வணக்கம்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

போதையில் வாகனம் ஓட்டிய சாரதிக்கு சிறை தண்டனை???

யாழ் மல்லாகம் நீதிபதி மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்தும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.
மானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து நீதவான் அதிகூடிய தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 
மூவருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார். அத்துடன் மூவரையும் 50 மணித்தியாலங்கள் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்குட்படுத்துமாறு சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது நீதவான் அபராதத்துடன் கூடிய சமுதாயம் சார்சீர் திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு
 உத்தரவிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக