வணக்கம்

புதன், 19 ஜூன், 2019

வழங்கப்படும் விசேட தேவையுடையவர்களுக்கு கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா வழங்கப்பட்டது.32 ஆயிரம் பயனாளிகள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 40,000 பேர் வரை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.


புதன், 5 ஜூன், 2019

இலங்கையர்களுக்கும் புயலுக்குப் பெயர் வைக்க சந்தர்ப்பம்

வட இந்திய பெருங்கடலில் ஏற்படவுள்ள புயல் காற்றுக்குப் பெயர் வைப்பதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இது தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளையும் கருத்துகளையும் வளிமண்டலவியல் திணைக்களம் 
கோரியுள்ளது.
இதன்படி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பெயரை குறிப்பிடுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆகையால் விரும்பியவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கமுடியுமென்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>