வணக்கம்

வெள்ளி, 29 மார்ச், 2019

நாம் சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா 6 வழிகள்

பணத்தை கையாளுவது மிகவும் கடினமான காரியமாகும். அதற்கு பல காரணங்கள் உண்டு. பலருக்கு செல்வத்தை மதிப்பிட்டு வைத்துக்கொள்வது என்பது புரியாத விஷயமாக உள்ளது. இன்றைய 
உறுதியற்ற பொருளாதார உலகில் வாழும் நாம் திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம்
நிதி திட்டமிடல் என்னும் விஷயத்தை நாம் சரியாக திட்டமிட்டால் எளிய மற்றும் நிலையான தீர்மானங்களை எடுக்க முடிகின்றது. இதனால் நமது இலக்கையும் எளிமையாக எட்டவும் முடியும். கீழ்வரும் பகுதியில் பணம் சேமிக்கும் ஐந்து வழிகளை
 பற்றிப் பார்ப்போம்.
* பட்ஜெட்
ஒரு வீட்டை பராமரிக்கும் நீங்கள் வரவு செலவு கணக்கை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதை நாம் சிறு தொகையாக இருந்தாலும் பெருந்தொகையாக இருந்தாலும் சரி குறித்து வைக்கும் பொழுது பண புழக்கத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பணம் நமக்கு எந்த வகைகளில் வருகின்றது, மாத செலவுகள் என்னென்ன ஆகியவற்றை பதிவு செய்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் அவ்வப்போது ஆய்வு செய்து, நாம் சரியான பாதையில்
தான் செல்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
* கறி மற்றும் மீன் இறைச்சிகளை தவிர்ப்பது
நமக்கு அதிகமாக செலவாகும் உணவு என்றால் அது இறைச்சி தான். இதை நாம் தவிர்த்தால் பெரும் அளவில் பணத்தை சேமிக்க முடியும். காய்கறிகள் மிகவும் சிறந்த உணவுகளாகும். பீன்ஸ், அவரை மற்றும் இதர காய்கறிகளில் உள்ள புரதச் சத்து பிரம்மிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அதிகமாக உள்ளது. இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளது.
* பணி செய்யும் இடங்களில் கவனிக்க 
வேண்டியவை
நமது அலுவலகத்தில் கிடைக்கும் பயனுள்ள திட்டங்களை நாம் விட்டு விடக்கூடாது. அதாவது அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு மருத்துவம், விடுமுறைகள், ஆயுள் காப்பீடு, கல்வி உதவித் திட்டங்கள், பாதுகாப்பு முறைகள் மற்றும் பெட்ரோல் பில்லின் தொகையை திருப்பித்தருவது ஆகிய பல வசதிகள் நமக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இலவச தேனீர், உணவு மற்றும் வரும் லாபத்தில் பங்கு தருவது ஆகிய பல வகைகளிலும் உங்களுக்கு வசதிகள்
தரப்படுகின்றது. இதை எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகளை நாம் கடைப்பிடிக்கும் போது சிறிது சிறிதாக சேமித்தாலும் பெரும் தொகையை நாம் பிற்காலத்தில் இதனால் அடைய முடியும்.
* செலவு செய்யும் முன் 
சேமிக்க வேண்டும்
ஒவ்வொரு மாதமும் நாம் என்ன செலவு செய்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளில் எது முதன்மையானது என்பதை நாம் பட்டியலிட்டு அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். மளிகை சாமான்கள், தண்ணீர், மின்சாரம், கடன் ஆகியவற்றிற்கான தொகையை செலுத்துவதற்கு முன் நமது தனிப்பட்ட தேவைக்கான தொகை
யை நாம் ஒதுக்கி வைப்பது நல்லது. நமது அத்தியாவசிய தேவைகளை பார்த்துக்கொள்ள இவை உதவியாக இருக்கும். நமது சம்பளத்தை கொடுத்த உடன் சிறிதளவு பணத்தை எடுத்து சேமிப்பு கணக்கில் வைத்துக் 
கொள்வதும் நல்லது.
* ஓய்வு காலத்திற்கான சேமிப்பு

இன்னும் ஒரு படி மேலே சென்றுப் பார்க்கும் போது ஓய்வு காலத்திற்கான சேமிப்பை பற்றி
நாம் சிந்திப்பது நல்லது, பொரும்பாலனோர் இதை பற்றி சிந்திப்பதே இல்லை. நாம் எங்கு வாழ வேண்டும், வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு அந்த இலக்கை நோக்கி செயல்படுதல் வேண்டும். இதனால் நாம் யாரையும் நம்பி இருக்காமல் சுதந்திரமாக பிற்காலத்தை கழிக்க முடியும். வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் அதற்கேற்ப சேமிப்புகளை நாம் காப்பீடுகளாக வைத்துக் கொள்வது 
சிறந்ததாகும்
இன்றைய காலத்தில் தொலைத்தொடர்பு சாசனத்திற்கு செலவிடும் பணம் மிக அதிகமாக காணப்பட்டுகிறது. முடிந்த வரை இணையத்தளத்தில் இருந்து விலகி இருப்பதால் அதிக பணத்தை சேமிக்கலாம். நீங்கள் இந்த செய்தியைப் படிக்கும் போதும்  உங்கள் பணத்தை செலவிடுகிறார்கள்.
பணத்தை  சேமிப்போம் எதிர்காலத்தில் 
சிறப்பாக வாழ்வோம்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 25 மார்ச், 2019

யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய நிர்­வா­கத்­தி­னரின் அறிவித்தல்

யாழ் மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­துக்கு உந்­து­ரு­ளி­யில் வரு­கின்ற அடி­யார்­கள் அவ­சி­யம் தலைக்­க­வ­சம் அணிந்து வரு­மாறு ஆலய நிர்­வா­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.
வாகனப் பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வ­சம் பாது­காப்­பாக வைப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்பட்­டுள்­ள­தால் தலைக்­க­வ­ச­மின்றி ஆல­யத்துக்கு வருகை தர­வேண்­டா­மென உந்­து­ரு­ளி­க­ளில் வரு­வோ­ருக்கு ஆல­யத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.
கடந்த வரு­டம் தலைக்­க­வ­ச­மின்றி வந்த பெண் வீதி விபத்­தில் சிக்கிச் சாவ­டைந்­தார். இந்­நி­லை­யில் உயிர்ச் சே­தத்தைத் தடுக்­கும் முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­யாக பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வச பாது­காப்பு ஒழுங்­கு­கள் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளன.
மேலும் ஆல­யத்­துக்கு வரும் வாக­னங்­களை வீதி­யோ­ரம் விடா­த­வாறு அரு­கில் உள்ள வித்­தி­யா­லய மைதா­னத்­தில் தரிப்­பிட வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
பாட­சாலை அருகே உள்ள சாலை­யூ­டாக வாக­னங்­க­ளைக் கொண்டு சென்று தரிப்­பி­டத்­தில் விடு­மா­றும் அறி­வித்­துள்­ள­னர்.
ஆல­யத்துக்கு வரு­வோர் தமது உடை­மை­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில் தங்க ஆப­ர­ணங்­கள் அணிந்து வரு­வதைத் தவிர்க்­கு­மா­றும் 
கேட்­டுள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 23 மார்ச், 2019

அவசர அறிவித்தல் வடக்கில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு

நாட்டின் 9 மாவட்டங்களில் 23,03,2019, கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான 
காலநிலை நிலவும்.
இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் 
அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, இதுவரை யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மக்களுக்கு ஓர் அவசர முன்னறிவித்தல்.!மின்சாரத் தடை தொடரும்

இலங்கையில் தொடர்ந்தும் மின்விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்
து தொடர்பான தகவல்கள் கடந்த 18ம் திகதி மின்சக்தி அமைச்சின் செயலாளரினால், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக முன்னறிவித்தல் எதுவும் இன்றி மின்சாரம் 
துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மின்தடை காரணமாக எந்தவித அறிக்கையையும் மின்சார சபை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எனினும், நாட்டில் சீரான மழை பெய்யும் வரை மின்சார விநியோகம் தடை செய்ய நேரிடலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 மார்ச், 2019

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய சூழல் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு ஆலயச் சூழலை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன.
ஆலயத்தின் சூழலானது முரசு மோட்டை ஊரியான் கோரக்கன் கட்டு பிரதேசங்களை சேர்ந்த மக்களால் சுத்தம்
 செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மதுப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 14ஆம் திகதி விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 21ஆம் திகதி இரவு நிறைவு பெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 மார்ச், 2019

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது எரிபொருளிக் விலை சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் குழு நாளை  கூடவுள்ளது. இதற்கமைய  நாளை நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என  நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருளின் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் . உலக சந்தையில் எரிபொருளின் விலையில் கடந்த வருடத்தின்  மூன்றாம் காலாண்டு தொடக்கம் நிலையான ஒரு தன்மை காணப்படாமையின் காரணமாகவே   எமது  எரிபொருள் விலையில் ஒரு நிர்ணய தன்மையினை பேணமுடியாதுள்ளது.
கடந்த மாதம் 11 ஆம் திகதி  எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமையினை தொடர்ந்து எரிபொருள்  விலை சூத்திர  விலை நிர்ணய குழுவின்  தரப்படுத்தலுக்கு அமைய  ஒக்டைன்  92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 06 ரூபாவிலும்,  ஒக்டைன் 95 ரக  பெற்றோல் 05 ரூபாவிலும், ஒடோ டீசல்  ஒரு லீற்றர்  04 ரூபாவிலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர்  08 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>