வணக்கம்

வியாழன், 28 ஏப்ரல், 2016

முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இணையத்தின் ஊடாக சமூக வலையத்தளங்களில் இவ்வாறு ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து குறித்த நபர் நாடு திரும்பிய போது இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முகநூல் ஊடாக இந்த நபர் ஜனாதிபதியை கொலை செய்ய போவதாக எச்சரித்துள்ளார்.
புலனாய்வுப் பிரவினர் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதனை எதிர்த்து ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

நிதிபதி இஞ்செழியன் புலம்யெர்தமிழ்களை எச்சரிக்கிறார்

வெளிநாட்டில் வாழும் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக பணத்தை அனுப்புகிறீர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கின்றீர்கள்.அவரகளும் நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு எந்த கஸ்ரமும் உணராதவர்களாய் வாழ்கின்றனர்…
இவர்களின் எதிர்காலம் உங்களால்தான் அழிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
வேலை தேடாமல் சோம்பேறிகளாக வாழ்வது உங்களுக்கு தெரியுமா?
ரவுடிதனம் பண்றது வீதியில் உங்களுக்கு தெரியுமா ??
சிறுவயதில் போதைக்கு அடிமையாகுவது உங்களுக்கு தெரியுமா?
இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் அனுப்பும் பணம்தான்..!
 அவர்கள் என்ன செய்கின்றனர் என்று உங்களால் கண்காணிக்க
 முடியுமா???
நம் சமுதாயம் சீர்கெடாமல் இருக்க வேண்டுமானால் வளர்ந்துவரும் இளைஞர் யுவதிகள்தான் வழி நடத்த வேண்டியவர்கள்.
அவர்களே சமுகத்தை சீர்கெடுத்தால் எப்படி?
நாமும் ஒரு காரணமாக இருக்க கூடாது..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 20 ஏப்ரல், 2016

குவியும் பாராட்டுக்கள் புதிய பொலிஸ்மா அதிபருக்கு !!!

புதிய பொலிஸ்மா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
நாட்டில் பெரும்பான்மை மக்களின் நல்ல அபிப்பிராயம் 
பெற்ற ஒருவர் 
பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக பொதுமக்களின் சிவில் அமைப்புகள் பலவும் புதிய பொலிஸ்மா அதிபருக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.
அத்துடன் இலங்கை வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் பணியாற்றி அங்குள்ள பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றவரும், மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை முதல்தடவையாகும்.
அதன் காரணமாக மூவின மக்களினதும் பாராட்டுக்கள், வாழ்த்துக்களும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் ஏராளமானவர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பூஜித் ஜயசுந்தரவுக்குத் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

தாயாகப்பெருமைபேசும் இந்தியப்பட்டிமன்றம்

இலங்கைத்தமிழர்களே! இனியாவது புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் யார் உங்களில் வேர் எது. வெளியிலிருந்து வந்தவர்கள் சொல்லித்தான் நாம் யார் என்று அறியவேண்டி உள்ளதே.
ஓஸ்லோவில் சில வருடங்களுக்கு முன்னர் பொறுக்கிப் பாப்பணி பாதிரியாக வந்தான் பெயர் செல்லப்பா. இந்தச் செம்மரியை இங்குள்ள பல கிறிஸ்தவப்பிரிவில் ஒரு குழு அழைத்தது. அது யேசுவைக் கடவுளாக ஏற்று சிவஞானபோதத்துக்கு விளக்கம் சொல்லுதாம் . அங்கே
 இந்த நாய் உள்ளே
 காவியும் வெளியில் லே எனும் கிறிஸ்தவபாதிரி உடையும் அணிந்திருந்தது. ஆறுமுகநாவலர்தான் பைபிளை அதாவது விவிலியத்தை முதலில் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்று செல்ல. செல்லப்பா என்ற செம்மரி இல்லை அது பிழை, காட்டுங்கள் என்று வாதாடியது. இது இந்துக்களுக்கும் நேர்மையாக இருக்காது கிறிஸ்தவத்துக்கும் நேர்மையாக இருக்காது. இதுக்கு உண்மையும் தெரியாது. காசைக்காட்டியதும் வாலைச் சுருட்டிக் கொண்ட இங்கே வந்துவிட்டது.
இந்தக் கூட்டம் நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயம் நான் தொடக்கிய கோவிலுக்கு அருகில்தான் நடந்து. ஆனால் கோவில் பூசையும் அரிச்சனையும் நடந்தது பணம் கறந்து பெட்டியில் போடும் வேலை கோயிலில். சமயம் அயலில் ஏலத்தில் செல்லப்பா வித்துக் கொண்டிருந்தார். இவற்றைப் பார்க்கும் போது என்னைத்தைச் சொல்ல? செல்லப்பாவை கொல்லப்பா என்பதா? அல்லது கோவிலில் அன்று இருந்தவர்களை கொண்டு வந்து செல்லப்பாவுடன் கட்டி அடிப்பதா?
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 13 ஏப்ரல், 2016

பஸ் நிலையத்தில் களவெடுத்த பெண் 15 நிமிடங்களில் கைது

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் 
கைது செய்தனர்.
புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண், கைப்பையைத் திறந்து பணத்தை
 திருடியுள்ளார்.
அதன் பின்னர், சந்தேகநபரான பெண் தடுமாற்றமடைந்த போது, அங்கு சிவில் உடையில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகநபரான பெண்ணை விசாரணை செய்த போது, பணம் திருடப்பட்டமை 
தெரியவந்தது.
உடனடியாக அவரைக் கைது செய்த பொலிஸார் பணத்தையும் மீட்டனர்.
மேற்படி பெண்ணின் கணவர் திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மின்தடை புத்தாண்டு காலப்பகுதியில் கிடையாது ?

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும் கிடையாது.
மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது என நம்புகின்றோம்.
புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால் மின் தேவை வீழ்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

யாழில் தமிழ் புத்தாண்டன்று சுட்டெரிக்கும் வெயில்???

வெப்பத்தின் கொடுமை இப்பொழுதே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதுவருட தினத்தன்றும், மறுநாளும் தற்போதுள்ள வெப்பநிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று திருநெல்வேலியிலுள்ள 
வளிமண்டலவியல்
 திணைக்களப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறுமழை பெய்ய வாய்ப்புள்ளபோதும், அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் நேற்றுவரை வடக்கு- கிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று நிலவிய நிலையில், நேற்றுப் பிற்பகலிலிலுந்து இடைக்காலப் பருவப் பெயர்ச்சிக் காற்று நிலவுகிறது இதனால் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது மழையின்றி இடி, மின்னல் உருவாக வாய்ப்புள்ளது. அத்தகைய மழை சிறியளிலேயே இருக்கும்.
தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள வெப்பநிலையைவிட பிற மாகாணத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு பிரதேசம் தோறும் மாற்றமடைந்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெப்பம் தற்போதுள்ளதை விட மேலும் அதிகரித்துக் காணப்படும். அதற்கு மறுநாளும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.அதற்கேற்றதாக வடக்கில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது.
தற்போது யாழ்ப்பாணத்தில் 36.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இடிமுழக்கம் மற்றும் மின்னலின்போது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 5 ஏப்ரல், 2016

மட்டக்களப்பு பெண் 30 வயதில் பாட்டியான சாதனை'?


பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’ என்று மிக சர்வ சாதாரணமாக சொன்னார் ரேவதி
வாகரையின் காட்டோர குடியிருப்பொன்றில் வசிக்கும் ரேவதிக்கு இப்பொழுது 31 வயது. தனது இரண்டாவது மகள் இன்னும் திருமணம் முடிக்காமலிருப்பது அவருக்கு பெரும் பதைபதைப்பை கொடுக்கிறதென்பதை அவருடன் பேசும்போது புரிந்து கொண்டோம். 31 வயதிலேயே பேரக்குழந்தையை கண்டுவிட்டவர் ரேவதி. அவரது மூத்த மகள்- தற்போது திருமணத்திற்கு காத்திருப்பவளின் அக்கா- தற்போது ஒன்றரை வயது குழந்தையின் தாய். ரேவதியின் மூத்த குழந்தைக்கு வயது 16.
இந்த அதிர்ச்சி கதையை வாகரைக்கு செல்வதற்கு முன்னரே அறிந்து விட்டோம். மட்டக்களப்பின் மீள்குடியேற்ற பிரதேசங்களில் தலைவிரித்துள்ள பெரும் சமூகக்கொடுமையான இளவயது திருமணங்கள் பற்றிய அதிர்ச்சிகதைகளை அறிந்ததன் பின்னர் அந்தபகுதிகளிற்கு
 சென்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தநடவடிக்கைகளில் சிக்கி 2006 இல் இடம்பெயர்ந்து 2007 இல் மீள்குடியேறிய வவுணதீவு வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை, வாகரை, கிரான் செங்கலடி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்த்தான் சிறுவயது திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன.
இந்தப்பகுதிகளில் 14- 17 வயதிற்குள் சிறுமிகள் திருமணம் செய்து குழந்தை பிரசவிப்பது சர்வசாதாரண விடயம் என்கிறார்கள் 
அதிகாரிகள்.
யுத்த நெருக்கடி கல்வியறிவின்மை உள்ளிட்ட பலவற்றை இதற்கு காரணங்களாக சொல்கிறார்கள். யுத்தகாலத்தில் இந்தப் போக்கு சற்று எல்லைமீறியது என்பது அதிகாரிகளின் கருத்து.
தங்கள் பிள்ளைகள் ஆயுதமோதல்களிற்குள் சிக்கிவிடக் கூடாதென்பதற்காக இளவயது திருமணத்தை பெற்றோர் கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். பராயமடைந்ததுமே சிறுமிகளை யாருக்காவது திருமணம் செய்து வைத்துள்ளனர். அதுதவிர வறுமையும் இதற்கு காரணங்களிலொன்றாகியுள்ளது.
யுத்தத்தில் சிக்கி கணிசமான ஆண்கள் இந்தப்பகுதிகளிலும் இறந்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய சிறுமிகள் வறுமை காரணமாக இளவயதிலேயே திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப்பகுதி கிராமசேவகர் ஒருவர் கூறினார்.
பல்வேறு காரணங்களினால் நடந்த இளவயது திருமணங்கள் இப்பொழுது சம்பிரதாயமாகிவிடும் அபாயத்தையும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இளவயது திருமணம் என்றாலே அதில் நிறைய சிக்கல்கள் இருக்கும் என்பது புரியக்கூடியதுதான். இந்தப்பகுதிகளில் உள்ள பிரதான சிக்கல் இளவயது திருமணம் இளவயது விதவைகளை 
உருவாக்குவதுதான்.
சராசரியாக 15,16 வயது சிறுமிகளை 20-22 வயது வாலிபர்களிற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்கள் சில மாதங்கள் ஒன்றாக இருந்து சிறுமிகள் கர்ப்பவதியாகும் சமயத்தில் மத்தியகிழக்கு நாடுகளிற்கு தொழில்தேடி செல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தில் செல்கிறார்கள். சிலர் முன் பின்னாக திரும்பி 
வருவதுண்டு.
மத்திய கிழக்கிலிருந்து அவன் திரும்பி வந்ததன் பின்னர் பெரும்பாலானவர்கள் தமது மனைவிகளுடன் வாழ்வதில்லை. இதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறார்கள். ஒன்று கணவன் வெளிநாட்டிலிருந்த சமயத்தில் மனைவியைப்பற்றி ஊரில் பரவும் தகவல். இரண்டு வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்கள் அப்பாவிகளான கிராமத்து சிறுமிகளுடன் வாழ விரும்புவதில்லை.
இந்த சமயத்தில்த்தான் அந்தச் சிறுபெண்கள் பெரும் விலை கொடுக்கிறார்கள். இரண்டோ மூன்று வயதில் கையில் ஒரு குழந்தையிருக்கும். அப்பொழுதுதான் 18 வயதை எட்டிப்பிடித்திருப்பார்கள். சட்டப்படி பெண்கள் திருமண வயதையடையும் சமயத்தில் இவர்கள் கணவனை பிரிந்தவர்களாகிறார்கள்.
<இதுதவிர முறையற்ற உறவுகளும் பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. சிறுமிகளை திருமணம் செய்யும் வாலிபர்கள் பெரும்பாலானவர்கள் அந்த சிறுமியுடன் நீண்டகாலம் வாழ்வதில்லை. வேறொரு துணையை நாடுகிறான். இளவயதில் கணவனை பிரிந்த பெண்கள் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நெருக்கடிகள் நேரும்போது முறையற்ற வேறு உறவுகளை ஏற்படுத்துவதும் நிகழ்கிறது.

இளவயது திருமணங்களிற்கு முக்கிய காரணமாக அரசசார்பற்ற தொண்டு நிறுவன பிரதிநிதியொருவர் குறிப்பிட்டது உயர்வகுப்பு பாடசாலைகள் குறைவாக காணப்படுவதையே. ‘பாடசாலை பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். எட்டுஇ ஒன்பதாம் வகுப்பின் பின்னர் படிப்பதாயின் அதிகதூரம் பயணிக்க வேண்டும். அதற்கான பொருளாதார வசதியில்லாததால் பலரும் வீட்டிலிருக்கிறார்கள். அப்பொழுதுதான் திருமணம் செய்கிறார்கள்
’ என்றார்
மட்டக்களப்பின் பெரும் சமூக அவலமாக மாறிவிட்ட இளவயது திருமணங்களை தடுப்பதுதான் ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கு அத்தியாவசியமானது
திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் , மட்டு அரசஅதிபர் :
“இளவயது திருமணங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம். என்றாலும்இ மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் 500 இளவயது திருமணங்கள் நடந்ததாக கண்டறிந்துள்ளோம். முன்னைய காலங்களுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைந்துள்ளது. மாணவர்கள் கல்வியை பாதியிலேயே கைவிடுவதுதான் இளவயது திருமணத்திற்கு முக்கிய காரணம்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தம்பதியினர் குளித்துக்கொண்டிருப்பதை எட்டிப் பார்த்தவர்கள் விளக்கமறியிலில்?

துன்னாலை வடக்குப் பகுதியில் இளம் தம்பதியினர் குளித்துக்கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த இருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார், திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். இதேவேளை, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் 
சார்பில் ஆஜராகிய 
சட்டத்தரணி விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார். இரவு வேளையில் வீட்டு குளியலறையில் இளம்தம்பதியினர் குளித்துக்கொண்டிருந்த போது, அந்தப் பகுதியைச்
 சேர்ந்த 3 இளைஞர்கள், அவர்கள் குளிப்பதை எட்டிப்பார்த்துள்ளனர். இதனை அவதானித்த கணவர், இளைஞர்களை துரத்திச் சென்றபோது, அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பில், நெல்லியடி பொலிஸ் 
நிலையத்தில் 
செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 2 ஏப்ரல், 2016

பண்டத்தரிப்பு வயற் கிணற்றில் இருந்து முதலை ஒன்று மீட்பு

பண்டத்தரிப்பு வயற் கிணற்றில் இருந்து முதலை ஒன்று மீட்பு பண்டத்தரிப்பு, நகர்ப்புறத்தின் பின்பக்கமுள்ள வயல் கிணற்றில் தவறி வீழ்ந்த 5 அடி நீளமான முதலை வியாழக்கிழமை (31) மீட்கப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஐந்து நாட்;களுக்கு முன்னர் இந்த முதலை தவறி கிணற்றுக்குள் வீழ்ந்தது. இது தொடர்பில் அப்பகுதி மக்கள் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு அறிவித்த போதும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மக்கள் இளவாலைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்தனர். அவர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இதனைத் தெரியப்படுத்தி, திணைக்களத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் முதலையை மீட்டுச் சென்றனர். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருவெம்பாவை

இதோ அறுசுவை சிறந்த கோடை உணவு?

இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவு வகைகள்.
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டு சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும் தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய 
தன்மையுண்டு.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>