த பெண்ணைக் காணவில்லை

யாழ் புதிய கொலனி கீரிமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 16ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று அவரது உறவினர்கள், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அன்ரன் ஜயக்கோன் சிவகௌரி (வயது 36) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் அங்கும் செல்லவில்லை. அலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போதும் அலைபேசியும் செயழிழந்து காணப்படுவதாகவும் 5 நாட்களாக வீட்டுக்கு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 21 செப்டம்பர், 2015

இளைஞர் கும்பலால் மாணவர்கள் இருவர் மீது வாள் வெட்டு`?

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில வந்த ஒன்பது பேர், தந்தையார்களின் கடைகளில் நின்ற பாடசாலை மாணவர்கள் இருவரையும் வெட்டி காயப்படுத்தியதுடன் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார்கள். 

சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசார், சுன்னாகம் சந்தியில் சுமார் ஐம்பது மீற்றரில் கடமையில் ஈடுபட்டு இருக்கக் கூடியதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் நகரப்பகுதியில் பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள கண்ணதாசன் பன்சி ஹவுஸ் மற்றும் அருகாமையில் உள்ள சித்தி விநாயகர் பன்சி ஹவுஸ் ஆகிய கடைகளில் நின்ற மாணவர்களான கண்ணதாசன் கோகுலதாசன் (வயது 18) மற்றும் பத்மசீலன் விதுசன் (வயது 18) என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் சுன்னாகம் நகரப் பகுதயில் உள்ள வர்த்தகர்களுக்கு இடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில மாதங்களாக இத்தகைய சம்பவங்கள் குறைவடைந்து காணப்பட்ட போதிலும் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஏற்னவே இத்தகைய குற்றச் செயலகள் சம்பந்தமாக விளக்கமறியலில் இருந்தவர்கள் சிலர் வெளியில் வந்துள்ளதாகவும்
 பொதுமக்கள் கருத்து வெளியிட்டனர்.இந்தநிலையில் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் பரவலாக பொது மக்களினால் பேசப்படுகின்றது-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செவ்வாய், 15 செப்டம்பர், 2015

நல்லைக்கந்தன் உற்சவத்தில் ரூ. 14.6 மில்லியன் வருமானம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர், இன்று திங்கட்கிழமை (14) தெரிவித்தார்.

நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம் கேட்டவர்களுக்கு கடைகளுக்கான இடங்கள் கொடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் 348 கடைகள் அமைப்பதற்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டன. கச்சான் கடை அமைப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 45 ஆயிரம் ரூபாய் வரையும், இனிப்புக் கடைக்கு 40 ஆயிரம் தொடக்கம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையும், மணிக்கடைகள் 75 ஆயிரம் ரூபாய் தொடக்கம், இதர கடைகள் 12 ஆயிரத்து 500 ரூபாய் தொடக்கம் 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை சபையின் நிர்ணய வாடகை விலையாகவிருந்தது.

அந்தவகையில், கடைகளுக்கான இடங்களை வாடகைக்கு விடப்பட்டதின் அடிப்படையில் 10.6 மில்லியன் ரூபாய் வருமானமும், நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியதின் மூலம் 4 மில்லியன் ரூபாயும் வருமானமும் கிடைத்தது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 12 செப்டம்பர், 2015

தங்கையின் கணவரை அக்காவும் தம்பியும் சேர்ந்து எரித்துள்ளனர் ?.

ந்தளாய் பிரதேசத்தில் மண்ணெண்ணை ஊற்றி ஒருவரை எறித்த குற்றச்சாட்டின் பேரில் கந்தளாய் பொலிஸார் இருவரை இன்று சனிக்கிழமை(12) காலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(11) இரவு இந்த எரிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தொரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் அக்காவும் தம்பியும் என்பதோடு சந்தேக நபர்களின் தங்கையின் கணவரேயே இவ்வாறு மண்ணெண்ணெய் ஊற்றி எறித்துள்ளதாகவும் இச்சம்பவத்துக்கு குடும்ப பிரச்சினையே காரணமெனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எறிகாயங்களுக்குள்ளானவர் ஆபத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர் வழங்கிய தகவலின் படியே சந்தேக நர்களை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 10 செப்டம்பர், 2015

சகோதரனை 8 கிலோ மீட்டர் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சகோதரி

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் 7 வயது சகோதரனை 11 வயது பழங்குடியின சிறுமி மாலதி கழுத்தில் வைத்து சுமந்து மருத்துவமனைக்கு 
அழைத்து சென்று உள்ளார். சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவு வரையில் சகோதரனை சுமந்து செல்லும் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து உள்ளது. 7 வயது சிறுவனுக்கு உலகில் யாருக்கும் 
எளிதாக கிடைக்காத அன்பு அதிகமாக கொண்ட சகோதரி கிடைத்து உள்ளார்.   மாலதியின் சகோதரன் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளான், அவன் அடுத்தவரது உதவியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்ற நிலையில் உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவனை கழுத்தில் வைத்து சுமந்துசெல்லும் மாலதி பேசுகையில், எனக்கு பெற்றோர்கள் இல்லை, என்னுடைய தாத்தா-பாட்டியே எங்களை பார்த்துக் கொள்கின்றனர். என்னுடைய சகோதரன் உடல்நிலை சரியில்லாமல் உள்ளான், என்று கூறிஉள்ளார். சிறுவனை, 11 வயது சிறுமி கழுத்தில் வைத்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அவர்களுக்கு உதவிசெய்த முன்வந்து
 உள்ளனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் மனோஜ் பாகாத் பேசுகையில், “சிறுமி மருத்துவமனையில் அழுது கொண்டு இருந்ததை பார்த்தேன், சிறுவனை அழைத்து செல்லமுடியாமல் தவித்தார். சிகிச்சை முடிந்ததும் நாங்கள் அவர்களை ஆம்புல்ன்சில் அனுப்பி வைத்தோம்,” என்று கூறிஉள்ளார். 
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிறைந்த இப்பகுதியில் உட்கட்டமைப்பு பணிகளானது மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் என்பது கிடைப்பது மக்களுக்கு எளிதானது 
இல்லை என்ற நிலையே உள்ளது. மருத்துவ வசதிஎன்பது மிகவும் மோசமாகவே உள்ளது. மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா ஆட்சிசெய்து வருகிறது. 
மராட்டிய மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் சாப்பிட 
உணவும் கிடையாது, செய்வதற்கு வேலையும் கிடையாது என்ற நிலையில் 5 குழந்தைகளின் தாய் தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்ட பரிதாப சம்பவம் 
கடந்த சனிக்கிழமை அன்று நிகழ்ந்தது. இதேபோன்று விவசாய கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் பரிதாப நிலையும் 
இந்தியாவில் காணப்படுகிறது. மருத்துவ  வசதியின்றி மக்கள் படும் கஷ்டமும் இங்குதான் உள்ளது. அடிப்படை தேவைகள் கிடைக்காமல் இந்தியாவில் இன்னும் மக்கள் உள்ளனர் என்பதை இத்தகைய செய்திகள் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள் மிகவும் வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 7 செப்டம்பர், 2015

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து எமதுயாழ் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு  வருகைதந்து எமது மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணங்களை 
வழங்கி உதவிதந்த சமூக சேவையாளர் நவரத்தினராசா ஜெயகோபாலுக்கு எமது பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கின்றோாம்..



சனி, 5 செப்டம்பர், 2015

என் மகள் தூங்கும் முன் என்னிடம் கேட்டாள்???.

"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."

"எப்ப தூக்கம் வரும்பா?"

"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."

"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."

"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."

"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
அதான் அதுக்கு வீடு இல்ல..."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"

"கடவுள்..."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"

"கடிக்காது..."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."

"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"

"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்...."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான் நீ தூங்கு..."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்கு பசிக்குது..."

"கொசு இட்லி சாப்பிடுமா?"

"அதெல்லாம் பிடிக்காது..."

"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"

"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."

"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"

"கேட்டுத் தொலை"

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்கு பல்லே இல்லை..."

"பிறகு எப்படி கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."

"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"

"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"

"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"

இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு
போகலாம்னு முடிவு பண்ணி, வேலை
தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!
நம்மால் முடிந்த வரை பிறரை சிரிக்க வைப்போம்.
...நன்றி...!!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

உயர்தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பலி

மல்லாவியைச் சேர்ந்த மாணவன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் பலியாகியுள்ளார்.
இன்று மதியம் 12.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மல்லாவியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதீப் (வயது 19) என்ற மாணவனே உயிரிழந்தார்.
இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறவிருந்த புவியியல் பாடத்துக்குத் தோற்றுவதற்காக சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுள்ளார்கள்.
இந்த நேரம் ஓட்டங்குளம் சந்தியில் குறுகிய தூர சேவையில் தற்காலிகமாக ஈடுபடுத்தப்பட்ட பஸ்ஸுடன் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பின்பக்கமாக இருந்துசென்ற மாணவன் மயக்கமுற்ற நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார்.
மற்றைய மாணவனான எஸ்.சுஜீவன் (வயது 20) என்பவர் மயக்கமுற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 2 செப்டம்பர், 2015

விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சற்றுமுன்னர் நிகழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடிப்போக்கு சந்தியில் விசேட அதிரடிப்படையினரின வாகனம் ஒன்று, மோட்டார்சைக்கிளில் சென்றவரை பந்தாடியதில் விபத்து நேர்ந்துள்ளது.இந்த பகுதியில் அண்மையிலும் விபத்து நேர்ந்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>