வணக்கம்

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

நல்லைக்கந்தன் உற்சவத்தில் ரூ. 14.6 மில்லியன் வருமானம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர், இன்று திங்கட்கிழமை (14) தெரிவித்தார்.

நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம் கேட்டவர்களுக்கு கடைகளுக்கான இடங்கள் கொடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் 348 கடைகள் அமைப்பதற்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டன. கச்சான் கடை அமைப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 45 ஆயிரம் ரூபாய் வரையும், இனிப்புக் கடைக்கு 40 ஆயிரம் தொடக்கம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையும், மணிக்கடைகள் 75 ஆயிரம் ரூபாய் தொடக்கம், இதர கடைகள் 12 ஆயிரத்து 500 ரூபாய் தொடக்கம் 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை சபையின் நிர்ணய வாடகை விலையாகவிருந்தது.

அந்தவகையில், கடைகளுக்கான இடங்களை வாடகைக்கு விடப்பட்டதின் அடிப்படையில் 10.6 மில்லியன் ரூபாய் வருமானமும், நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியதின் மூலம் 4 மில்லியன் ரூபாயும் வருமானமும் கிடைத்தது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக