வணக்கம்

திங்கள், 26 அக்டோபர், 2015

ஆசிய வங்கி வீதி அபிவிருத்திக்காக 800 மில்.அமெ. டொலர் நிதியுதவி

இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களின் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளது.
மூன்று கட்டங்களாக இவ்வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அமைச்சரவை பேச்சாளர்
 தெரிவித்தார்.
தேசிய, மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் இவ்வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பின்தங்கிய பிரதேசங்களில் 3,108 கிலோ மீற்றர் வீதியும் 248 தேசிய வீதிகளும் இந்நிதியினூடாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இதற்காக சுமார் 906 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்று 
கணிப்பிடப்பட்டுள்ளது.
800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் நிலையில் மிகுதியை இலங்கை அரசு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
தெற்கு, சப்ரகமுவ மத்தி, வடமத்திய மாகாணங்களிலும் மேல் மாகாணத்தில் களுத்தறை மாவட்டத்திலும் இவ்வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக