வணக்கம்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

புதிய யாழ் பொலிஸ்நிலையம் ராசியில்லையாம் பொலிஸார் கவலை

யாழ்ப்பாணத்தில்  புதிதாக  கட்டப்பட்டு  திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவ லை  தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எப்போது புதிய பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டோமோ அன்றிலிருந்து எமக்கு கண்டம் ஆரம்பித்து விட்டது. இக் கட்டடத்தை கட்டிய பொறியியலாளர்  பொலிஸ்நிலையம் திறந்து   மூன்றாம் நாளே இருதய நோயினால் இறந்து விட்டார். அத்துடன்   கட்டட நிர்மாணங்களை மேற்பார்வை செய்த  மேற்பார்வையாளர் விபத்தில் பலியாகினார்.
புதிய பொலிஸ் நிலையம் திறப்பதற்கு எப்போதோ திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும் பல தடைகள் ஏற்பட்டு நிர்மாணப்பணிகளில் இழுத்தடிப்புக்கள் ஏற்பட்டது. இறுதியில் அவசரமாக திறப்பு விழாவும் செய்யப்பட்டது. திறப்பு விழாவின் போதும் பல இன்னல்கள் தடைகள் ஏற்பட்டது.
அன்றைய தினமே பெண் பொலிஸார் ஒருவர் வழுக்கிவிழுந்து காயமடைந்தார் . புதிய பொலிஸ் நிலையம் திறந்ததில் இருந்தே பிரச்சனைகளும் வர ஆரம்பித்தது. யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தது. யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தண்டனை இடமாற்றம் அடைந்தார் . சுண்ணாகம் கொலை வழக்கில் இங்கு பணியாற்றி வந்த பொலிஸாரும் சிக்கினர்.
தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் ஐந்து பொலிஸார் சிக்கினர். இதன்பின்னர் மக்களிற்கும் எமக்குமிடையிலான விரிசல் அதிகமானது . தொடரந்து பிரச்சினைகள் வந்த வண்ணமே உள்ளது. என குறிப்பிட்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
வெள்ளி, 28 அக்டோபர், 2016

கட்டுரை பேச்சு போட்டிகளில் சாமந்தி அபிராமி என்ற சகோதரிகள் முதலிடம்

நம் தாய்மண்ணான வீரம் செறிந்த மண் வன்னி மண் கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவிகள் !!
அகில இலங்கையில் பேச்சு கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த சாமந்தி அபிராமி என்ற சகோதரிகள். குறித்த இத்தகு ஆற்றல்களை மண்ணில் வளர்த்தெடுப்பதற்கும் காரணமாய் இருந்த அவரது பெற்றோர் ஆசிரியர்கள் வரலாற்றில் முக்கியமாணவர்கள்.
சாமந்தி அபிராமி இவர்களால் அந்த மண்ணின் பெருமையை உலகறியச் செய்தமை வரலாற்றின் முக்கிய பதிவுகளாகும்…இவர்களுக்கு எமம்  இணையங்களின் நல் 
வாழ்த்துக்கள் !!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 20 அக்டோபர், 2016

தட்டாதெருச் சந்தியில் வாகன விபத்து : இருவர் காயம்

யாழ் தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், குறித்த விபத்து காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து தாமதமானது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்டவேளையில் கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த இரு வாகனங்களின் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் மாவட்ட பாடசாலை வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு கௌரவிப்பு


பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டத் தடகளப்போட்டிகள் கடந்த வாரம் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ் மாவட்ட பாடசாலை பதக்கம் வென்றது
அந்தவகையில்,  21 வயது பெண்களுக்கான நீளம்பாய்தலில் வெண்கலப்பதக்கம் வென்ற யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி. ஆரணிக்கு கல்லூரிச் சமூகத்தால் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று நேற்று பெற்றது. 
குறித்த நிகழ்வானது கல்லூரியின்  அதிபர் திருமதி கௌரி சேதுராஜா தலைமையில், இடம்பெற்றது.  இந்நிகழ்வில்   பாடசாலைக்கு பதக்கத்தினை வென்று கொடுத்த மாணவி உடுப்பிட்டிச் சந்தியில் இருந்து பாண்ட் வாத்திய சகிதம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு கல்லூரி மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார். 
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டமை சிறப்பித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நாட்டுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள சீனா! இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதா?

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட செயற்பட்டு வரும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பிறிதொரு நாட்டில் மாற்றியமைக்க சீனா விரும்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்
 வெளியிட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அரசாங்கத்திற்கு அவசியம் இல்லை என்றால், ஒரு வருட காலத்திற்குள் அதனை பங்களாதேஷிற்கு மாற்றியமைக்க முடியும் என சீனா அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் சீனா கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன அரசாங்கத்தின் எக்ஸிம் வங்கி ஊடாக வழங்கப்பட்டுள்ள நிவாரண கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
China Machinery Engineering Corporation (CMEC) தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன் நிர்மாணிப்பு பணிகளையும் முன்னெடுத்திருந்தன. தற்போது வரையில் குறித்த நிறுவனம் மற்றும் இலங்கை மின்சாரசபையினால் இந்த மின் உற்பத்தி நிலையம் நடத்தி
 செல்லப்படுகின்றது.
இந்நிலையில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தெற்காசிய நாடான பங்களாதேஷில் பாரியளவிலான முதலீடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
பங்களாதேஷில் மின்சார தேவைக்கான கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நுரைசோலை அனல் மின் நிலையத்தில் பங்களாதேஷில் அமைப்பதற்கான நடவடிக்கை சீனா மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு நட்டத்தை ஏற்படுத்தாத வகையில் அனல் மின் நிலையத்தை அகற்றி பங்களாதேஷில் நிர்மாணிக்க கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும், இதற்காக வழங்கப்பட்ட கடன் நீண்ட கால கடன் என்பதனால் அந்த முதலீட்டினை பங்களாதேஷ் எதிர்பார்த்துள்ளதாகவும்
 குறிப்பிடப்படுகிறது.
தற்போது வரையில் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள இராண்டாவது அனல் மின் உற்பத்தி நிலையமான திருகோணமலை சம்பூரில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பின் காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதுடன் அதற்கு மாற்று நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் நாட்டின் தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோட்ஸ் மின்சாரம் பெற்றுக்கொள்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 13 அக்டோபர், 2016

போக்குவரத்து பொலிஸாருக்கு எதிராக அதிகரிக்கும் முறைப்பாடுகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும்  போக்குவரத்து பொலிஸாருக்கு எதிரான அதிகமான முறைப்பாடுகள்  பெண்களிடமிருந்தே மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்திருப்பதினால் போக்குவரத்து பொலிசாரின் செயற்பாடு குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவு 
பிறப்பித்துள்ளார்.
கடந்த காலங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கடமையின் நிமித்தம் வீதிகளில் நிற்கும்போது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து செய்யும் இளம் 
பெண்களை நிறுத்தி அவர்களிடமிருந்து பல்வேறு போக்குவரத்து சட்டங்களை கூறி, பல மணி நேரம் அவர்களை வீதிகளில் நிறுத்தி 
கதைப்பது, அவர்களிடம் இருந்து தொலைபேசி இலக்கங்களை பெறுவது, தகாத முறையிலான பல விடங்களை பேசுவது போன்ற பல்வேறுபட்ட முறைப்பாடுகள் மாவட்ட நீதிமன்றுக்கு 
கிடைக்கப்பெற்றுள்ளது.
இந் நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்தும் முகமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளை அழைத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய கவனம் செலுத்துமாறும்ன் போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான நடத்தைகளுக்கு மிக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் மா.கணேசராஜா கட்டளை பிறப்பித்துள்ளார். 
போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மாவட்டத்தின் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியதுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளையும் அழைத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அதற்கான கட்டளைகளையும்  நீதவான் 
தெரிவித்துள்ளார். 
இதேவேளை கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களிலிருந்து அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்துக் குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட 
கலந்துரையாடல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அவர்களின் அழைப்பின் பேரில் மாவட்ட திறந்த நீதிமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 8 அக்டோபர், 2016

ஆறு வயது சிறுமியை தாக்கிய தாயின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ் நீர்வேலிப் பகுதியில்  6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று உத்தரவிட்டார் என
 தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி முகப்புத்தகத்தில் வைரலாக பரவியது.
அந்த சிறுமியை தாக்கிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 5 அக்டோபர், 2016

புலமைப்பரிசில் தரம் 5 பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2016 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வௌியிடப்பட்டுள்ளன. 
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 3 அக்டோபர், 2016

சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ் மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப்போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுராதபுரத்தில்
 இடம்பெற்து.
24 கிலோமீற்றர் கொண்ட இந்த போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை
 தேடித்தந்துள்ளனர்.
அந்த வகையில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவி விதுசனா வெள்ளிப் பதக்கத்தினையும், யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.