வணக்கம்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

கடலுக்குள் சென்ற மீனவர்களில் இருவர் மரணம் ஒருவர்உயிர்தப்பியுள்ளார்?

யாழ் பருத்தித்துறை முனைப் பகுதியில் அதிகாலை கடலுக்குள் சென்ற மீனவர்கள் மூவரை பாரிய அலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. இச் சம்பவத்தில் இரு மீனவர்கள் பலியாகியுள்ளனர். ஒருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். கடல் அலை இழுத்துச் சென்றவர்களை 
தேடும்பணியில் கடற்படையினரின் சுழியோடிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜெனிபேட், ஜோர்ஜ் ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர். கடற்படையினரின் தேடுதலில் ஜோர்ஜ் என்னும் ஒரு மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய மீனவரின் சடலத்தைத் தேடும் பணி தொடர்கின்றது. மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக
 கடற்படையினர்
 அப்பகுதி மீனவர்களை கடற்பாதுகாப்பு கவசம் (ஜக்கட்) அணிந்து செல்லுமாறு பல தடவைகள் அறிவுறுத்தியுள்ளனர். இருந்தும் அப்பகுதி மீனவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை எனத்
 தெரிகின்றது.
 மீனவர்களைப் பாதுகாப்பதில் கடற்படையினருக்கு இருக்கும் அக்கறை அப்பகுதிகளில் தொழில்படும் மீனவசங்கங்களுக்கு இருக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடற்படையினரின் மீட்பு நடவடிக்கைகளைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை 
மெச்சியுள்ளனர்-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

யாழ் புங்குடுதீவு- அனலைதீவுக்கு இடையில் பயணித்த படகு மூழ்கியது!

புங்குடுதீவு- அனலைதீவு இடையே சேவையில் ஈடுபட்டுருந்த நோயாளர் காவு படகு கடலில் வீசீய காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது.
வடமாகாண சுகாதார அமைச்சினால் யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையில் நோயாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு இன்றைய தினம் காலை கடல் கொந்தளிப்பினால் கடலில் மூழ்கியுள்ளது.
யாழ். மற்றும் அனலைதீவு இடையே இடம்பெறும் போக்குவரத்தினால் நோயாளர்கள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து குறித்த படகு அண்மையில் சுகாதார அமைச்சினால் வட மாகாணசபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்து.
இருப்பினும் குறித்த படகு விபத்திற்கு உள்ளானதால் இத்தீவிற்கு நோயாளர் படகு சேவை பாதிப்படைந்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சட்டவிரோத சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது!!!

யாழ்ப்பாணம்  கொழும்புத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாக சாராய போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த புலிக்குட்டி என அழைக்கப்படும் 44 வயதுடைய தர்மலிங்கம் தர்மகுலராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன்
 தெரிவித்துள்ளார்.
நபரொருவர் தனது உடமையில் பத்துப் போத்தல் சாராயத்தையே வைத்திருக்கக்கூடிய நிலையில், குறித்த நபர் தமது உடமையில் 55 சாராய போத்தல்களை வைத்திருந்தமையாலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்றும், நாளையும் 
மதுபானசாலைகள் திறக்கப்படாமையால் இப்போத்தல்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகவே வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தியிருந்ததுடன், 6 மாத கால கடூழிய சிறைத் 
தண்டனையும் பெற்றிருந்தார். அத்துடன், மேலும் ஒரு குற்றத்துக்காக நீதிமன்றால் 300 மணித்தியாலங்கள் நற்பணி செய்வதற்கு பணிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>செவ்வாய், 22 டிசம்பர், 2015

செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

யாழ்.பிரதான வீதியிலுள்ள மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், லங்கா பெற்றோலிய நிறுவனத்தின் முகாமைப்பணிப்பாளர் சியாம் போரா ஆகியோர் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.
மேற்படி இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் நிர்மாணிப்பதற்கான அனுமதி முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. 
எரிபொருள் அமையப் பெறுவதால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளின் நீர் மாசுபடும் வீதியின் வளைவில் எரிபொருள் நிலையம் அமையப் பெறுவதால் எரிபொருள் நிலையத்துக்குள் உள்நுழையும் மற்றும் 
வெளியேறும்
 வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படும் ஆகிய விடயங்கள் அப்பகுதியிலுள்ள பொதுமக்களால் மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, கொடுக்கப்பட்ட அனுமதியை முதல்வர் இரத்துச் செய்திருந்தார்.
இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எரிபொருள் நிலையத்தை அமைத்த முன்னாள் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கொடுத்த அனுமதியை 
இரத்துச் செய்ய முடியாது, அனுமதி கொடுக்க முன்னரே பரிசீலனை செய்திருக்க வேண்டும் மற்றும் அனுமதியை இரத்துச் செய்வது தொடர்பில் சரியான காரணங்களை மாநகர சபை நீதிமன்றத்தில் 
சமர்ப்பிக்க தவறியுள்ளது எனத் தெரிவித்த நீதிமன்றம், அனுமதி செல்லுபடியாகும் என அறிவித்தது. 
மேலும் இதனையடுத்து, குறித்த இடத்தில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 19 டிசம்பர், 2015

.பொலிஸார் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டமாக, யாழ்.மாவட்டத்தில் சகல பகுதகளிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் துண்டு பிரசுரங்களை பொலிஸார் ஒட்டியுள்ளனர்.
குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையினை 
மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் ஹெரோயின் மற்றும் போதைக்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த உதவுமாறு பொலிஸாரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி இலக்கமும்
 போடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 16 டிசம்பர், 2015

வெங்கனாந்தி பாம்பு 22 கிலோ எடையுடன் மக்கள் அச்சத்தில்

யாழ் சாவகச்சேரி,  தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர்.
இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
22கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது.
காடுகளில் வசிக்கும் வென்கனாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,  இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர்

சனி, 12 டிசம்பர், 2015

மாணவர்கள் யாழில் சீருடைகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிலையங்கள்

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
அபி றேடர்ஸ், இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம்
.சிறி கணேஷ் புடவையகம், இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம்
ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ், இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம்.
சென்னை பசன் வேல்ட் ,இல-63 ,பெரிய கடை ,யாழ்ப்பாணம்.
கணேசன் ஸ்ரோர்ஸ், இல-41,பெரிய கடை,
யாழ்ப்பாணம்.
குமாரசாமி ரெக்ஸ் ,இல-44|42, பெரிய கடை யாழ்ப்பாணம்.
சிற்றி ரெக்ஸ், இல-256, பருத்தித் துறை வீதி, யாழ்ப்பாணம் .
ஏகாம்பரம் ரெக்ஸ்,இல-747 ,மின்சார நிலைய வீதி,யாழ்ப்பாணம்.
கீர்த்திகா ரெக்ஸ் உரும்பிராய்ச் சந்தி ,உரும்பிராய்.
வலி.கிழக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
பருத்தித்துறை வீதி, ஆவரங்கால்,புத்தூர் .
கணேசன் ஸ்ரோர்ஸ் ,இல-20,கே.கே.எஸ்.வீதி,யாழ்ப்பாணம்.
டொப்பாஸ் ,இல-72,பெரிய கடை வீதி இயாழ்ப்பாணம்
டொப்பாஸ் மோல் ,இல-195,பெரிய கடை வீதி,யாழ்ப்பாணம்
வாணி ரெக்ஸ் ,இல-81,பெரிய கடை வீதி ,யாழ்ப்பாணம்.
சிங்கம்ஸ் ரெக்ஸ் ரைல்ஸ் ,இல-172,காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்
ஆர்.வி.ஆடையகம், இல-104,பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம்
மகா சில்க்ஸ் ,இல-40,நவீன சந்தை,யாழ்ப்பாணம்.
ரி.சி.ரி.பல்பொருள் வாணிபம் ,இல-527,நாவலர் வீதி,நல்லூர்.
பி.வி.எஸ் தையல் புடவையகம், புத்தூர்
லலிதா புடவை மாளிகை, இல -5|6 ,நவீன சந்தை யாழ்ப்பாணம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 10 டிசம்பர், 2015

மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவில்

இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோரங்க் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

இரண்டு பிள்ளைகளின் தந்தை பணக்கார பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்தர் ! ! !

ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் மணம் முடிக்கவில்லை என்று கூறி 24வயதான பணக்கார பெண் ஒருவரை திருமணம் முடித்து
 தேன்நிலவில்
 இருக்கும் போது உண்மையான மனைவியால் பிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே தாம் மணம் புரிந்த மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக உள்ள 24 வயது பெண்ணை, ஏமாற்றி தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார்.
இதன் நிமித்தம் தமது தாயாரைப் போன்று நடிப்பதற்காக பெண் ஒருவருக்கு பணம் வழங்கப்பட்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டிந்தது.
அதேவேளை, திருமண நிகழ்வுக்கு ஏழு இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுமணத் தம்பதிகள் தேன்நிலவில் இருக்கும் போது உண்மையான மனைவியும் அவர் பணிபுரியும் வைத்தியசாலையின் பணியாளர்களும் ஹொட்டேலுக்குள் புகுந்து இருவரையும் பிடித்து மீரிஹன பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஆண், திருமணமானவர் என்று தமக்கு தெரியாது என 24 வயதான பணக்கார பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் 
அளித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வானிலையின் சீரற்றத்தல் பராக்கிரம சமுத்திரத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

பொலன்னறுவை பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் 
அறிவித்துள்ளது.
அத்துடன், கவுடுள்ள வாவியின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், நிமிடத்திற்கு 1200 கனஅடி நீர் பராக்கிரம சமுத்திரத்தின் ஒரு வான் கதவின் ஊடாக வெளியேறுவதாகவும், கவுடுள்ள வாவியில் இருந்து நிமிடத்திற்கு 1680 கனஅடி நீர் வெளியேறுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி, மகாவலி கங்கையின் ஊடாக அதிகமாக நீ்ர் பெருக்கெடுத்தோடுவதால் மட்டகளப்பு - பொலன்னறுவை பிரதான வீதியானது நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அந்த பாதையுடனான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாவதி பகுதிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளதால் அந்த பாதையுடனான போக்குவரத்திற்கு தடை
 ஏற்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகளவான மழை பெய்யும் என எதிர்வு 
கூறப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 4 டிசம்பர், 2015

ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழதுள்ளார்!

 கிளிநொச்சி, வட்டக்கச்சி, தச்சன் வீதியிலுள்ள மரப்பட்டறை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (04) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மரம் 
அரியும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அவரை 
கிளிநொச்சி 
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தமை வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்காக 
கிளிநொச்சி
 மாவட்ட பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 டிசம்பர், 2015

மரக்கறிகளின் விலைகள் யாழ் சந்தைகளில் அதிகரிப்பு!

யாழ் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.அண்மைய நாட்களில் அதிகளவான மழை பெய்தமையால் மரக்கறிகளின் உற்பத்தி 
குறைவடைந்தது. 
 இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,  1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.   
கத்தரிக்காய்
 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், பயிற்றங்காய் 1 கிலோகிராம் 240 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கும், வெண்டி 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், கரட் 1 கிலோகிராம் 350 ரூபாய்க்கும், போஞ்சி 1 கிலோகிராம் 260 ரூபாய்க்கும், புடலங்காய் 1 கிலோகிராம் 150 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 1 கிலேகிராம் 120 ரூபாய்க்கும், லீட்ஸ் 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், 
பூசணிக்காய்
1 கிலோகிராம் 50 ரூபாய்க்கும், வாழைக்காய் 1 கிலோகிராம் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.  சின்ன வெங்காய் 1 கிலோகிராம் 140 ரூபாய்க்கும், பொன்னாங்காணி 1 பிடி 30 ரூபாய்க்கும், 
வல்லாரை 
1 பிடி 20 ரூபாய்க்கும், தேசிக்காய் 1 கிலோகிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மழையால் தொழில்களை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள அன்றாடத் தொழில் செய்து பிழைக்கும்  மக்கள் இந்த விலை அதிகரிப்புகளினால் மேலும் 
பாதிக்கப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>