வணக்கம்

திங்கள், 11 மார்ச், 2019

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது எரிபொருளிக் விலை சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் குழு நாளை  கூடவுள்ளது. இதற்கமைய  நாளை நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என  நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருளின் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் . உலக சந்தையில் எரிபொருளின் விலையில் கடந்த வருடத்தின்  மூன்றாம் காலாண்டு தொடக்கம் நிலையான ஒரு தன்மை காணப்படாமையின் காரணமாகவே   எமது  எரிபொருள் விலையில் ஒரு நிர்ணய தன்மையினை பேணமுடியாதுள்ளது.
கடந்த மாதம் 11 ஆம் திகதி  எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமையினை தொடர்ந்து எரிபொருள்  விலை சூத்திர  விலை நிர்ணய குழுவின்  தரப்படுத்தலுக்கு அமைய  ஒக்டைன்  92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 06 ரூபாவிலும்,  ஒக்டைன் 95 ரக  பெற்றோல் 05 ரூபாவிலும், ஒடோ டீசல்  ஒரு லீற்றர்  04 ரூபாவிலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர்  08 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக