வணக்கம்

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

வீடு புகுந்து யாழ் ஊரெழுப்பகுதியில் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள்  நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு, இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் கோப்பாய் ஊரெழுப்பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.
காயமடைந்த தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திடீரென பலத்த காற்றுடன் யாழில் வீசிய மினி சூறாவளி

யாழில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளது.
அத்துடன், வீடுகளின் கூரைகளும் காற்றினால்
 தூக்கி வீசப்பட்டுள்ளன.
யாழ். குடாநாட்டில் 14.08.2018. மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் கன மழையும் பெய்துள்ளது.
நேற்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த மினி சூறாவளியால் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன.
காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப்பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ளதுடன் நான்கு வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு பகுதியளவில் சேதமாகியுள்ளன.
அத்துடன் பொன்னாலை குடியிருப்பு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமாகியுள்ளது.
இதேவேளை இப்பகுதியிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
நிலாவரை.கொம் செய்திகள் >>>



தாயும் மகனும் வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் 4 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.$இன்று காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்
கப்பட்டுள்ளனர்
இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில், எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார். இருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர். இதன்போது வீட்டில் இருந்த றொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் வீட்டில் நிற்கும் போது
 நான் அயலில் இருந்த கடைக்கு சென்று விட்டேன். 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டேன். அப்போது அவர்களை காணவில்லை. சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 9 வயது சிறுவன் அம்மா நிற்கிறாவா என தேடி வந்தான். இதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டோம்
 எனத்தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார ஆகியோர் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>