வணக்கம்

சனி, 17 அக்டோபர், 2015

50 குட்டிகளுடன் சவக்குழிக்குள் காணப்பட்ட 20 அடி நீள பாம்பு


சவக்குழி ஒன்றுக்குள் தனது 50 குட்டிகளுடன் காணப்பட்ட பெரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நாவுல – அஹமுனாய, மெல்ல கொல்ல பொது மயானத்தில் காணப்பட்ட பழைய சவக்குழி ஒன்றில் இருந்தே இந்தப் பாம்பு பிடிக்கப்பட்டது.
சடலமொன்றை அடக்கம் செய்வதற்காக இந்த மயானத்துக்குச் சென்றி ருந்தோர் அங்கிருந்த பழைய சவக்குழி ஒன்றில் இந்தப் பாம்பு தனது குட்டிகளுடன் இருப்பதைக் கண்டுள்ளனர்.bambu
குறித்த சவக்குழியின் மேற் பகுதி கொங்கிறீட்டினால் செப்பனிடப் பட்டிருந்த நிலையிலும் உள்ளே குழி ஒன்றினை உருவாக்கியே இந்த மலைப்பாம்பு வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 அடி மலைப்பாம்பினை அங்கு சென்றவர்கள் பிடித்து வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் கையளித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக