வணக்கம்

சனி, 30 ஜூலை, 2016

இளைஞர் பெண்ணொருவருக்கு பலாத்கார முத்தம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்த பெண்ணொருவருக்கு பலாத்காரமாக முத்தமிட்டுள்ளார்.
அதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தெல்லிப்பளை பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து முத்தமிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான்
 உத்தரவிட்டுள்ளார்
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,
தெல்லிப்பளை மணல் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை பெண்ணொருவர் தனிமையில் இருந்த வேளை வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் அந்த பெண்ணுக்கு பலாத்காரமாக முத்தமிட்டு விட்டு வீட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் முத்தம் கொடுத்தமை தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை முத்தம் கொடுத்த இளைஞரை கைதுசெய்து , மல்லாகம் மாவட்ட பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் பதில் நீதிவான் என்.தம்பிமுத்து முன்னிலையில் முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து நீதிவான் முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் பிரதி சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனவும் உத்தரவிட்டமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>


>

திங்கள், 25 ஜூலை, 2016

முதல் முதலாக ஐரோப்பாவில் சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய த்தில் தீமிதியுப்பு!

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது.
இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து
 கொண்டனர்.
அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 20 ஜூலை, 2016

தொலைபேசிகளை திருடிய இருவர்கந்தளாயில் கைது!

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டியிலிருந்து அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், இரு இளைஞர்களை, நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்துள்ளதாக கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று, அலைபேசி திருடப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, 19 மற்றும் 21 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.
தொலைதொலைபேசியின் இரகசிய இலக்கத்தைக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணையின் பிரகாரம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 19 ஜூலை, 2016

அணையாமல் 1,000 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கோயில்!

உப்பிலிருந்து ஏ.ஸி வரை நம் வாழ்க்கையில் உபயோகிக்கும் பல பொருட்களில் டாடா என்ற பெயரும் கோத்ரேஜ் என்ற பெயரும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால், இதன் உரிமையாளர்கள்
 இந்தியர்கள் அல்ல.
இந்திய தேசிய காங்கிரஸை அமைத்தவர்களில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் இருவரும் ஆங்கிலேயர்கள். ஆனால் தாதாபாய் நௌரோஜி ஆங்கிலேயரும் அல்ல இந்தியரும் அல்ல, அவர் ஒரு பார்ஸி.
ஜவஹர்லால் நேருவின் மருமகன் ஃபெரோஸ் காந்தி அவரும் இந்தியர் அல்ல. ஆனால், இவர்கள் நம் இந்திய அரசியல் பொருளாதாரத்தில் கலந்தவர்கள். இவர்கள் பார்ஸி இனத்தவர்கள். இவர்கள்
பாரசீகம் என்று வரலாற்றில் சொல்லப்படும் நாடான ஈரானிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வந்தவர்கள். ஈரான் நாட்டின் ஆதிகால மக்கள் பார்ஸி இன மக்கள்.
உலகின் பழைமையான இனங்களில் ஒன்று பார்ஸி. ஈராக் பகுதிகள். ஜொராஷ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களை ஜொராஷ்ட்ரியர்கள் என்றும் அழைக்கின்றனர். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன், ஈரானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பார்ஸிகள் புலம் பெயர்ந்தனர். அப்படி அவர்கள் புலம் பெயர்ந்த போது, நடந்ததாக சொல்லப்படும் சுவாரஸ்யமான கதை
 ஒன்று உண்டு.
அப்போது, குஜராத்தை ஆட்சி செய்த ஜாதவ் ரானா என்ற மன்னர், அவர்களுக்கு தனது தேசத்தில் புகலிடம் அளிக்க விரும்பவில்லை. ஈரானில் இருந்து அகதிகளாக வெளியேறி குஜராத்தை அடைந்த ஜொராஷ்ட்ரியர்கள், தஞ்சம் கேட்டு மன்னர் ஜாதவ் ரானாவுக்குத் தகவல் அனுப்பினர். அவர் ஒரு பாத்திரத்தில் பாலைக் கொடுத்து அனுப்பி, இங்கு மக்கள் தொகை அதிகம் என்பதால் இங்கே இடம் இல்லை என்ற தகவலையும் 
அனுப்பினார்.
ஜொராஷ்ட்ரிய தலைவர், தனது பையில் இருந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்து அந்தப் பாலில் போட்டு மன்னருக்கே அதை அனுப்பிவைத்தார். பாலில் சர்க்கரை சேருவதற்கு நிச்சயம் இடம் இருக்கத்தானே செய்யும்!
இவர்களது ஜொராஸ்ட்ரிய மதம் ஜொராஸ்டார் என்ற ஞானியால் தோற்றுவிக்கப்பட்டது. ஜொராஸ்டார் இன்றைய வடக்கு
 ஈரானில் பிறந்தவர்
 என்கின்றனர். இவர் தனது 40-வது வயதில் வட கிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரைச் சந்தித்து, தனது மதக்கோட்பாடுகளை அவருக்கு விளக்கி, மன்னரை தனது சமயத்துக்கு மாற்றினார். இதன் காரணமாக, ஜொராஷ்ட்ரிய மதம் நாட்டின் மதமாக
 வளர்ந்து இருக்கிறது.
உலகில் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவரது பெயர் ‘அஹூரா மாஜ்டா” என்கிறார் ஜொராஸ்டார். அதன்பொருள் மெய் அறிவுகொண்ட கடவுள் என்பதாகும். கடவுளைப் போலவே இந்த உலகில் தீமையும் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதன் வடிவம் அங்ரா மைன்யு. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே நமது வாழ்க்கை. அதற்கான போராட்டக் களம்தான் இந்த பூமி. இதில் நன்மை எது தீமை எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியவன் மனிதனே.
நன்மைதான் எப்போதும் வெல்லும் என்பதை மனிதன் உணர வேண்டும் என்பதையே ஜொராஷ்ட்ரியம் விளக்குகிறது. இந்த மதத்தின் புனித நூல் ‘அவஸ்தா’ என்று அழைக்கப்படுகிறது.
ஈரான் மக்கள் அனைவரையும் முஸ்லிமாக மாற்ற முயற்சி நடந்ததால்தான் இவர்கள் இந்தியா வந்தனர். இவர்களின் பழங்கால மத நம்பிக்கையைக் காப்பாற்ற, அங்கிருந்து தப்பித்து இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். 6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது 70,000 பார்சி மக்கள் உலகம் முழுக்க வசிக்கின்றனர். தொழில்துறை மற்றும் வியாபாரத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
“இந்தியாவில் பார்ஸிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அறப் பணி மற்றும் மனித நேயப் பண்புகளில் சிறந்து விளங்குகின்றனர்” என்று மகாத்மா காந்தி பாராட்டி இருக்கிறார். பார்ஸி இன மக்களின் உழைப்பு, பம்பாய் நகரின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது.
தாதாபாய் நௌரோஜி மற்றும் பிகாஜி காமா போன்றோர், இந்திய சுதந்திர இயக்கத்தில் இருந்த முக்கியமான பார்ஸியர்கள். இயற்பியல் வல்லுநர் ஹோமி பாபா, பாடகர் ஃப்ரெட்டி மெர்குரி, இசை இயக்குநர் ஜுபின் மேத்தா, இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்‌ஷா, தொழில் அதிபர்கள் டாட்டா, கோத்ரெஜ் மற்றும் வாடியா ஆகியோர் பார்ஸிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலம் முதல் தற்போது வரை மும்பையை வர்த்தக தலைநகராக உருவாக்கியதில் பார்சி மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
சரி, பார்ஸி மதம் என்ன சொல்கிறது?
பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காகவே, இவர்களை ‘பார்ஸிகள்’ என்று அழைக்கின்றனர். புகலிடம் பெற்ற பார்ஸிகள் விவசாயிகளாகவும், நெசவாளிகளாகவும், தச்சுவேலை செய்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கையைத்தொடங்கினர்.
பார்ஸிகள் நெருப்பை வணங்கக் கூடியவர்கள். நெருப்பே அவர்களின் ஆதி தெய்வம் என்ற நம்பிக்கைகொண்டவர்கள். அவர்கள் எங்கே சென்றாலும் நெருப்பை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்புக்காக அவர்கள் குஜராத்தில் ஒரு கோயில் கட்டினர். அந்தக் கோயிலில் உள்ள நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. இன்று, உலகின் எந்த நாடுகளில் பார்ஸிகள் வசித்தாலும் ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்பின் ஒரு சுடரை தங்களுடன் எடுத்துச் சென்று அதையே வழிபடுகின்றனர்.
சென்னையிலும்கூட அக்னி கோயில் எனப்படும் பார்ஸிகளின் நெருப்புக் கோயில் ராயபுரத்தில் இருக்கிறது. இந்த அக்னி கோயிலின் நூற்றாண்டு விழா, கடந்த மாதம் நடந்தது. 1795-ம் ஆண்டில் பார்ஸி இனத்தவர் சென்னையில் காலடி வைத்தனர். சென்னையில் இன்று 300 பார்ஸி குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.
சென்னையில் நெருப்புக் கோயில் உருவாக்கப்பட்டதற்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது. அதாவது, சென்னையில் வாழ்ந்த பார்ஸியான பிரோஜ் கிளப்வாலா என்பவர், தனது மகன் இறந்தபோது சடங்கு செய்வதற்காக அக்னி கோயில் இல்லையே என வருந்தினர். தனது சொந்தப் பணத்தில் ஓர் இடத்தை வாங்கி அதில் நெருப்புக் கோயில் கட்டி, அதை பார்ஸி இன மக்களுக்கு அர்ப்பணம் செய்து இருக்கிறார்.
இந்த நெருப்புக் கோயிலில் 100 ஆண்டுகளாக நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுமட்டும்தான்! பொமி என்பவர் இதன் மதகுருவாக தற்போது இருக்கிறார்.
சூரத்தில், பார்ஸி இனத்தவரின் சில நெருப்பு கோயில்கள் உள்ளன. அவற்றில் பார்ஸி அகியாரி மிகவும் முக்கியமான கோயிலாகும். புனித தீபம் எரிந்து கொண்டிருக்கும் இந்த கோயிலில் பார்ஸி அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
பார்ஸி இனத்தவர்கள் தங்கள் இனத்துக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்வார்கள். வேற்று மதத்தினரில் திருமணம் செய்து கொள்வதில்லை. இதனால் அவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வருவதாகவும் கூறுகின்றனர். இவர்களது திருமணம் மற்றும் அது குறித்தான சடங்குகளை சூரியன் மறைந்த பிறகு, மகிழ்ச்சியான விழாவாக கொண்டாடுகிறார்கள். விருந்து கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் எல்லாவாற்றையும் சிறப்பாகக் கொண்டாடி மணமகன், மணமகளுக்கு மேற்கத்திய பாணியில் முத்தம் கொடுப்பதோடு விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
பார்ஸி இனத்தவர்களின் சமூகப் பழக்கங்களில் மிகவும் முக்கியமான ஒன்று, அவர்கள் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதில்லை எரிப்பதுமில்லை. அமைதி கோபுரம் எனும் (டவர் ஆஃப் சைலன்ஸ் ) உயரமான வட்ட வடிவ கோபுரத்துக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச்சென்று கழுகு, காகம் உள்ளிட்ட பறவைகளுக்கு இரையாக்கி விடுகின்றனர். அதன் பின்னர் ஒரு வாரம் பத்து நாள் கழித்து அவரது எலும்புகளை எடுத்து வந்து மணலில் புதைத்து விடுகின்றனர்.
இறந்தவர்களுக்குரிய இந்த சடங்குகளைச் செய்யும் போதெல்லாம் அவர்களது நெருப்புக் கடவுளின் தீயை எடுத்துவைத்து, சந்தனப்பத்திகளின் வாசனைப் புகையுடன் இந்த சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள்.
குஜராத்திலும் ,மும்பையிலும், இந்த அமைதி கோபுரம் இருக்கின்றது. ஆனால், இப்போதெல்லாம் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதால் இந்த சடங்கை நிறைவேற்றுதில் சில சிரமங்களும் இருந்து வருகின்றன. இந்த வகை கழுகுகள் குறைந்து போனதுக்குக் காரணம் கால்நடைகளுக்கு வழங்கப்படும் ரசாயனம் கலக்கப்பட்ட தீவனங்கள் என்பதுதான் வேதனையான ஒரு உண்மை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 14 ஜூலை, 2016

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை எதிர்வரும் வியாழன்  (15.7.2016) ஆம் திகதி 
ஆரம்பிக்கப்படவுள்ளது.
இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும்.
இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஊடாக சேவையில் ஈடுபடும்.
இச் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை யாழ். மத்திய பஸ் நிலையத்திலும் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலும் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சாலை முகாமையாளர் 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 9 ஜூலை, 2016

நாவலப்பிட்டியாவில் கத்திக்குத்து: 6 பேர் காயம்!

மஸ்கெலியாவில் பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அறுவரும், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்படடுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ராமசாமி ரவிக்குமார் (32) என்பவரே நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்த, பிரேமகாந்தன்(28), கீர்த்திஸ்ரீ(22), சுசிகலா (45) ஆதி செட்டி(41), பிரதீபன்(28) ஆகியோரே மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 8 ஜூலை, 2016

சொகுசு கார்வைத்தியசாலை முன்பாக விபத்து!

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக நேற்று.07.07.2016-  இடம்பெற்ற விபத்தில் சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது
வைத்தியசாலையின் முன்பாக முன்னால் சென்ற படி ரக வாகனம் ஒன்று  திடீர் என்று நிறுத்தியதன் காரணமாக பின்னால் வந்த கார் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள்  ஏற்படவில்லை.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்- 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 2 ஜூலை, 2016

சிவப்பு சந்தன மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது .

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு சந்தன மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி கடற்படை முகாமிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 179 சந்தன கட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தன கட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்ட லொறி கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட லொறியில் இருந்த மேலும் நான்கு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சந்தன மரக்குற்றிகளின் பெறுமதி இதுவரை கணிக்கப்படவில்லை என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>