யாழ்.அச்சுவேலி-நவற்கிரி புத்தூர் மேற்கு. பரத்தப்புலம் என்னும்
(வடக்குவெளி) பகுதியில் திரு.கந்தையா .சுப்பிராமணியம் என்பவருடைய வீ ட்டுசசுவர்களும். தோட்டவாய்கால்களும் நிலமும் பாதிப்புக்கு உள்ளானது-நிலத்தில் உண்டான திடீர் பிளவுகள் புவியதிர்வல்ல எனவும், அவை நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைகழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைகழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாண குடாநாட்டில் தரையின் கீழ் நீரோட்டங்களும் குகைகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் குழாய் கிணறுகள், ஆழமான
கிணறுகள் அமைத்து அவற்றினுடாக நிலத்தடி நீரை அதிகமாக வெளியே உறிஞ்சி இழுப்பதால் நிலத்தின் கீழ் நிலத்தடி நீரோட்ட இடைவெளி அதிகரித்து சுண்ணாம்பு பாறைகள் உடைவதுடன் அதன் காரணமாக மண் பிடிமாணம் குறைவடைந்து இவ்வாறு நிலம் கீழ் இறங்குகிறது. இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகிறது.
மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கட்டுடை இடிகுண்டு 1200 ஆம் ஆண்டு இவ்வாறான செயற்பாடுகளினாலேயே உருவானது.
இதனைவிட மாத்தளை பகுதியிலும் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது. அத்துடன் டோக்கியோ போன்ற வளர்சியடைந்த நகரங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த சம்பவத்தில் பாரிய சத்தமொன்று ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளமை தொடர்பாக
கேட்டபோது, நிலத்தின் கீழ் ஏற்படுகின்ற கற்பாறைகளுடைய வெடிப்பின் காரணமாக இச்சத்தம் ஏற்படும். இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்க வேண்டுமாயின் இயற்கைக்கு முரணான வகையில் நிலத்தடி நீரை அகத்துறிஞ்சுவதை நிறுத்த வேண்டும். இல்லையேல் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாததாய் அமைந்துவிடும், எனவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>