வணக்கம்

வியாழன், 17 மார்ச், 2016

மாயமான விமானங்களகளின் மர்ம பெர்முடா ரகசியம் வெளியானது (காணொளி)

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது.பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது.
இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாக கண்டு பிடிக்கமுடியவில்லை.
கரீபியன் தீவை சேர்ந்த மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
முதன் முறையாக பெர்முடா முக்கோண ரகசியம் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
கடற்பகுதியின் அடித்தட்டில் பெரிய எரிமலை வாய்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த எரிமலைவாய்கள் அரை மைல்கள் பரந்து விரிந்து கிடப்பதாகவும், இதன் ஆழம் சுமார் 150 அடி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவே நார்வே கடற்பகுதியில் அதிக இயற்கை வாயு கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த எரிமலைவாயில் இருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு அப்பகுதிகளில் சிதைவுகளை உருவாக்கி பின்னர் வெடித்துச்சிதறுகின்றது
அதிக எண்ணிக்கையிலான எரிமலைவாய்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதால், இவைகள் அளவுக்கு அதிகமான வாயுவை வெளியேற்றுகின்றன. எரிமலைவாய் அடிக்கடி வெடித்துச்சிதறுவதால் அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்றதொரு காரணங்களால்தான் பெர்முடா கடற்பகுதியிலும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் நடைபெறும் மாறுதல்கள் பெரும் பனிச்சரிவு போன்றோ அல்லது அணு எதிர்வினை போலவோ நடைபெறுவதாக
 கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி கடல் மீத்தேன் வாயுவுடன் கலந்து கொதிநிலைக்கு வருவதால் கப்பல்கள் மூழ்கியதும் மாயமாகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இதனை விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக