வணக்கம்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நாட்டுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள சீனா! இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதா?

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட செயற்பட்டு வரும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பிறிதொரு நாட்டில் மாற்றியமைக்க சீனா விரும்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்
 வெளியிட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அரசாங்கத்திற்கு அவசியம் இல்லை என்றால், ஒரு வருட காலத்திற்குள் அதனை பங்களாதேஷிற்கு மாற்றியமைக்க முடியும் என சீனா அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் சீனா கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன அரசாங்கத்தின் எக்ஸிம் வங்கி ஊடாக வழங்கப்பட்டுள்ள நிவாரண கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
China Machinery Engineering Corporation (CMEC) தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன் நிர்மாணிப்பு பணிகளையும் முன்னெடுத்திருந்தன. தற்போது வரையில் குறித்த நிறுவனம் மற்றும் இலங்கை மின்சாரசபையினால் இந்த மின் உற்பத்தி நிலையம் நடத்தி
 செல்லப்படுகின்றது.
இந்நிலையில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தெற்காசிய நாடான பங்களாதேஷில் பாரியளவிலான முதலீடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
பங்களாதேஷில் மின்சார தேவைக்கான கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நுரைசோலை அனல் மின் நிலையத்தில் பங்களாதேஷில் அமைப்பதற்கான நடவடிக்கை சீனா மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு நட்டத்தை ஏற்படுத்தாத வகையில் அனல் மின் நிலையத்தை அகற்றி பங்களாதேஷில் நிர்மாணிக்க கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும், இதற்காக வழங்கப்பட்ட கடன் நீண்ட கால கடன் என்பதனால் அந்த முதலீட்டினை பங்களாதேஷ் எதிர்பார்த்துள்ளதாகவும்
 குறிப்பிடப்படுகிறது.
தற்போது வரையில் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள இராண்டாவது அனல் மின் உற்பத்தி நிலையமான திருகோணமலை சம்பூரில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பின் காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதுடன் அதற்கு மாற்று நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் நாட்டின் தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோட்ஸ் மின்சாரம் பெற்றுக்கொள்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக