வணக்கம்

வியாழன், 25 மே, 2017

விபத்தில் 7 பிள்ளைகளின் தாயார் பரிதாபச் சாவு!!!

யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே எமனாக மாறிய சம்பவம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றது என்று பொலிஸார் 
தெரி­வித்­­த­னர்.
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே விபத்தில் உயிரிழந்தவராவர்.
“யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச் செல்வதற்காக குடும்பப் பெண் காலை 8 மணியளவில் பேருந்துக்காக புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் இருந்த சிமெந்துக் கட்டு மேல் உட்கார்துள்ளார். 
அந்த வேளை அந்தப் பெண் இருந்த கட்டுக்கு நேர் எதிராக இருந்த ஒழுங்கையின் ஊடாக அவரின் மகன் மோட்டார் சைக்கிளில் முதன்மை வீதியில் வந்து ஏறியுள்ளார். முதன்மை வீதியால் பயணித்த  முச்சக்கர வண்டியும் அவரின் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு 
விபத்துக்குள்ளாகின.
விபத்தால் நிலைகுலைந்த முச்சக்கரவண்டி மதிலில் உட்காருந்திருந்த பெண்ணின் மீது மோதுண்டது.
விபத்தில்  படுகாயமடைந்த குடும்பப் பெண்  உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். 
எனினும் போதனா வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பபட்டது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் மகனையும், முச்சக்கர வண்டிச் சாரதியையும் கைது செய்தனர்.
“விபத்தில் சிக்கிய மோட்டர் சைக்கிள் புதியது. அதற்கான இலக்கத்தகடுகூட வழங்கப்படவில்லை.மோட்டர் சைக்கிளைச் செலுத்தியவருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை ” என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

கொடூரமானமுறையில் ஈரானில் ஈழத்து இளைஞர் படுகொலை!

தொழில் நிமித்தம் ஈரான் சென்ற ஈழத்து இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் சடலம் நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு, அலம்பிள் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தையிடம் வாக்கு மூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய உடற்பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக
 குறிப்பிடப்பட்டுள்ளது.

வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

மூதாட்டியை அச்சுறுத்தி உடுவிலில்15 பவுண் நகை கொள்ளை!

உடுவிலில் நேற்று அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர்கள் 15 பவுண் தங்க நகைகள், பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்திவிட்டுச் சில மணித்தியாலங்களாகக் கொள்ளையர் தேடுதல் நடத்தி 15 பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், உண்டியலில் காணப்பட்ட ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.
உடுவில், டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஓடு பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் 5 பேர் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தாம் கொண்டு சென்ற ரோச் லைற் உதவியுடன் அறைகளிலும் அலுமாரிகளிலும் தேடுதல் நடத்தி நகைகளையும் பணத்தையும் எடுத்துச் சென்றனர்.
குறித்த வீட்டில் உள்ள ஏனையவர்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை கொள்ளை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. அங்கு விசாரணை நடத்தப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை என்று 
பொலிஸார் தெரிவித்தனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>புதன், 24 மே, 2017

பஸ் கட்டணங்கள் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும்?

எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.
வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பின் அடிப்படையில் இவ்வாறு ஜூலை மாதம் கட்டண அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்பட
 உள்ளது.
ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 9 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார்.
இம்முறை சிறியளவில் பஸ் கட்டணங்கள் உயர்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சு எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது./
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


செவ்வாய், 16 மே, 2017

யாழில் கடன் தொல்லையால் தந்தை தற்கொலை!

குடும்­பத் தலை­வர் ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
கடன்­பட்டு வெளி­நாடு சென்ற தனது மகன் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தால் கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­யாத நிலை­யில் குறித்த தந்­தை­யார் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
சம்­ப­வத்­தில் சண்­டி­லிப்­பாய் மாசி­யப்­பிட்­டி­யைச் சேர்ந்த முரு­கேசு தம்­பி­ராசா (வய­துய- 58) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.
கட­னைத் திரும்­பச் செலுத்த முடி­ய­வில் லையே என்று கவ­லைப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த குறித்த குடும்­பத் தலை­வர் நேற்­று­முன்­தி­னம் தவ­றான முடிவு எடுத்து நஞ்­ச­ருந்­தி­யுள்­ளார்.
யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் அவ­ருக்கு மேல­திக சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை ப­ய­ன­ளிக்­காது அவர் நேற்­றுக் காலை உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது. இவர் 4 பிள்­ளை­க­ளின் தந்தை.
பொலி­ஸார் மற்­றும் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். உட­லம் குடும்­பத்­தி­ன­ரி­டம் 
நேற்று ஒப்­ப­டைக்­கப்­பட்­
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>