வணக்கம்

வியாழன், 10 செப்டம்பர், 2015

சகோதரனை 8 கிலோ மீட்டர் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சகோதரி

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் 7 வயது சகோதரனை 11 வயது பழங்குடியின சிறுமி மாலதி கழுத்தில் வைத்து சுமந்து மருத்துவமனைக்கு 
அழைத்து சென்று உள்ளார். சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவு வரையில் சகோதரனை சுமந்து செல்லும் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து உள்ளது. 7 வயது சிறுவனுக்கு உலகில் யாருக்கும் 
எளிதாக கிடைக்காத அன்பு அதிகமாக கொண்ட சகோதரி கிடைத்து உள்ளார்.   மாலதியின் சகோதரன் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளான், அவன் அடுத்தவரது உதவியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்ற நிலையில் உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவனை கழுத்தில் வைத்து சுமந்துசெல்லும் மாலதி பேசுகையில், எனக்கு பெற்றோர்கள் இல்லை, என்னுடைய தாத்தா-பாட்டியே எங்களை பார்த்துக் கொள்கின்றனர். என்னுடைய சகோதரன் உடல்நிலை சரியில்லாமல் உள்ளான், என்று கூறிஉள்ளார். சிறுவனை, 11 வயது சிறுமி கழுத்தில் வைத்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அவர்களுக்கு உதவிசெய்த முன்வந்து
 உள்ளனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் மனோஜ் பாகாத் பேசுகையில், “சிறுமி மருத்துவமனையில் அழுது கொண்டு இருந்ததை பார்த்தேன், சிறுவனை அழைத்து செல்லமுடியாமல் தவித்தார். சிகிச்சை முடிந்ததும் நாங்கள் அவர்களை ஆம்புல்ன்சில் அனுப்பி வைத்தோம்,” என்று கூறிஉள்ளார். 
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிறைந்த இப்பகுதியில் உட்கட்டமைப்பு பணிகளானது மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் என்பது கிடைப்பது மக்களுக்கு எளிதானது 
இல்லை என்ற நிலையே உள்ளது. மருத்துவ வசதிஎன்பது மிகவும் மோசமாகவே உள்ளது. மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா ஆட்சிசெய்து வருகிறது. 
மராட்டிய மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் சாப்பிட 
உணவும் கிடையாது, செய்வதற்கு வேலையும் கிடையாது என்ற நிலையில் 5 குழந்தைகளின் தாய் தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்ட பரிதாப சம்பவம் 
கடந்த சனிக்கிழமை அன்று நிகழ்ந்தது. இதேபோன்று விவசாய கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் பரிதாப நிலையும் 
இந்தியாவில் காணப்படுகிறது. மருத்துவ  வசதியின்றி மக்கள் படும் கஷ்டமும் இங்குதான் உள்ளது. அடிப்படை தேவைகள் கிடைக்காமல் இந்தியாவில் இன்னும் மக்கள் உள்ளனர் என்பதை இத்தகைய செய்திகள் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள் மிகவும் வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக