வணக்கம்

சனி, 25 மார்ச், 2017

பன்­னா­லை­யில் ஆல­யத்­துக்­குள் வைத்து மது அருந்திய நால்­வர் கைது



தெல்­லிப்­பழை பன்­னா­லை­யில் கோயில் ஒன்­றுக்­குள் வைத்து மது அருந்­திய குற்­றச்­சாட்­டில் 2 சார­தி­கள் உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று 
பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
“தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த 4 பேரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­னர். நேற்­று­முன்­தி­ன­மி­ரவு அவர்­கள் குறித்த கோயி­லின் உள்ளே இருந்து மது அருந்­தி­யுள்­ள­னர். அது தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கு் தக­வல் வழங்­கப்­பட்­டது. அங்கு சென்ற பொலி­ஸார் 4 பேரை­யும் கைது 
செய்­த­னர். 
அவர்­கள் விசா­ர­ணை­யின் பின்­னர் பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தொட­ரப்­ப­டும்” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

சற்றுமுன்னர் யாழில் கோரவிபத்து!

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுக்கு
 உள்ளானார்.
முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 21 மார்ச், 2017

ஓட்டோவில் வந்தவர்களால் அளவெட்டியில் ஆடு திருட்டு!

யாழ் - அள­வெட்­டிப் பகு­தி­யில் வீட்­டின் முன்­னால் கட்டி வைத்­தி­ருந்த ஆடு திருட்­டுப் போயுள்­ள­தாக பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வர்­களே ஆட்­டைத் திரு­டி­னார்­கள் என்று அதன் உரி­மை­யா­ளர் முறைப்­பாட்­டில் 
தெரி­வித்­துள்­ளார்.
“அள­வெட்டி பன்­னா­லைப் பகு­தி­யில் குட்டி ஈன்று இரண்டு மாதங்­க­ளே­யான  தாய் ஆடு வீட்­டுக்கு முன்­பாகக் கட்­டப்­பட்­டி­ருந்­தது. குட்டி அதன் அரு­கில் விடப்பட்டிருந்தது.20.03.2017 திங்கட்­கி­­­ழ­மை
 பகல் 10 மணி­ய­ள­வில் சாலை­யால் ஓர் முச்­சக்­கர வண்டி சென்­றது. அந்த நேரம் நாம் வீட்­டுக்­குள்­ளி­­ ருந்­தோம். முச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வ­ரின் நட­மாட்­டம் அறிந்த அய­ல­வர்­கள் எம்மை கூப்­பிட்­ட­னர். சத்­தம் கேட்டு ஓடி­வந்­தோம். அந்த நேரம் ஆடு திரு­டப்­பட்­டு­ விட்­டது.
அய­ல­வர்­கள் கூறு­வ­தன் பிர­கா­ரம் ஓர் பட்­டர் கலர் முச்­சக்­கர வண்­டி­யி­லேயே ஆடு கடத்­தப்­பட்­டுள்­ளது.   இது தொடர்­பில் தெல்­லிப்­பழை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. எனி­னும் பொலி­ஸார் இது­வ­ரை­யில் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை. 
களவாடப்பட்ட தாய் ஆட்டின் இரண்டு மாதக் குட்டி தாயைப் பிரிந்து  நின்று கதறுவதை பார்க்கமுடியாது சோகமாகவுள்ளது. எந்த உணவையோ நீரையோ குட்டி அருந்துவதாகத் தெரியவில்லை. இதனால் கத்திக் கத்தியே அதன் உயிரும் பிரிந்துவிடுமோ என்ற 
ஏக்கமாகவுள்ளது.  
இவ்வாறான பாவங்களை சுமப்பவர்களும் இந்த நாட்டிலேயே உள்ளனர்” என்று ஆட்டின் உரிமையாளர் மனவேதனையுடன்
 தெரிவித்தா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 2 மார்ச், 2017

தமிழகத்தில்நடன நிகழ்ச்சியில் மகுடம் சூட்டிக்கொண்ட, ரத்னம் விதுர்ஷா !!

யாழ். நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் எங்கள் ஈழத்து பெண் ரத்னம்.விதுர்ஷா தற்பொழுது தமிழக தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடம் வகிக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் 
ஒன்றான சீ தமிழ் (zee tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் அறிமுக நிகழ்சி பிரமாண்டமான முறையில் நடை பெற்றது இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
ஈழத்துப் பெண்ணை ராணியாக அலங்கரித்து நடிகை சினேகா அவர்களினால் மகுடம் சூட்டப்பட்டது.
இதற்கு பின்னால் ஒரு வலுவான காரணம் இருக்கிறது.
நடனத்தில் இருந்த அதீத ஆர்வத்தால் தமிழகத்தில் நான்காவது இடத்தில் உள்ள விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியான “ஜோடி நம்பர் 01″ நிகழ்ச்சியின் தேர்வில் கலந்து கொள்ள சென்ற இந்த ஈழத்துப் பெண்ணை அவரது நடனத்தை பார்க்காமலே அழகு குறைவு என்ற ஒரே காரணத்தால் அவரை நிராகரித்தது விஜய்
 தொலைக்காட்சி.
இதன் காரணமாக மன ரீதியில் பலவீனம் அடைந்த அந்த பெண்ணுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தது
 சீ தமிழ் தொலைக்காட்சி
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>