வணக்கம்

புதன், 28 அக்டோபர், 2015

தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் 2016 இல்

பெப்ரவரிக்குள் கிளிநொச்சி மைதானம் பூா்த்தியாக்கப்படும் விளையாட்டு அமைச்சரின் செய்தி விளையாட்டாக போய்விடக் கூடாது .
2016 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவினை கிளிநொச்சியில் நடாத்தும் வகையில் கிளிநொச்சி மைதானம் புனரமைப்பு பணிகள் பூா்த்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சா் தயாசிறி ஜெயசேகர தொிவித்துள்ளாா்.
இன்று 27 கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சா் கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற விளையாட்டு மைதானத்தை பா்ாவையிட்ட போதேஊடகவியலாளா்களிடம் இவ்வாறு தொிவித்தாா்.
2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பூா்த்தி செய்யப்பட்டு தேசிய விளையாட்டு விழா நடாத்தப்படும்கூறப்பட்டிருந்தது. ஆனால் 2015 இன்று வரை மைதானம் பணிகள் நிறைவடைய வில்லை.
இந்த நிலையில் ஓப்பந்த நிறுவனமான cecb எனும் நிறுவனத்திற்குபணிகளுக்கான நிதி விடுவிப்பு முறையாக இடம்பெறாமையினால் கடந்த பல மாதங்களாக கட்டுமானப் பணிகள் எவையும் இடம்பெறாது இருந்த நிலையில் தற்போது மீண்டும் மந்த கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது நிதி விடுப்புமேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனி தடையின்றி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த வகையில் எதிவரும் பெப்ரவரிக்குள் கட்டுமானப் பணிகள் பூா்த்தியாக்கப்பட்டுஇலங்கையின் வருடாந்த தேசிய விளையாட்டு விழாகிளிநொச்சி நடாத்தப்படும் எனவும் இதன் போது தமிழ் சிங்களம் முஸ்ஸிம் மக்கள் ஒன்று சோ்வாா்கள் என்றும் இது தேசிய ஒற்றுமைக்கான பாதையாக அமையும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சா் 
தெரிவித்தாா்.
2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடாத்தப்படும் என ஏற்கெனவே தொிவிக்கப்பட்டிருந்தது அது நடைப்பெறவில்லை இந்த நிலையில் 2016 ஆம் ஆ்ண்டுக்கான தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடாத்தப்படும் எனும் விளையாட்டு அமைச்சரின் செய்தி விளையாட்டாக போய்விடக் கூடாது என விளையாட்டு ஆர்வலா்கள் எதிா்பார்க்கின்றனா்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக