வணக்கம்

வியாழன், 29 டிசம்பர், 2016

சிகை ஒப்பனை நிலைய உரிமையாளர்களுக்கு ஓர் செய்த?

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 19ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையே இவ்வாறு நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளமையால் மாணவர்களின் நலன்கருதி விடுமுறை நாளான ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொழில் நிலையங்களைத் திறந்து மக்களுக்குச் சேவையாற்றுமாறும் யாழ்.மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் கேட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 28 டிசம்பர், 2016

.-தனியார் -· இ.போ.ச பேருந்து சாரதிகள் மோதல்!

வவுனியா இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேருந்து சாரதி தாக்கியதில் படுகாயமடைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (27) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா - செட்டிகுளம் செல்லவிருந்த அரச பேருந்தில் பயணிகளை ஏறிக்கொண்டிரு க்கையில் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லவிருந்த தனியார் பேருந்து சாரதிக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது
இதில் கைகலப்பில் ஈடுபட்ட இரு சாரதிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இ.போ.ச சாரதியான மகேஸ்வரன் (வயது 35) மீது தனியார் பேருந்து சாரதி தாக்கியதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேருந்து சாரதியிடம் நீங்கள் முதலில் செல்கி ன்றீர்களா? அல்லது நான் முதலில் செல்லவா? என்று இ.போ.ச பேருந்து சாரதி கேட்டதை யடுத்து பேருந்தில் இருந்த தனியார் பேருந்து சாரதி தனது பேருந்து கதவைத்திறந்து சார தியின் முகத்தில் தாக்கியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 27 டிசம்பர், 2016

முற்றாக பொலித்தீன் பாவனை 2017இல் இருந்து தடை?

2017 ஆம் ஆண்டிலிருந்து பொலித்தின் ,பிளாஸ்ரிக், ரெஜிபோம், பாவனைகளை  தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே. எச் முதுகுடா ஆராச்சி தெரவித்து ள்ளார்.
இவற்றின் தடை தொடர்பிலான சிபாரிசுகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துகள் , யோசனைகளின் மீது அடுத்தாண்டு முதல் சிபாரிசுகள் அமுலாக்கப்படும்.
புதிய உத்தரவுகள் அமுலாகும் முன்னர்
 உற்பத்தியாளர்களும்.பொதுமக்களும் புதிய ஏற்பாட்டுக்கு உகந்தவகையில் பழகி க்கொள்ள வேண்டும் இதற்கு 6 – 7 மாதங்கள் சலுகை காலமாக வழங்கப்படும் 
தற்போது 20 மைக்ரோன்களுக்கு
 குறைந்த பொலித்தின் இறக்குமதி செய்வதை நாம் முற்றாக நிறுத்தியுள்ளதுடன், விற்பனையாளர்களை முற்றுகையிட்டு வருவதாக 
பணி ப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 19 டிசம்பர், 2016

பொலிசாரால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட வயோதிபத் தாய் மீட்பு!

      வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியில் கடந்த பல நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 70வயதுடைய வயோதிபத் தாய் இன்று (18.12.2016) மாலை 5.30மணியளவில் பொலிசாரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்த 70வயதுடைய பெண் வயோதிபர் கணவன் கடந்த 7நாட்களுக்கு முன்னர் உறவினருடைய வீட்டிற்கு கொழும்பு சென்றுள்ளார்.
 குறித்த வயோதிப தாய் கடந்த சில தினங்களாக அருகிலுள்ள கடையில் சாப்பாடு எடுத்துச்சாப்பிட்டு வந்துள்ளார் எனினும் நேற்றும் இன்றும் குறித்த வயோதிபர் வெளியே செல்லாததால் சந்தேகம் ஏற்பட்ட பக்கத்து வீட்டு 
உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்குத் தகவல் வழங்கியடையடுத்து இன்று மாலை 5.30மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் பெண்பொலிசாரின் உதவியுடன் பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்றபோது குறித்த வயோதிப தாய் மயக்கமற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 17 டிசம்பர், 2016

இயந்திரம் கண்டுபிடித்த மாணவிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கபபடடது !

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே இன்று(16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இம்மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை தயாமதி பிரேம்குமாருக்குப் பாராட்டுக்களையும் 
தெரிவித்தார்.
பாடசாலை ரீதியாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான குறித்த மாணவி இறுதிப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற புத்தாக்க போட்டியிலும் இப்பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்ற மாணவன் ஜீவரெத்தினம் பிரதீபன் நீரூற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தமைக்காக தேசிய மட்டத்தில் 5 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 23 நவம்பர், 2016

ஒரு நிமிடம் இந்த காணொளியை பாருங்க சிரித்து சிரித்து மகிழ்வீங்க!.

உங்கள்  மனதில்  ஆயிரம்  கவலையா?ஒரு நிமிடம் இந்த  காணொளியை பாருங்க சிரித்து சிரித்து நொந்துடுவீங்க!.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 16 நவம்பர், 2016

புதிய வாகன சட்டத்தின் மூலம் அனைத்து வாகன சாரதிகளுக்கும் ஆப்பு

புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
(Vehicle will be taken to court..)
ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும்
வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)
அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
3 முறைக்குமேல் அபராதமும் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலும் ரத்துசெய்யப்படும் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 10 நவம்பர், 2016

அடித்தது யாழ் இளைஞர், யுவதிகளுக்கு யோகம்!

யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருவதற்குக் கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சின் ஐவாத் குரேசி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகளைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று(11) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழுவினர் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஐயம் மேற்கொண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியப்போதே இதற்கான உடன்பாடு
 எட்டப்பட்டுள்ளது.
மேலும், இச்சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் கனேடிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்திச் செயற் திட்டங்கள் மற்றும் யாழ் மாவட்டத்தின் தற்போதைய தேவைப்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 5 நவம்பர், 2016

இளைஞர்கள்அவுஸ்திரேலியாவில் குடியேற அரிய வாய்ப்பு!

இலங்கையில் உள்ள இளைஞர்கள் அவுஸ்திரேலியா சென்று பல்கலைக்கழக பட்டம் முடித்துவிட்டு அந்த நாட்டிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார 
தெரிவித்துள்ளார்.
நான்கு வருட பட்டப்படிப்பை நான்கு நிலைகளில் நிறைவு செய்ய முடியும் என்றும், மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்
பல்கலைக்கழக பட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பணி புரிவதற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கட்டுமானதுறையில் மேசன் தொழிலுக்காக 15 ஆயிரம் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தச்சு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.
ஆகவே இந்த தொழில் தொடர்பில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 30 அக்டோபர், 2016

புதிய யாழ் பொலிஸ்நிலையம் ராசியில்லையாம் பொலிஸார் கவலை

யாழ்ப்பாணத்தில்  புதிதாக  கட்டப்பட்டு  திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவ லை  தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எப்போது புதிய பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டோமோ அன்றிலிருந்து எமக்கு கண்டம் ஆரம்பித்து விட்டது. இக் கட்டடத்தை கட்டிய பொறியியலாளர்  பொலிஸ்நிலையம் திறந்து   மூன்றாம் நாளே இருதய நோயினால் இறந்து விட்டார். அத்துடன்   கட்டட நிர்மாணங்களை மேற்பார்வை செய்த  மேற்பார்வையாளர் விபத்தில் பலியாகினார்.
புதிய பொலிஸ் நிலையம் திறப்பதற்கு எப்போதோ திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும் பல தடைகள் ஏற்பட்டு நிர்மாணப்பணிகளில் இழுத்தடிப்புக்கள் ஏற்பட்டது. இறுதியில் அவசரமாக திறப்பு விழாவும் செய்யப்பட்டது. திறப்பு விழாவின் போதும் பல இன்னல்கள் தடைகள் ஏற்பட்டது.
அன்றைய தினமே பெண் பொலிஸார் ஒருவர் வழுக்கிவிழுந்து காயமடைந்தார் . புதிய பொலிஸ் நிலையம் திறந்ததில் இருந்தே பிரச்சனைகளும் வர ஆரம்பித்தது. யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தது. யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தண்டனை இடமாற்றம் அடைந்தார் . சுண்ணாகம் கொலை வழக்கில் இங்கு பணியாற்றி வந்த பொலிஸாரும் சிக்கினர்.
தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் ஐந்து பொலிஸார் சிக்கினர். இதன்பின்னர் மக்களிற்கும் எமக்குமிடையிலான விரிசல் அதிகமானது . தொடரந்து பிரச்சினைகள் வந்த வண்ணமே உள்ளது. என குறிப்பிட்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 28 அக்டோபர், 2016

கட்டுரை பேச்சு போட்டிகளில் சாமந்தி அபிராமி என்ற சகோதரிகள் முதலிடம்

நம் தாய்மண்ணான வீரம் செறிந்த மண் வன்னி மண் கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவிகள் !!
அகில இலங்கையில் பேச்சு கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த சாமந்தி அபிராமி என்ற சகோதரிகள். குறித்த இத்தகு ஆற்றல்களை மண்ணில் வளர்த்தெடுப்பதற்கும் காரணமாய் இருந்த அவரது பெற்றோர் ஆசிரியர்கள் வரலாற்றில் முக்கியமாணவர்கள்.
சாமந்தி அபிராமி இவர்களால் அந்த மண்ணின் பெருமையை உலகறியச் செய்தமை வரலாற்றின் முக்கிய பதிவுகளாகும்…இவர்களுக்கு எமம்  இணையங்களின் நல் 
வாழ்த்துக்கள் !!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 20 அக்டோபர், 2016

தட்டாதெருச் சந்தியில் வாகன விபத்து : இருவர் காயம்

யாழ் தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், குறித்த விபத்து காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து தாமதமானது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்டவேளையில் கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த இரு வாகனங்களின் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் மாவட்ட பாடசாலை வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு கௌரவிப்பு


பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டத் தடகளப்போட்டிகள் கடந்த வாரம் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ் மாவட்ட பாடசாலை பதக்கம் வென்றது
அந்தவகையில்,  21 வயது பெண்களுக்கான நீளம்பாய்தலில் வெண்கலப்பதக்கம் வென்ற யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி. ஆரணிக்கு கல்லூரிச் சமூகத்தால் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று நேற்று பெற்றது. 
குறித்த நிகழ்வானது கல்லூரியின்  அதிபர் திருமதி கௌரி சேதுராஜா தலைமையில், இடம்பெற்றது.  இந்நிகழ்வில்   பாடசாலைக்கு பதக்கத்தினை வென்று கொடுத்த மாணவி உடுப்பிட்டிச் சந்தியில் இருந்து பாண்ட் வாத்திய சகிதம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு கல்லூரி மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார். 
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டமை சிறப்பித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நாட்டுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள சீனா! இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதா?

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட செயற்பட்டு வரும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பிறிதொரு நாட்டில் மாற்றியமைக்க சீனா விரும்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்
 வெளியிட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அரசாங்கத்திற்கு அவசியம் இல்லை என்றால், ஒரு வருட காலத்திற்குள் அதனை பங்களாதேஷிற்கு மாற்றியமைக்க முடியும் என சீனா அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் சீனா கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன அரசாங்கத்தின் எக்ஸிம் வங்கி ஊடாக வழங்கப்பட்டுள்ள நிவாரண கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
China Machinery Engineering Corporation (CMEC) தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன் நிர்மாணிப்பு பணிகளையும் முன்னெடுத்திருந்தன. தற்போது வரையில் குறித்த நிறுவனம் மற்றும் இலங்கை மின்சாரசபையினால் இந்த மின் உற்பத்தி நிலையம் நடத்தி
 செல்லப்படுகின்றது.
இந்நிலையில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தெற்காசிய நாடான பங்களாதேஷில் பாரியளவிலான முதலீடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
பங்களாதேஷில் மின்சார தேவைக்கான கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நுரைசோலை அனல் மின் நிலையத்தில் பங்களாதேஷில் அமைப்பதற்கான நடவடிக்கை சீனா மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு நட்டத்தை ஏற்படுத்தாத வகையில் அனல் மின் நிலையத்தை அகற்றி பங்களாதேஷில் நிர்மாணிக்க கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும், இதற்காக வழங்கப்பட்ட கடன் நீண்ட கால கடன் என்பதனால் அந்த முதலீட்டினை பங்களாதேஷ் எதிர்பார்த்துள்ளதாகவும்
 குறிப்பிடப்படுகிறது.
தற்போது வரையில் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள இராண்டாவது அனல் மின் உற்பத்தி நிலையமான திருகோணமலை சம்பூரில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பின் காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதுடன் அதற்கு மாற்று நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் நாட்டின் தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோட்ஸ் மின்சாரம் பெற்றுக்கொள்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 13 அக்டோபர், 2016

போக்குவரத்து பொலிஸாருக்கு எதிராக அதிகரிக்கும் முறைப்பாடுகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும்  போக்குவரத்து பொலிஸாருக்கு எதிரான அதிகமான முறைப்பாடுகள்  பெண்களிடமிருந்தே மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்திருப்பதினால் போக்குவரத்து பொலிசாரின் செயற்பாடு குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவு 
பிறப்பித்துள்ளார்.
கடந்த காலங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கடமையின் நிமித்தம் வீதிகளில் நிற்கும்போது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து செய்யும் இளம் 
பெண்களை நிறுத்தி அவர்களிடமிருந்து பல்வேறு போக்குவரத்து சட்டங்களை கூறி, பல மணி நேரம் அவர்களை வீதிகளில் நிறுத்தி 
கதைப்பது, அவர்களிடம் இருந்து தொலைபேசி இலக்கங்களை பெறுவது, தகாத முறையிலான பல விடங்களை பேசுவது போன்ற பல்வேறுபட்ட முறைப்பாடுகள் மாவட்ட நீதிமன்றுக்கு 
கிடைக்கப்பெற்றுள்ளது.
இந் நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்தும் முகமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளை அழைத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய கவனம் செலுத்துமாறும்ன் போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான நடத்தைகளுக்கு மிக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் மா.கணேசராஜா கட்டளை பிறப்பித்துள்ளார். 
போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மாவட்டத்தின் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியதுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளையும் அழைத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அதற்கான கட்டளைகளையும்  நீதவான் 
தெரிவித்துள்ளார். 
இதேவேளை கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களிலிருந்து அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்துக் குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட 
கலந்துரையாடல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அவர்களின் அழைப்பின் பேரில் மாவட்ட திறந்த நீதிமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 8 அக்டோபர், 2016

ஆறு வயது சிறுமியை தாக்கிய தாயின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ் நீர்வேலிப் பகுதியில்  6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று உத்தரவிட்டார் என
 தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி முகப்புத்தகத்தில் வைரலாக பரவியது.
அந்த சிறுமியை தாக்கிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 5 அக்டோபர், 2016

புலமைப்பரிசில் தரம் 5 பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2016 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வௌியிடப்பட்டுள்ளன. 
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 3 அக்டோபர், 2016

சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ் மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப்போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுராதபுரத்தில்
 இடம்பெற்து.
24 கிலோமீற்றர் கொண்ட இந்த போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை
 தேடித்தந்துள்ளனர்.
அந்த வகையில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவி விதுசனா வெள்ளிப் பதக்கத்தினையும், யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

புதன், 28 செப்டம்பர், 2016

எச்சரிக்கை கடற்பிரதேச மக்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!

நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற்கரைக்கு அருகில் ஆழமான மற்றும் ஆழமற்ற
 கடற்பிரதேசங்களில்
 காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.ஆகவே அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் வானிலை அவதான மையம் கோரிக்கை முன் வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 22 செப்டம்பர், 2016

பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்கலாம் !

எதிர்வரும் தினங்களில் கணிதம், விஞ்ஞானம், வணிகம் மற்றும் கலைத் துறை பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆங்கில மொழி டிப்ளோமா தகைமையுடையோரை ஆங்கில ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவுகின்ற பட்டதாரி ஆசிரியர்களின் வெற்றிடம் தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலே அவர் இதனை தெரிவித்தார்.
ஆங்கில மொழி ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டதாக அவர் 
குறிப்பிட்டார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

வானில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோன்றிய பிள்ளையார்!

இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில்.05.09.2016..அன்று  பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் நின்று இந்த அற்புத காட்சியை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



தற் போது வடக்கு ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ. இரவீந்திரன்
 தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமனம் பெற்று ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டனர். சேவைக் காலத்தில் சேவையை நிரந்தரமாக்குவதற்கு சான்றிதழ் உறுதிப்படுத்தல் நடைமுறை இடம்பெறும். இதற்காக அவர்களின் சான்றிதழ் பரீட்சைத் திணைக்களத்திற்கு
 அனுப்பப்படும்.

இவ்வாறு அனுப்பப்படும்போதே 20 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் சேர்ப்பித்தமை கண்டறியப்பட்டது. இதில் இருவர் அதிபராகவும் தேர்வாகியிருந்தனர், 20 பேரில் ஆசிரியைகளும் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போலிச் சான்றிதழ் என்று இனங்காணப்பட்ட அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர்கள் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அரச கொடுப்பனவுகள் அனைத்தும் மீளச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் 
தெரிவித்தார்.
இதேவேளை அவ்வாறு குறித்த கொடுப்பனவுகளை மீள் செலுத்த மறுப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் இ. இரவீந்திரன் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இடம்பெற்ற இருவேறு கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனத்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கிச் பயணித்த இளைஞனின் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இதன் போது இளைஞன் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் தலைக் கவசத்துடன் உட்புகுந்து தொங்கிய நிலையில் பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் பலியான இளைஞன் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இன்று மாலை மல்லாவியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே
 பலியாகியுள்ளார்.
உந்துருளியில் வேகமாக சென்றபோது உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த இளைஞன் மின்சார கம்பத்துடன் மோதுண்டு இரண்டு தூண்களுக்கு இடையில் சிக்கிய நிலையில் 
உயிரிழந்துள்ளார்.
சடலம் மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 5 செப்டம்பர், 2016

அக்கா தங்கைக்கு மட்டக்களப்பில் நடந்த கொடூரம்!!

மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சகோதரிகளான இவர்கள் யானை தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி 11 வயதுடைய சிறுமி உயிரிழந்தார்.
9 வயதுடைய தங்கை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று 
வருகிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 31 ஆகஸ்ட், 2016

காலாவதி ஐஸ்கிறீம் .விற்ற வர்த்தகருக்கு அபராதம்

இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால்  நேற்று  திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வர்த்தகர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>