வணக்கம்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

அதிபர் ரின் மன்மத லீலைகளுக்கு ஒத்தாசை புரிந்த யுவதி மாட்டியுள்ளார்!!

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட பாடசாலை விடுதி பொறுப்பாளரான 28 வயதுப் பெண்ணை,
நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.
துஷ்பிரயோகம் மற்றும் அதிலிருந்து தப்புவது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை, தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் அண்மையில் இந்தப் பாடசாலையில் நடத்தினர். இதன்போது, துஷ்பிரயோகம் மேற்கொள்ள நினைப்பவர் எவ்வாறான இடங்களில் தொடுகை செய்வார், அதிலிருந்து தப்புவது எப்படி போன்ற விடயங்களை உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்வு முடிவடைந்ததும், சிறுவர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் சென்ற சில மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் தங்கள் பாடசாலை அதிபர், தங்களுடன் மேற்கூறியது போல தொடுகை செய்வது மற்றும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் நடப்பதாகவும் கூறினர்.
சிறுவர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இதனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன், இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் அதிபர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட போது, விடுதி மேற்பார்வையாளரும் இதற்கு உடந்தையாக இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அவரை செவ்வாய்க்கிழமை (27) கைது செய்தனர். சந்தேகநபரான பெண் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 29 அக்டோபர், 2015

பூநகரி வீதியில் விபத்தில் படுகாயமடைந்து மயங்கி யவர்கள் காப்பாற்றப்பட்னர்?

யாழ்ப்பாணம்- பூநகரி A32 வீதியில் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்த இருவர் தற்செயலாக அந்த வழியால் வந்த அம்புலன்ஸ் வண்டியினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மாலை A32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களே இவ்வாறு 
மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அம்புலன்ஸ் வண்டியில் பயணித்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தகவல் தருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது காயமடைந்து அதிக இரத்தம் சிந்திய நிலையில் இவர்களை கண்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் 
சேர்த்தோம்.
அவர்கள் அதிக இரத்தப் போக்கால் மயங்கியிருந்தனர். அவர்கள் விபத்துக்குள்ளாகி மீட்கப்படாத நிலையில் நீண்ட நேரம் அங்கேயே கிடந்திருக்கிறார்கள். என தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்.மறவன்புலோ மத்தியை சேர்ந்த க.குணரத்தினம்(வயது60), எஸ்.மோகிந்தன்(வயது18) என 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





புதன், 28 அக்டோபர், 2015

தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் 2016 இல்

பெப்ரவரிக்குள் கிளிநொச்சி மைதானம் பூா்த்தியாக்கப்படும் விளையாட்டு அமைச்சரின் செய்தி விளையாட்டாக போய்விடக் கூடாது .
2016 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவினை கிளிநொச்சியில் நடாத்தும் வகையில் கிளிநொச்சி மைதானம் புனரமைப்பு பணிகள் பூா்த்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சா் தயாசிறி ஜெயசேகர தொிவித்துள்ளாா்.
இன்று 27 கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சா் கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற விளையாட்டு மைதானத்தை பா்ாவையிட்ட போதேஊடகவியலாளா்களிடம் இவ்வாறு தொிவித்தாா்.
2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பூா்த்தி செய்யப்பட்டு தேசிய விளையாட்டு விழா நடாத்தப்படும்கூறப்பட்டிருந்தது. ஆனால் 2015 இன்று வரை மைதானம் பணிகள் நிறைவடைய வில்லை.
இந்த நிலையில் ஓப்பந்த நிறுவனமான cecb எனும் நிறுவனத்திற்குபணிகளுக்கான நிதி விடுவிப்பு முறையாக இடம்பெறாமையினால் கடந்த பல மாதங்களாக கட்டுமானப் பணிகள் எவையும் இடம்பெறாது இருந்த நிலையில் தற்போது மீண்டும் மந்த கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது நிதி விடுப்புமேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனி தடையின்றி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த வகையில் எதிவரும் பெப்ரவரிக்குள் கட்டுமானப் பணிகள் பூா்த்தியாக்கப்பட்டுஇலங்கையின் வருடாந்த தேசிய விளையாட்டு விழாகிளிநொச்சி நடாத்தப்படும் எனவும் இதன் போது தமிழ் சிங்களம் முஸ்ஸிம் மக்கள் ஒன்று சோ்வாா்கள் என்றும் இது தேசிய ஒற்றுமைக்கான பாதையாக அமையும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சா் 
தெரிவித்தாா்.
2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடாத்தப்படும் என ஏற்கெனவே தொிவிக்கப்பட்டிருந்தது அது நடைப்பெறவில்லை இந்த நிலையில் 2016 ஆம் ஆ்ண்டுக்கான தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடாத்தப்படும் எனும் விளையாட்டு அமைச்சரின் செய்தி விளையாட்டாக போய்விடக் கூடாது என விளையாட்டு ஆர்வலா்கள் எதிா்பார்க்கின்றனா்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 26 அக்டோபர், 2015

ஆசிய வங்கி வீதி அபிவிருத்திக்காக 800 மில்.அமெ. டொலர் நிதியுதவி

இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களின் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளது.
மூன்று கட்டங்களாக இவ்வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அமைச்சரவை பேச்சாளர்
 தெரிவித்தார்.
தேசிய, மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் இவ்வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பின்தங்கிய பிரதேசங்களில் 3,108 கிலோ மீற்றர் வீதியும் 248 தேசிய வீதிகளும் இந்நிதியினூடாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இதற்காக சுமார் 906 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்று 
கணிப்பிடப்பட்டுள்ளது.
800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் நிலையில் மிகுதியை இலங்கை அரசு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
தெற்கு, சப்ரகமுவ மத்தி, வடமத்திய மாகாணங்களிலும் மேல் மாகாணத்தில் களுத்தறை மாவட்டத்திலும் இவ்வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இலங்கைக்கிடையில்உலக சுகாதார நிறுவனம் ஒப்பந்தம்



மலேரியா நோயைக் கட்டுப்படுத்திய முதலாவது வெப்பமண்டல நாடொன்றாக உலக சுகாதார நிறுவனத்தினால் உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிதியினை உலக நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை அங்கீகாரம்
 வழங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் சுகாதாரப் பிரச்சினையாகியுள்ள எயிட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 2002 ஆம் ஆண்டில் உலக தலைவர்களின் பங்கேற்புடன் “ எயிட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய நிதியம்” .
ஸ்தாபிக்கப்பட்டது இந்நிதியம் ஆரம்பித்த நாள் முதல் இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நோய்கள் பரவக்கூடிய நாடுகளின் அரச நிறுவனங்களுக்கும் வேறு அமைப்புக்களுக்கும் நிதி வசதிகளை வழங்கும் நிறுவனமாக உலகளாவிய நிதியம் செயற்பட்டு 
வருகின்றது. 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து இலங்கையில் மலேரியா நோய் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் பதிவாகவில்லை. தற்போது மலேரியா தொற்று இலங்கையில் முற்றாக நீங்கியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட செயலக வாணி விழா

நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி விழா நேற்று (23) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் வெகுவிமரிசையாக 
நடைபெற்றது.
காலை ஆரம்பமான இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
நிழல் படங்கள் இணைப்பு ,,,,,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 24 அக்டோபர், 2015

வெளிநாட்டில் இருந்து வந்த மகன் மகனும் தாயயை மூர்க்கத்தனமாக தாக்கினர்.

 வயோதிபத் தாயொருவரை அவரது மகனும்  மேலும் மூவரும் சேர்ந்து  தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.
கணபதி நகர் ரமேஷ்புரத்தைச் சேர்ந்த 58 வயதான  மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது தாய் தனது சகோதரனால் தாக்கப்பட்டமை பற்றி முறைப்பாடு தெரிவித்துள்ள அருமைத்துரை வினோதினி (வயது 30)
 கூறியதாவது,
சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு கடந்த வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான எனது சகோதரன் சுவேந்திரன் (வயது 32) உடனடியாக எனது வீட்டுக்குள் புகுந்து எனது தாய் தனியாக இருந்த வேளையில் தாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
கோயிலுக்குச் சென்றிருந்த நான் வீடு திரும்பிய போது தாய் இரத்த வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார்.
உடனடியாக தாயை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எமது தாயைத் தாக்கிய எனது சகோதரன் உதவியாக மேலும் மூவரை அழைத்துக் கொண்டு வந்து தாயைத் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது என்றார்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

பெண் ஊழியரையும் விட்டுவைக்காத கொள்ளைக்காரர்கள்.

 குளியாபிட்டிய வீதியின் கனன்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்த இருவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஆயுதமுனையிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையத்தில் பணத்தை கொளளையிட்டோர் , அங்கிருந்த பெண் ஊழியரின் தங்க நகையையும் கொள்ளையிட்டுள்ளனர்.
மேலும் அவர் வந்த மோட்டார்சைக்கிளும் திருடப்பட்ட தென தெரியவந்துள்ளது. இக்காட்சி சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது.
காணொளி இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 20 அக்டோபர், 2015

மாணவர்களிடையே மோதல் 6 மாணவிகள் வைத்தியசாலையில்!!!.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி; மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக 
பதில் பதிவாளர் ஏ.பகிரதன் தெரிவித்தார். கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட 06 மாணவிகள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பல்கலைக்கழகத்தின் 
விரிவுரைகள் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 19 அக்டோபர், 2015

எரியுண்ட நிலையில் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்è??

வடமராட்சி கரவெட்டி கப்பூது வெளிப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளோடு எரியுண்ட நிலையில் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கரவெட்டி கரணவாயிலிருந்து கப்பூது நோக்கி செல்லும்
 வீதியில் மோட்டார் சைக்கிளுடன் எரியுண்ட நிலையில் இளைஞர் 
ஒருவர் 
உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து படுகாயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு மந்திகை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டவர் மத்தொனி கரவெட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய குமாரசாமி நிரோஐன் என்று அப்பகுதியில் மீட்கப்பட்ட ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. குறிப்பிட்ட சம்பவத்தில்
 மோட்டார் சைக்கிள்
 முற்றாக எரிந்து சேதமடைந்திருக்கிறது. இது யாருடையதும் கைவரிசையா அல்லது தற்கொலை முயற்சியா என்பது தொடர்பிலும் சந்தேகம் நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர் -
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 17 அக்டோபர், 2015

50 குட்டிகளுடன் சவக்குழிக்குள் காணப்பட்ட 20 அடி நீள பாம்பு


சவக்குழி ஒன்றுக்குள் தனது 50 குட்டிகளுடன் காணப்பட்ட பெரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நாவுல – அஹமுனாய, மெல்ல கொல்ல பொது மயானத்தில் காணப்பட்ட பழைய சவக்குழி ஒன்றில் இருந்தே இந்தப் பாம்பு பிடிக்கப்பட்டது.
சடலமொன்றை அடக்கம் செய்வதற்காக இந்த மயானத்துக்குச் சென்றி ருந்தோர் அங்கிருந்த பழைய சவக்குழி ஒன்றில் இந்தப் பாம்பு தனது குட்டிகளுடன் இருப்பதைக் கண்டுள்ளனர்.bambu
குறித்த சவக்குழியின் மேற் பகுதி கொங்கிறீட்டினால் செப்பனிடப் பட்டிருந்த நிலையிலும் உள்ளே குழி ஒன்றினை உருவாக்கியே இந்த மலைப்பாம்பு வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 அடி மலைப்பாம்பினை அங்கு சென்றவர்கள் பிடித்து வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் கையளித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




வியாழன், 15 அக்டோபர், 2015

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சுங்க உத்தியோகத்தர்கள் மூவர் கைது

´
125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்பேரில் சுங்க உத்தியோகத்தர்கள் மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1500 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்ளை சுங்கத் தீர்வையின்றி விடுவிப்பதற்காக இந்த இலஞ்சத் தொ​கையைப் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்தென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் 
குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


யூனியன் கல்லூரியின் 199ஆவது ஆண்டு விழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியின் 199ஆவது ஆண்டு விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று  கல்லூரியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கல்லூரியின் அதிபர் வே.க. இரத்தினக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அத்துடன், வடமாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் 
சிறப்பு 
விருந்தினராகவும், தெல்லிப்பளைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஈஸ்வரநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இன்று முற்பகல் பாடசாலைக்கு விஜயம் செய்த பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டதுடன், மங்கள் விளக்கேற்றி இன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வில் கல்லூரியின் 199ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் பல்வேறான கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், விருந்தினர் உரைகளும் இடம்பெற்றன
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 12 அக்டோபர், 2015

மட்டக்களப்பில் லண்டன் வாலிபருக்கு காதலியின் சதி``

`
கள்ளக் காதலனுடன் வாழ்வதாற்காக பதிவுத் திருமணம் செய்து அப்பாவி இளைஞன் ஒருவனுடைய உயிரை திட்டமிட்டு பறித்துள்ளார் மட்டக்களப்பு யுவதி.

பதிவுத் திருமணம் செய்து கொண்ட கணவன் உயிர் பிரிந்து ஒரு மாதம் கூட கழியாத நிலையில யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது கள்ளக் காதலனுடன் குறித்த யுவதி தொடர்பு…

மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்த 25வயது இளைஞர் கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வந்து மட்டக்களப்பில் நெற்கவே ஒன்றினை ஆரம்பித்து நடத்ததி வந்துள்ளார்.

இவருடைய நெற்கவேக்கு நாளாந்தம் வருகைதந்த மட்டக்களப்பு வத்தாறமுனைப் பகுதியினைச் சேர்ந்த 21வயது யுவதிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளளது.

காதலை ஏற்றுக் கொண்ட யுவதி தான் கல்வியினை முடித்துக் கொண்ட பின்னர் இருவரும் திருணம் செய்து கொள்வோம் என்று கூறி பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு இருவரும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பதிவுத் திருணம் செய்து கொண்டுள்ளனர். இதன் பின்னரும் யுவதி ஆசைப்பட்ட காரணத்தினால் அவளை தனது பணத்தில் இந்தியாவிற்கு அனுப்பிவைத்து கல்விகற்க வைத்துள்ளார் இளைஞர்.

இளைஞனிடம் இருக்கும் பணத்தினைப் பயண்படுத்தி சுகபோக வாழ்க்கையினை வாழ்ந்த யுவதி நினைத்ததை எல்லாம் இளைஞனின் பணத்தில் வாங்கி அனுபவித்துள்ளார்.

இந்தியாவில் படிப்பினை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்த பின்னரும் கூட சுமார் 4 இலட்சம் ரூபாவினை இளைஞனின் இருந்து யுவதி பணமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தனது வருங்கால மனைவிக்காகத்தானே இவ்வளவு பணத்தினையும் செலவிடுகின்றேன் என்ற ஆனந்தத்தில் இளைஞன் பணத்தினை யுவதிக்காக வாரி இறைத்துள்ளார்.

யுவதி இவ்வளவு பணத்தினையும் செலவிட்டுக் கொண்டிருந்த இளைஞனுக்கு அவள் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் யுவதியின் கள்ளக் காதல் கண்ணுக்குத் தெரியவில்லை. யுவதி கள்ளக் காதலை சூதகமாக மறைத்து வந்துள்ளாள்.

எப்படியோ யுவதிக்கு கள்ளக் காதல் இருப்பது தெரியவந்த பின்னர் இளைஞன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இருப்பினும் மனம் பொறுத்துக் கொள்ளாமல் கடந்த மாதம் 11 ஆம் திகதி யுவதியை சந்திக்க சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து யுவதியை சந்தித்த இளைஞனை அவள் அவமானப்படுத்தியுள்ளாள்.

நீ இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து செத்துவிடுவேன் என்று சென்னதும் அதை முதலில் செய் நான் நல்லா இருப்பன் என்று யுவதி இளைஞனை முகத்தில் அடித்தது போல் ஏசியுள்ளார்.

ஏமாற்றம் தாங்கிக் கொள்ள முடியாமல் அங்கிருந்து ஹயஸ் வாகனத்தில் வீடு நோக்கிப் புறப்பட்ட இளைஞன் மட்டக்களப்பு நாவலடிச் சந்திக்கு அருகாமையில் ஓடிக் கொண்டிருந்த வாகனத்தில் இருந்த பாய்ந்துள்ளார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 11 அக்டோபர், 2015

அதியுயர் நிர்வாக சேவைக்கு திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள்

இலங்கையின் அதியுயர் நிர்வாக சேவையான “இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு” எமது கிராமத்தைச் சேர்ந்த திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள் 14.09.2015 அன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவர் தனது ஆரம்பக் கல்வியை யா / வளலாய் அ.மி.த.க. பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை யா / இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1995 இல் யாழ் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் இளங்கலை (புவியியல்) சித்தி பெற்றார்.

சித்திரை 7 2015, கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் வெளிவிவகார அமைச்சினால் (COLOMBO TELEGRAPH) வெளியிடப்பட்ட விபரங்களின் படி இலங்கை கடல்கடந்த சேவைக்காக தெரிவுசெய்யப்பட்ட 42 நபர்களிலில் அகரவரிசைப்படி 18 வது ஆளாக காணப்படும் கிரிதரன் குமாரசாமி என்பவர் வளலாய் அச்சுவேலி ஐச் சேர்ந்தவர் என்பதை தெரியப்படுத்துவதில் வளலாய் இணையம் பெருமைப்படுகின்றது.
திரு கிரிதரன் குமாரசாமி M.A. M.Ed., 2005 இலிருந்து 2007 வரை வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்திலும் 2007 இலிருந்து 2012 வரை வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலத்திலும் 2012 இலிருந்து இன்றுவரை யா / நெல்லியடி மத்தியகல்லுரியிலும் ஆசிரியராக பணியாற்றுகின்றார். “பௌதீகப் புவியியல்” “சூழற்புவியியல்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ள கிரிதரன் ஆசிரியர் முதுகலைப் படிப்பை 

பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் M.Ed. பட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும் பொருளாதரச் சிரமங்கள் இடம்பெயர்வுகளுக்கு மத்தியிலும் தன்னாற்றலால் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேர்ந்துள்ளதோடு வளலாய் கிராமத்துக்கும் பெருமையும் புகழும் சேர்த்துள்ளார். அவர் SLOS – GR II, GR I தேர்வுகளிலும் சித்தி பெற்று வெளிநாட்டு தூதுவராக பதவி உயர்வு பெற வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் உறவுகள்.
இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
எம் நவக்கிரி .கொம்  நிலவரை .கொம்  நவற்கிரி கொம் ·இணையங்களின் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 10 அக்டோபர், 2015

போதையில்சண்டையிட்ட இளைஞர்களுக்கு யாழ் பொலிஸார் அடி

மது போதையில் பொது மக்களுக்கு இடையூறான வகையில் சந்தியில் நின்று சண்டை பிடித்துக்கொண்டு நின்ற இளைஞர்கள் இருவருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த வேறு இடத்து பொலிசார் கொடுத்த தர்ம அடியில் அவர்கள் ஓடித்தப்பியுள்ளார்கள்.
ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் நேற்று இரவு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மது போதையில் கெட்ட வார்த்தை பிரயோகங்களை பேசி சண்டையிட்டுக் கொண்டு நின்றார்கள்.
இதனால் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதுடன் செய்வதறியாது வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
இந்த நேரத்தில் வேறு இடத்தில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் கடமைக்கு செல்வதற்காக அந்த இடத்திற்கு வந்த போது நிலமையை உணர்ந்துள்ளார்.
பொது மக்கள் இவர்களின் சண்டை காரணமாக போக்குவரத்து செய்ய முடியாது நிற்பதை உணர்ந்து சண்டையிட்டவர்களுக்கு வழங்கிய தர்ம அடியைத் தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஒடித்தப்பியுள்ளார்கள்.
இந்த பொலிசாரின் செயலை பொது மக்கள் பாராட்டியுள்ளார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

யாழ்.பண்பாட்டுப் பெருவிழாவில் முதலமைச்சர் பங்கேற்பு?

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா  நடைபெற்றுள்ளது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய யாழ்.பண்பாட்டு பெருவிழா இன்றைய தினம் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில்
 நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து
 கொண்டார்.
சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் இ.ரவீநர்திரனும் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி 
கலந்து கொண்டார். சர்வமத தலைவர்களின் ஆசி உரைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நாட்டார் பாடல்கள், கிராமிய நடனம், தென்மோடி கூத்து போன்ற பண்பாட்டு கலைகள் நிகழ்த்தப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இதில் நெடுந்தீவு- மதியாபரணம் கந்தையா(கூத்து), வேலணை- நல்லான் தங்கவேலு (நாடகம்), ஊர்காவற்றுறை- அந்தோனி சவரிமுத்து(கூத்து), காரைநகர்- கந்தையா வடிவேலு(வாத்தியம்) யாழ்ப்பாணம்- நீக்கலான் பிலிப்பு(கூத்து), நல்லூர்- சபாபதிப்பிள்ளை 
பாலசிங்கம்(கர்நாடக இசை)
கோப்பாய்- வைத்தியலிங்கம் குணசேகரம்(இலக்கியம்), உடுவில்- இராசு புண்ணியம்(தவில்), சங்கானை- செல்லத்துரை சிவசுப்பிரமணியம்(இலக்கியம்), சண்டிலிப்பாய் -  சூசைப்பிள்ளை அகஸ்ரின்(வாத்தியம்), தெல்லிப்பளை- அமரசிங்கம் இராசதுரை(இலக்கியம்)
கரவெட்டி- செல்வி பேரின்பநாயகி சிவகுரு(நடனம்), பருத்துறை- காத்தமுத்து அமிர்தலிங்கம்(வாத்தியம்), மருதங்கேணி- கதிர்காமு வல்லிபுரம்(கூத்து), தென்மராட்சி- பொன்னையா இராசகுலசிங்கம்(ஓவியம்) ஆகி ய மூத்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.