வணக்கம்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

சுமார் 15,000 போலி வாக்குச் சீட்டுகள் கந்தளாயில் மீட்பு!


திருகோணமலை கந்தளாய் பகுதியில் சுமார் 15,000 போலி வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கந்தளாய் பகுதியிலுள்ள் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து குறித்த வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச் சீட்டை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு பிரதான அரசியல் கட்சியொன்றின் திருகோணமலை வேட்பாளர் ஒருவருக்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது
 செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 14ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி வாக்குச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக