வணக்கம்

வியாழன், 17 மார்ச், 2016

திடீர் மின் வெட்டு அமுல்-மின்பிறப்பாக்கிக்கு கிராக்கி

யாழில் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுய தேவைக்கான மின்பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மின்சாரமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 
இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரு நாட்களாக மின்பிறப்பாக்கிகள் விற்பனை சடுதியாக அதிகரித்துள்ளது. வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் 650 வாற் மின்சக்தியை வெளியிடும் மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்திலுள்ள மின்பிறப்பாக்கி விற்பனை நிலையங்களில்
 முடிவடைந்துள்ளது. 
தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்படும் 2.5 கிலோவாற் தொடக்கம் 5.5 கிலோ வரையான மின்பிறப்பாக்கிகள் 60 ஆயிரம் தொடக்கம் விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கடைக்காரர் ஒருவர் கூறுகையில், இன்று  மாத்திரம் தனது
 கடையிலிருந்து
 6 பெரிய மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், சிறிய ரக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கிகள் கடந்த 2 நாட்களில் விற்பனை செய்து முடிவடைந்துவிட்டதாகவும்
 கூறினார். 
வியாபார நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மின்வெட்டால் ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் மின்பிறப்பாக்கிகளை கொள்முதல் செய்து தங்கள் தொழில் நடவடிக்கைகளை தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் மின்பிறப்பாக்கிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர் என அவர் மேலும் கூறினார். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக