யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாக சாராய போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த புலிக்குட்டி என அழைக்கப்படும் 44 வயதுடைய தர்மலிங்கம் தர்மகுலராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன்
தெரிவித்துள்ளார்.
நபரொருவர் தனது உடமையில் பத்துப் போத்தல் சாராயத்தையே வைத்திருக்கக்கூடிய நிலையில், குறித்த நபர் தமது உடமையில் 55 சாராய போத்தல்களை வைத்திருந்தமையாலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்றும், நாளையும்
மதுபானசாலைகள் திறக்கப்படாமையால் இப்போத்தல்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகவே வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தியிருந்ததுடன், 6 மாத கால கடூழிய சிறைத்
தண்டனையும் பெற்றிருந்தார். அத்துடன், மேலும் ஒரு குற்றத்துக்காக நீதிமன்றால் 300 மணித்தியாலங்கள் நற்பணி செய்வதற்கு பணிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக