பணத்தை கையாளுவது மிகவும் கடினமான காரியமாகும். அதற்கு பல காரணங்கள் உண்டு. பலருக்கு செல்வத்தை மதிப்பிட்டு வைத்துக்கொள்வது என்பது புரியாத விஷயமாக உள்ளது. இன்றைய
உறுதியற்ற பொருளாதார உலகில் வாழும் நாம் திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம்
நிதி திட்டமிடல் என்னும் விஷயத்தை நாம் சரியாக திட்டமிட்டால் எளிய மற்றும் நிலையான தீர்மானங்களை எடுக்க முடிகின்றது. இதனால் நமது இலக்கையும் எளிமையாக எட்டவும் முடியும். கீழ்வரும் பகுதியில் பணம் சேமிக்கும் ஐந்து வழிகளை
பற்றிப் பார்ப்போம்.
* பட்ஜெட்
ஒரு வீட்டை பராமரிக்கும் நீங்கள் வரவு செலவு கணக்கை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதை நாம் சிறு தொகையாக இருந்தாலும் பெருந்தொகையாக இருந்தாலும் சரி குறித்து வைக்கும் பொழுது பண புழக்கத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பணம் நமக்கு எந்த வகைகளில் வருகின்றது, மாத செலவுகள் என்னென்ன ஆகியவற்றை பதிவு செய்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் அவ்வப்போது ஆய்வு செய்து, நாம் சரியான பாதையில்
தான் செல்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
* கறி மற்றும் மீன் இறைச்சிகளை தவிர்ப்பது
நமக்கு அதிகமாக செலவாகும் உணவு என்றால் அது இறைச்சி தான். இதை நாம் தவிர்த்தால் பெரும் அளவில் பணத்தை சேமிக்க முடியும். காய்கறிகள் மிகவும் சிறந்த உணவுகளாகும். பீன்ஸ், அவரை மற்றும் இதர காய்கறிகளில் உள்ள புரதச் சத்து பிரம்மிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அதிகமாக உள்ளது. இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளது.
* பணி செய்யும் இடங்களில் கவனிக்க
வேண்டியவை
நமது அலுவலகத்தில் கிடைக்கும் பயனுள்ள திட்டங்களை நாம் விட்டு விடக்கூடாது. அதாவது அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு மருத்துவம், விடுமுறைகள், ஆயுள் காப்பீடு, கல்வி உதவித் திட்டங்கள், பாதுகாப்பு முறைகள் மற்றும் பெட்ரோல் பில்லின் தொகையை திருப்பித்தருவது ஆகிய பல வசதிகள் நமக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இலவச தேனீர், உணவு மற்றும் வரும் லாபத்தில் பங்கு தருவது ஆகிய பல வகைகளிலும் உங்களுக்கு வசதிகள்
தரப்படுகின்றது. இதை எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகளை நாம் கடைப்பிடிக்கும் போது சிறிது சிறிதாக சேமித்தாலும் பெரும் தொகையை நாம் பிற்காலத்தில் இதனால் அடைய முடியும்.
* செலவு செய்யும் முன்
சேமிக்க வேண்டும்
ஒவ்வொரு மாதமும் நாம் என்ன செலவு செய்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளில் எது முதன்மையானது என்பதை நாம் பட்டியலிட்டு அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். மளிகை சாமான்கள், தண்ணீர், மின்சாரம், கடன் ஆகியவற்றிற்கான தொகையை செலுத்துவதற்கு முன் நமது தனிப்பட்ட தேவைக்கான தொகை
யை நாம் ஒதுக்கி வைப்பது நல்லது. நமது அத்தியாவசிய தேவைகளை பார்த்துக்கொள்ள இவை உதவியாக இருக்கும். நமது சம்பளத்தை கொடுத்த உடன் சிறிதளவு பணத்தை எடுத்து சேமிப்பு கணக்கில் வைத்துக்
கொள்வதும் நல்லது.
* ஓய்வு காலத்திற்கான சேமிப்பு
இன்னும் ஒரு படி மேலே சென்றுப் பார்க்கும் போது ஓய்வு காலத்திற்கான சேமிப்பை பற்றி
நாம் சிந்திப்பது நல்லது, பொரும்பாலனோர் இதை பற்றி சிந்திப்பதே இல்லை. நாம் எங்கு வாழ வேண்டும், வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு அந்த இலக்கை நோக்கி செயல்படுதல் வேண்டும். இதனால் நாம் யாரையும் நம்பி இருக்காமல் சுதந்திரமாக பிற்காலத்தை கழிக்க முடியும். வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் அதற்கேற்ப சேமிப்புகளை நாம் காப்பீடுகளாக வைத்துக் கொள்வது
சிறந்ததாகும்
இன்றைய காலத்தில் தொலைத்தொடர்பு சாசனத்திற்கு செலவிடும் பணம் மிக அதிகமாக காணப்பட்டுகிறது. முடிந்த வரை இணையத்தளத்தில் இருந்து விலகி இருப்பதால் அதிக பணத்தை சேமிக்கலாம். நீங்கள் இந்த செய்தியைப் படிக்கும் போதும் உங்கள் பணத்தை செலவிடுகிறார்கள்.
பணத்தை சேமிப்போம் எதிர்காலத்தில்
சிறப்பாக வாழ்வோம்