வணக்கம்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

யாழ்.பிரதான வீதியிலுள்ள மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், லங்கா பெற்றோலிய நிறுவனத்தின் முகாமைப்பணிப்பாளர் சியாம் போரா ஆகியோர் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.
மேற்படி இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் நிர்மாணிப்பதற்கான அனுமதி முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. 
எரிபொருள் அமையப் பெறுவதால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளின் நீர் மாசுபடும் வீதியின் வளைவில் எரிபொருள் நிலையம் அமையப் பெறுவதால் எரிபொருள் நிலையத்துக்குள் உள்நுழையும் மற்றும் 
வெளியேறும்
 வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படும் ஆகிய விடயங்கள் அப்பகுதியிலுள்ள பொதுமக்களால் மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, கொடுக்கப்பட்ட அனுமதியை முதல்வர் இரத்துச் செய்திருந்தார்.
இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எரிபொருள் நிலையத்தை அமைத்த முன்னாள் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கொடுத்த அனுமதியை 
இரத்துச் செய்ய முடியாது, அனுமதி கொடுக்க முன்னரே பரிசீலனை செய்திருக்க வேண்டும் மற்றும் அனுமதியை இரத்துச் செய்வது தொடர்பில் சரியான காரணங்களை மாநகர சபை நீதிமன்றத்தில் 
சமர்ப்பிக்க தவறியுள்ளது எனத் தெரிவித்த நீதிமன்றம், அனுமதி செல்லுபடியாகும் என அறிவித்தது. 
மேலும் இதனையடுத்து, குறித்த இடத்தில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக