வணக்கம்

திங்கள், 27 ஜூன், 2016

வளலாய் பகுதி கடற்கரையில் கஞ்சா மீட்பு! இருவர் கைது

யாழ். அச்சுவேலி- வளலாய் பகுதியில் உள்ள அக்கரை என்ற கிராமத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் கஞ்சா கொண்டு வந்த 2 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் - அக்கரை கிராமத்திற்கு கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுகின்றமை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, அந்த பகுதியில் நள்ளிரவு இரகசியமாக சென்று தங்கிய விசேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் கஞ்சா கொண்டு வரப்பட்ட படகை கடற்கரையில் வைத்தே கைது செய்துள்ளனர்.
இதன்போது கஞ்சாவை கடத்தி வந்த மாதகல், அக்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்ப ட்டுள்ளனர்..இந்நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா கேரள கஞ்சா எனவும் அது 100 கிலோ இருந்ததாகவும் அதிரடிப்படையினர் கூறியிருக்கின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 25 ஜூன், 2016

வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி


யாழ். ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி!- மயங்கிய பெண்
யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் உள்ள மின்மாற்றியின் மேலே உள்ள உயரழுத்த மின் கம்பி ஒன்று இன்று மாலை 3.45 மணியளவில் அறுந்து நடுத்தெருவில் விழுந்தது.
நிலத்தில் கம்பி அறுந்து விழுந்தவுடன் பாரிய சத்தமும், தீப்பொறிகளும் எழுந்தன.
அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் பெண்ணொருவர் இதனைப் பார்த்து திடீரென அதிர்ச்சி அடைந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மின் விபத்தை அடுத்து சுமார் 20 நிமிடங்கள் குறித்த பாதை பொலிஸாரினால் தடை செய்யப்பட்டு இருந்தது.
உடனடியாக மின்சார சபையினர் சம்பவ இடத்துக்கு வந்து மின் இணைப்பைத் துண்டித்து திருத்த வேலையில் ஈடுபட்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


வியாழன், 23 ஜூன், 2016

யாழ் கோப்பாயில் இளைஞன் மீது வாள்வெட்டு!!!

வீதியில் நின்ற இளைஞனை முகத்தினை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இரு நபர்கள் வாளினால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதில் கோப்பாயை சேர்ந்த செல்வராசா மதுசன் (வயது என்ற இளைஞனே படுகாயமடைந்தவராவார்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு 
பதியப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 21 ஜூன், 2016

விமானத்திலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்த பயணி!

துபாய் நாட்டிலிருந்து பிரித்தானியா நாட்டிற்கு பறந்த விமானத்தில் பயணி ஒருவர் உடநலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு எமிரேட்ஸ் என்ற விமானம் இன்று காலை பிரித்தானியா நாட்டிற்கு புறப்பட்டுள்ளது.
விமானத்தில் கிரேட்டர் மான்செஸ்ட்டர் நகருக்கு பயணமான முதியவர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக 
கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில் விமானம் தரையிறங்கியுள்ளது. தயாராக இருந்த மருத்துவர்கள் பயணியை விரைந்து வந்து சோதனை செய்துள்ளனர்.
ஆனால், விமானம் பறந்தபோதே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக
 கூறப்படுகிறது.
இந்த உயிரிழப்பு விவாகரத்தில் சதி வேலை எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதே போல், பயணி விமானத்திலேயே உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம், இந்த உயிரிழப்பில் விமான நிறுவனத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை என தகவல் வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 20 ஜூன், 2016

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!!!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 11ம் திருவிழா அன்று ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய கருடன் பறவை ஆலயத்துக்கு மேலாக காட்சி கொடுத்தமை அங்கிருந்த பக்தர்களின் மனதில் ஆனந்தத்தை ஏற்ப்படுத்தியது .11ம் திருவிழா அன்றுமதியம் இந்த சம்பவம் நிகழ்துள்ளது.
ஆலயத்தின் வரலாற்றில் கருடனும் பாப்பும் தொடர்பு பட்டுள்ள நிலையில் இன்று இந்த கருட பறவையின் தரிசனம் கிடைத்தமையை அம்பாளின் அற்புதம் என அடியார்கள் தெரிவித்தனர்..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திங்கள், 13 ஜூன், 2016

மனிதன் 325 வருடத்திற்க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உருவ மற்றம்

சிலவேளைகளில்  மனிதன் 325 வருடத்திற்க்கு பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உருவங்கள் மாற தொடங்குவதன் அறிகுறிகள் உள்ளதாக 
ஓர் நிழல் படம் இணைப்பு கவனம் இதை உறுதியாக நம்மமுடியது?
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 8 ஜூன், 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத்தாள்களின் மாதிரி வினாக்கள்

 
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத்தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 5 ஜூன், 2016

உங்கள் பேஸ்புக்கில் விரைவில் அட்டகாசமான புதிய வசதிகள் ?

இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன.
இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும். ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது
இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது.
Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும்.
இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.
இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித 
ஐயமும் இல்லை.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 3 ஜூன், 2016

குடியிருக்கும் தமிழ் மக்களை நாவற்குழியில் அச்சுறுத்துவதாக முறைப்பாடு!

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தில் 30 ஏக்கர் நிலத்தில் 200 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் போர் காரணமாக வீடுகள்
 அழிக்கப்பட்டன.
மீண்டும் மீதமாக இருந்த 60 ஏக்கர்நிலத்தில், 30 ஏக்கர் நிலத்தில் மக்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போது மீதமாக உள்ள 30 ஏக்கர் நிலத்தில் காணி இல்லாத வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 17 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடியேறி வாழ்ந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் குறித்த நிலத்தில் ஒரு பகுதி சிங்கள குடியேற்றத்திற்காகவும், மற்றொரு பகுதி இராணுவத்தினருக்கான குடியிருப்பு அமைப்பதற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்படி நிலத்திற்கு உரிமை கொண்டாடி வரும் படையினர் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு ஒன்றை நிறுவ முயற்சித்து 
வருகின்றனர்.
குறிப்பாக இந்த நிலத்தில் வாழ் ந்து வந்த 17 குடும்பங்களை சேர்ந்த மக்களை படையினர் கட்டாயமாக வெளியேற்றிருக்கின்றனர்.
இது குறித்து மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் காணி இல்லாமையினால் நாங்கள் இந்த இடத்தில் குடியேறினோம்.
சிலர் அண்மையில் வந்து இங்கே குடியேறினாலும் கடந்த 1991ம் ஆண்டு தொடக்கம் இந்த இடத்தில் வாழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் படையினர் இங்கே இருக்க முடியாது. வீடுகளை அகற்றுங்கள் என கூறி வெளியேற்றி விட்டார்கள்.
இந்த விடயத்தை நாங்கள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மகளிர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் பேசியிருக்கின்றோம்.
மேலும் இந்த விடயத்தை நாங்கள் படையினருக்கு கூறி நாங்கள் அவர்களுடன் கேட்டு செய்கிறோம் என கேட்ட போதும் எங்களுக்கு படையினர் அவகாசம் தரவில்லை என மக்கள் 
கூ றுகின்றனர்.
இந்நிலையில் மேற்படி பகுதியில் ஒரு குடும்பம் தற்போதும் இருந்து கொண்டிருக்கின்றது. அவர்களை வீட்டுக்கு கூரை போட கூடாது என படையினர் தடுத்திருக்கும் நிலையில் அவர்கள் வெறும் கட்டிடத்திற்குள் ஒரு மூலையில் தறப்பாள்களை போட்டு அதற்குள் 
குடியிருக்கின்றார்கள்.
மேலும் அந்த இடத்தை விட்டுவெளியேறினால் தமக்கு வேறு இடம் இல்லை எனவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த மாதம் 9ம் திகதி தனது செயலாளர் ஊடாக தேசிய வீடமைப்பு அதிகார சபை, யாழ்.மாவட்ட வீடமைப்பு செயலகம், சாவகச்சேரி பிரதேச செயலர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக யாழ்.மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் காணியற்ற மக்களுக்கு வழங்குவதற்கு போதியளவு அரச நிலம் இல்லை.
இந்நிலையில் நாவற்குழி பகுதியில் காணி இல்லாத மக்களுக்கு வழங்குவதற்கும் அந்த மக்கள் குடியிருப்பதற்கும் படையினர் மற்றும் தேசிய வீடமைப்பு திட்ட அதிகாரிகள் பெரும் தடையாக உள்ளது டன், வீடுகளை அழித்தும் கைது செய்து பொலிஸில் ஒப்படைப்போம் என மக்களை அச்சுறுத்துவதாகவும் மக்கள் எமக்கு முறைப்பாடுகளை செய்திருக்கின்றார்கள்.
எனவே அந்தப் பகுதியில் காணிகள் இருப்பின் அதனை அப்பகுதியில் வாழ்கின்ற ஏழை மக்களுக்கு வழங்கி மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும், வேறு போலியான எந்த நடவடிக்கைகளுக்கும் வழங்க வேண்டாம் எனவும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் கேட்டிருக்கின்றார்.
இந்நிலையிலும் 17 குடும்பங்கள் வாழ்ந்த அந்த இடத்தில் 1 குடும்பம் தவிர மற்றய 16 குடும்பங்களையும் அங்கிருந்து படையினர் மற்றும் வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் வெளியேற்றியிருக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>