வணக்கம்

சனி, 21 ஜனவரி, 2017

பலத்த காற்றுடன் யாழ்.குடாநாட்டில் இன்று பரவலாகக் கடும் மழை

யாழ்.குடாநாட்டில் இன்று (21.01.2017) பிற்பகல்-03 மணி தொடக்கம் தற்போது வரை பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின் தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க 
முடிகிறது.
கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. இதேவேளை,இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரையும் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
வெள்ளி, 13 ஜனவரி, 2017

புனரமைக்கப்பட்ட நானுஓயா பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு

நுவரெலியா - நானுஓயாவில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த பொலிஸ் நிலையம் திருத்தியமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பொலிஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் இருந்த போதும் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்தது.
அதற்கு தேவையான நிதி கடந்த அரசாங்கங்களினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் நானுஓயா பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையத்தை திருத்தியமைக்க 37 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
இத்தொகை பொலிஸ் நிலைய புனரமைப்பு பணிகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
இருந்த போதும் நானுஓயா பொலிஸ் நிலையத்தின் 18ஆவது பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரியந்த அமரசிங்க மற்றும் பொலிஸ் உதவி அதிகாரி அபேசிங்கவின் கடும் முயற்சியால் சிரமதான முறையில் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டது.
இதன்பின்னரே குறித்த பொலிஸ் நிலையத்தின் திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சகல மதத்தலைவர்களும் கலந்து கொண்டதோடு பிரதம அதிதியாக நுவரெலியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்மசிரி முனசிங்க, டீ.எம்.யூ.எம்.திஸாநாயக்க, பிரிதி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.தஸநாயக்க, பிரிதி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஐ.அனுர பண்டார, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து
 கொண்டிருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சத்திர சிகிச்சை உபகரணங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சத்திர சிகிச்சை உபகரணங்கள் நேற்று(12) மாலை 3.00 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கோட்போர் கூடத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி தனது 20 வருட சேவை நிறைவினை கொண்டாடும் இந்த ஆண்டில் “கூட்டாண்மை சமூக பொறுப்பு” திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 15 அரச வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை பிரிவுகளுக்காக 24.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீ.எல்.சி யின் மன்னார் கிளை முகாமையாளர் எவ்.ஆர்.மனோகாந்த் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரெலா ரதனி யூட் முன்னிலையில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் சசிகரனிடம் வழங்கி வைத்தார்.
இதன் போது வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
திங்கள், 9 ஜனவரி, 2017

பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,

தனியார் பஸ்களில் தூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும்பிரயாணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகதேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிணங்க, பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,பிரயாணச் சீட்டுத் தொகையை இரு மடங்காகவும் அறவிடப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டம் ஆணைக்குழுவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுத்தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர 
தெரிவித்துள்ளார்.
இதேவேளை,அண்மையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணம் 1000 ரூபாவாக அதிகரிக்கஅரசாங்கம் 
தீர்மானித்திருந்தது.
இருப்பினும்,தனியார் பஸ்களில் இந்த சட்டம் இருக்கவில்லை ஆனால் தற்பொழுதுதனியார் பஸ்களுக்கும் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
எனவே பஸ்களில் பயணிக்கும் பொது மக்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறுதேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் ராகு - கேது, குரு, சனிப்பெயர்ச்சி..!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017இல்) குரு, ராகு - கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான 
பலன்கள் ஏற்படும்.
சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். குரு ஓராண்டு, ராகு- கேது ஒன்றரை ஆண்டு, சனி இரண்டரை ஆண்டுகள் என ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் சஞ்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும்.
இவற்றில் குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறும் போது கோயில்களின் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் செய்யப்படும்.
குரு ஆண்டுதோறும் இடம் பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப்பெயர்ச்சி ஏற்படும். ராகு-கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் ராகு-கேது பெயர்ச்சி இருக்காது.
அதேபோல, சனிப் பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதால் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு சனிப் பெயர்ச்சி
 இருக்காது.
ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு-கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 27ஆம் திகதி ராகு- கேது பெயர்ச்சி, செப்டம்பர் 2ஆம் திகதி குருப் பெயர்ச்சி, டிசம்பர் 19-ம் திகதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>