யாழ் பருத்தித்துறை முனைப் பகுதியில் அதிகாலை கடலுக்குள் சென்ற மீனவர்கள் மூவரை பாரிய அலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. இச் சம்பவத்தில் இரு மீனவர்கள் பலியாகியுள்ளனர். ஒருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். கடல் அலை இழுத்துச் சென்றவர்களை
தேடும்பணியில் கடற்படையினரின் சுழியோடிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜெனிபேட், ஜோர்ஜ் ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர். கடற்படையினரின் தேடுதலில் ஜோர்ஜ் என்னும் ஒரு மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய மீனவரின் சடலத்தைத் தேடும் பணி தொடர்கின்றது. மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக
கடற்படையினர்
அப்பகுதி மீனவர்களை கடற்பாதுகாப்பு கவசம் (ஜக்கட்) அணிந்து செல்லுமாறு பல தடவைகள் அறிவுறுத்தியுள்ளனர். இருந்தும் அப்பகுதி மீனவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை எனத்
தெரிகின்றது.
மீனவர்களைப் பாதுகாப்பதில் கடற்படையினருக்கு இருக்கும் அக்கறை அப்பகுதிகளில் தொழில்படும் மீனவசங்கங்களுக்கு இருக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடற்படையினரின் மீட்பு நடவடிக்கைகளைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை
மெச்சியுள்ளனர்-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>