வணக்கம்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

600 மில்லியன் ரூபா வரை நட்டம் கடந்த வாரம் மின் தடையால் -

கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக சுமார் 600 மில்லியன் ரூபாய் வரையில் நட்டம்  ஏற்பட்டுள்ளதாக 
மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையினால் மின்சார தடை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இந்த மின்சாரத்தடை ஏற்பட்டது.நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமையன்று ஏற்பட்ட மின் தடை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு நீடித்தது
.இதனையடுத்து வெள்ளிக்கிழமையும் சில மணித்தியாலங்களுக்கு பல இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டிருந்தது. 
இந்நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கு இடம்மளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

யாழ் நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்புமரண தண்டனை:?

மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு
 எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) அவர்களை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மதுபோதையில் தினமும் மனைவியை துன்புறுத்தி வந்த கணவர் சம்பவ தினத்தன்று ஆத்திரம் தாங்க முடியாமல், தனது மனைவியை கோடரியால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததுடன், பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
விளக்கமறியலில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில்
 இடம்பெற்று வந்தது.
மேற்படி வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

திடீரென யாழில் அதிகரித்த வெப்பநிலை: மக்கள் சிரமம்

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியல்
 அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின்  பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம,
 புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாந்தோட்டை, கட்டுகஸ்தோட்டை, மன்னார், மற்றும் திருகோணமலையில் வழக்கத்தை விடவும், 3 பாகை செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை காணப்பட்டது.
இதனை விட இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்தை விட சுமார் 2, 3 பாகை செல்சியஸ் அதிகமாகவே காணப்பட்டதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இதனால்  பொதுமக்கள் நேற்றைய தினம் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் வெப்பமான காலநிலை மாற்றம்
இலங்கையின் வெப்பமான காலநிலை நிலவுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் இந்த காலநிலை தாக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை பொழுதுகளில் கொழும்பில் வெப்பமான காலநிலை உணரப்பட்டது.
காலநிலை அவதான மையத்தின் தகவல்படி யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, கட்டுகஸ்தொட்டை, மன்னார், திருகோணமலை, அனுரதபுரம் நுவரெலியா, புத்தளம்,ரத்மலானை, வவுனியா ஆகிய இடங்களில் இந்த காலநிலை மாற்ற தாக்கம் உணரப்படுகிறது.
இதேவேளை களுத்துறை பகுதிகளில் இரவில்மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான மையம் 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 22 பிப்ரவரி, 2016

குடிபோதையினால் பறிபோன உயிர்?

 கினிகத்ஹேன  பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குடிபோதையில்  20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்  கினிகத்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். மேலும் இவர்  கண்டி - ஹட்டன் இடையிலான பயணிகள் பேரூந்தின் ஓட்டுனராக பணி 
புரிந்துள்ளார்.
நேற்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் 20 அடி பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதார். அவரின்  உடலை பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார்  இன்று காலை கண்டுபிடித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 பிப்ரவரி, 2016

விபத்தில் விடுமுறைக்காக வந்திருந்திருந்த 27 வயது இளைஞன் பலி!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை பழைய பிரதான வீதியில் 5ம் கட்டை ஆரையம்பதி -மண்முனை சந்தியில் நேற்று 15 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக இலங்கை 
வந்திருந்திருந்த
 மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு பூவரசன்குடா வீதியைச் சேர்ந்த புண்ணியமூரத்தி தயாபரன் 27வயது இளைஞன் ஸ்தலத்தில் தலை இரண்டாக சிதறி உயிரழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.
மேற்படி விபத்து தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இவ் விபத்தில் பலியான புண்ணியமூரத்தி தயாபரன் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தியதாக பொலிசாரின் 
ஆரம்ப கட்ட 
விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், குடி போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குறித்த இளைஞன் அவ் வழியால் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஒல்லிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் 
முஹம்மது முஸ்தபா 
முஹம்மது ரஊப்தீன் வயது 44 சைக்கிளில் மோதி அதன் வேகத்தில் அவ் வீதியின் முன்னாலுள்ள காணி ஒன்றியில் வேலிக் கட்டை கம்பியில் மோதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் செலுத்தியவருடன் வந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 
தவராசா புஷ்பராசா (வயது 25) 
என்பவரும், துவிச்சக்கர வண்டியில் வந்த முஹம்மட் ரஊப்தீன் வயது 42 ஆகியோரும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், விபத்தில் சேதமடைந்த இரு வாகனங்களும் காத்தான்குடி பொலிஸ் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
 தெரிவித்தார்.
இதே வேளை இன்று 16 செவ்வாய்கிழமை மதியம் குறித்தி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.ரத்நாயக்க, காத்தான்குடி 
பொலிஸ் 
நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர, அதன் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குழு இப் விபத்து தொடரப்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



மிண்டும் வடக்கில் வீரர்களின் போர் ஆரம்பமாகிறது!


வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் பெரும் துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் 9.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
16 ஆவது தடவையாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குகின்றமை
 குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை காலமும் நடைபெற்று முடிந்த 15 ந்து போட்டிகளில் இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் ஏழு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி சம நிலையில் 
முடிவடைந்துள்ளன.
ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினர் கே.பிரசாந் தலைமையிலும் மகாஜனாக் கல்லூரி அணியினர் கே.பிரணவன் தலைமையிலும் களமிறங்குகின்றார்கள்.
இரு அணிகளும் இந்தாண்டு தலா ஐந்து போட்டிகளில் மோதிக் கொண்டுள்ளன. இதில் மகாஜனாக் கல்லூரி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியும் தாம் மோதிய போட்டிகள் நான்கில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியை சம 
நிலைப்படுத்தியும் உள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஐந்து இலட்சம் யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலையில்!

சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக்காக ஐந்து இலட்சம் யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும், பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாரியளவில் வாகனங்கள் சிவனொளி அடவிப் பகுதிக்கு வந்திருப்பதோடு, நல்லதண்ணியிலிருந்து மவுஸ்ஸாகெல வரையான 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலை உச்சிக்கு செல்லும் போது அதிகபடியான யாத்திரிகர்களின் நெரிசல் காரணமாக மலைக்கு செல்ல முடியாமல் திரும்புவதாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் தெரிவித்துள்ளார்.
யாத்திரிகர்கள் பலர் இசைக் கருவிகள் சகிதம் வந்திருப்பதனால் அவற்றை மஸ்கெலியா பொலிஸ் பாதைத் தடையில் விட்டு செல்ல பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
அத்தோடு மவுஸ்ஸாகெல, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க வேண்டாம் என தொடர்ச்சியாக யாத்திரிகர்களுக்கு பொலிஸாரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள், மதுபானம் மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை யாத்திரிகர்கள் தம்முடன் எடுத்துவரக்கூடாது என நல்லதண்ணி பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 பிப்ரவரி, 2016

பேருந்துக்களின் சாரதிகள் போட்டி போட்டோடுவதால் உயிரைக் கையில் பிடிக்கும் பயணிகள்

போட்டி போட்டோடும் பேருந்துக்களும் உயிரைக் கையில் பிடிக்கும் மக்களும்.
மனிதன் போக்குவரத்தினை ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரை தனது அறிவிற்கும், தொழிநுட்பத்திற்கும் ஏற்ப வளர்த்து வந்துள்ள படிமுறைகளையும், வளர்ச்சியினையும் கற்றும் அறிந்தும் இருக்கின்றோம். அதன் அடிப்படையில் மனித வாழ்க்கையில் இன்று போக்குவரத்தானது துரித வளர்ச்சி அடைந்து காணப்படுவதோடு, நினைத்த மாத்திரத்தில் குறித்த இடத்தினை குறிப்பிட்ட மணி நேரத்தில் அச்சொட்டாக அடையவும் முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க இதனூடாக தற்செயலான விபத்துக்களும், சேதங்களும் ஏற்படுவதும் மறுக்க முடியாதது. இருந்தும் சில விபத்துக்கள் சாரதிகளுடைய, பயணிகளுடைய, பாதசாரிகளுடைய கவனக்குறைவின் காரணமாக இடம் பெறுவதும் உண்மை. அந்தவகையில் சில அரச பேருந்துச் சாரதிகளும், 
சில தனியார்
 பேருந்துச் சாரதிகளும் கூடுதலான பயணிகளை தங்களின் பேருந்துக்களில் ஏற்றுவதை நோக்காகக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திச் செல்ல எத்தனித்து மிக அதிவேகமாக பேருந்துக்களை இயக்குவதோடு, வீதி விதி முறைகளையும் கடைப்பிடிப்பதில் தவறி 
விடுகின்றனர்.
இதன் பொருட்டு வீதியில் இருக்கின்ற சில பயணிகளை ஏற்றிச் செல்லவும் தவறுவதுடன் முன்னால் வரும் வாகனங்களுக்கும், பின்னால் வரும் வாகனங்களுக்கும் அவை செல்வதற்கான இடைவெளியினை சில சமயங்களில் கொடுக்க சில சாரதிகள் மறுக்கின்றனர்.
மேலும் ஏனைய பேருந்துக்களோடு போட்டி போட்டு 
அதிவேகமாக 
சில சாரதிகள் பேருந்துக்களைச் செலுத்திச் செல்வதனால் பேருந்துக்குள் இருக்கும் பயணிகள் எந்த நேரத்திலாவது விபத்து நடந்து விடுமோ எனும் அச்சத்தினால் தங்களின் உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு எப்போது தாங்கள் அடையும் இடம் வருகிறது எனப் பார்த்துக்கொண்டு இருப்பதனைக் காணமுடிகின்றது. இதனால் பயணிகளுக்கும் சில சாரதிகளுக்குமி;டையே முரண்பாடுகளும் ஏற்படுவதுண்டு.
சுpல பயணிகள் அவசர வேலையின் நிமிர்த்தம் பேருந்துக்காக காத்திருந்து அதில் செல்ல முற்படும் போது அவர்களை ஏற்றாமல் சில சாரதிகள் செல்வதோடு, பேருந்தினை ஓரம்கட்டாமல் நடு வீதியில் 
சில பயணிகளை 
இறக்கிவிட்டு செல்கின்றனர் இதனால் பின்னால் வரும் வாகனங்கள் பயணிகளை மோதவும் வழியமைக்கின்றனர். இதன் காரணம் பேருந்தை நிறுத்தி குறிப்பிட்ட சில பயணிகளை ஏற்றும் போது ஏனைய பேருந்துக்கள் முந்திச் சென்று கூடுதலான பயணிகளை ஏற்றிச் சென்றுவிடும் என்ற நோக்கமே எனலாம்;.
கூடுதலான மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளை, சேவைகளை பேருந்துக்கள் மூலமே பயணித்து நிறைவேற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமின்றி தாங்கள் போகும் பயணத்திற்கும், தங்களுக்கும் எந்த வித பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளமை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இன்றைய நிலையில் பல செய்திகளை அறிந்தும், கேட்டும், பார்த்தும் இருக்கின்றோம் அவற்றில் கூடுதலான விபத்துக்கள் வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறிய விபத்துக்களாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 3ம் திகதி இ.போ.ச பேருந்தும், தனியார் பேருந்தும் பலாலி வீதியில் போட்டி போட்டு; ஓடியதில் தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியை மோதி அப்பாவி ஆறு வயது மாணவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தமையை ஊடகங்களினுடாக சான்று பகிர்கின்றமை ஒரு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். இது போன்று பல சம்பவங்களை கூற முடியும்.
காலையில் எழுந்து உற்சாகத்துடன் தங்கள் கடமைகளுக்காக செல்வபர்கள் தங்களின், சாரதிகளின், பாதசாரிகளின் கவனக்குறைவின் காரணமாக சாவினை வரவழைக்கின்றமையினையும் உணர முடிகின்றது. சில சாரதிகள் தாங்களின் சுய நலனுக்காக அப்பாவி உயிர்கள் பறிபோவதனை 
யாராலும் 
ஏற்றுக்கொள்ள முடியாது இவர்ளை நம்பி போக்குவரத்துச் செய்யும் பெரியவர்கள், சிறுவர்கள், சாதாரன மக்களின் நிலை என்ன? என கேள்வி எழுகின்றது. இவ்வாறு சில சாரதிகள் செயற்படுவதனால் தாங்கள் உட்பட ஏனையவர்களும் பாதிப்பை எதிர்நோக்கவேண்டி வரும் என்பதனை அறிந்தவர்களா? இல்லையா?
ஏதிர் காலத்தில் இவற்றை மனதில் கொண்டு சில சாரதிகள் செயற்படாவிடின் இன்னும் பல இழப்புக்களை நாம் சந்திக்க வேண்டி ஏற்படலாம்
சாரதிகளை நம்பியே மக்கள் வீதிகளில் பயணிக்கின்றனர். ஆவர்களை பத்திரமாகப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு 
சாரதிகளின் 
கடமையாகும.; எனவே வேகமாக வாகனங்களை இயக்குவதனை தவிர்ப்பதன் மூலமும். ஈட்டிக்கு போட்டி போட்டு வாகனங்களை இயக்குவதனை தவிர்ப்பதன் மூலமும். வீதி விதி முறைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் பல விபத்துக்களிலிருந்து பல உயிர்களைப் பாதுகாக்கமுடியும் என்பதில்சந்தேகமில்லை. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

அதிகமாக சிறுநீரக நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளுக்கு சுத்தமான நீர் விநியோகம்?

சிறுநீரக நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுத்தமான நீரை விநியோகிப்பது தொடர்பான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஐந்து மாவட்டங்களில் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
07 பில்லியன் ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இதன் முதல் கட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி வெலிகந்த பிரதேச செயலகப் பிரிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

அரசாங்கம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தவறியுள்ளது!!!

வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று தெரிவித்தார்.
இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹீசைன் இதனை தெரிவித்தார்.
மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களானவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது எனவும் தெரிவித்தார்.
நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிறை பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான பிரேரணை நாட்டிற்கு எந்த வகையிலும் அச்சறுத்தலாக அமையாது என அவர் 
உறுதியளித்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இரு தரப்பினராலும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டனர் - ஷெய்ட் அல் ஹுசைன்
இலங்கைக்கான தனது விஜயம் வெற்றியளித்துள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஷெய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்
 குறிப்பிட்டுள்ளார். 
யுத்தத்தின் பின்னரான சூழல் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் தகவலறியும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார். 
அத்துடன், வெள்ளை வேன் கலாசாரம் தற்போது குறைவடைந்துள்ளமை தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக ஷெய்ட் அல் ஹுசைன்
 குறிப்பிட்டுள்ளார். 
மேலும், இம்முறை சுதந்திர தினத்தின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது மிகுந்த சிறந்த விடயம் எனவும், அது நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் எனவம் கூறியுள்ளார். 
இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்புக்களை வழக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். 
இதேவேளை, யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினாலும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை தனது விஜயத்தின் போது கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 
மேலும், வடக்கு கிழக்கு மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெய்ட் அல் ஹுசைன் 
தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




வியாழன், 4 பிப்ரவரி, 2016

போதையில் வாகனம் ஓட்டிய சாரதிக்கு சிறை தண்டனை???

யாழ் மல்லாகம் நீதிபதி மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்தும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.
மானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து நீதவான் அதிகூடிய தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 
மூவருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார். அத்துடன் மூவரையும் 50 மணித்தியாலங்கள் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்குட்படுத்துமாறு சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது நீதவான் அபராதத்துடன் கூடிய சமுதாயம் சார்சீர் திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு
 உத்தரவிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>