வணக்கம்

வியாழன், 29 டிசம்பர், 2016

சிகை ஒப்பனை நிலைய உரிமையாளர்களுக்கு ஓர் செய்த?

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 19ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையே இவ்வாறு நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளமையால் மாணவர்களின் நலன்கருதி விடுமுறை நாளான ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொழில் நிலையங்களைத் திறந்து மக்களுக்குச் சேவையாற்றுமாறும் யாழ்.மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் கேட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 28 டிசம்பர், 2016

.-தனியார் -· இ.போ.ச பேருந்து சாரதிகள் மோதல்!

வவுனியா இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேருந்து சாரதி தாக்கியதில் படுகாயமடைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (27) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா - செட்டிகுளம் செல்லவிருந்த அரச பேருந்தில் பயணிகளை ஏறிக்கொண்டிரு க்கையில் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லவிருந்த தனியார் பேருந்து சாரதிக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது
இதில் கைகலப்பில் ஈடுபட்ட இரு சாரதிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இ.போ.ச சாரதியான மகேஸ்வரன் (வயது 35) மீது தனியார் பேருந்து சாரதி தாக்கியதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேருந்து சாரதியிடம் நீங்கள் முதலில் செல்கி ன்றீர்களா? அல்லது நான் முதலில் செல்லவா? என்று இ.போ.ச பேருந்து சாரதி கேட்டதை யடுத்து பேருந்தில் இருந்த தனியார் பேருந்து சாரதி தனது பேருந்து கதவைத்திறந்து சார தியின் முகத்தில் தாக்கியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 27 டிசம்பர், 2016

முற்றாக பொலித்தீன் பாவனை 2017இல் இருந்து தடை?

2017 ஆம் ஆண்டிலிருந்து பொலித்தின் ,பிளாஸ்ரிக், ரெஜிபோம், பாவனைகளை  தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே. எச் முதுகுடா ஆராச்சி தெரவித்து ள்ளார்.
இவற்றின் தடை தொடர்பிலான சிபாரிசுகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துகள் , யோசனைகளின் மீது அடுத்தாண்டு முதல் சிபாரிசுகள் அமுலாக்கப்படும்.
புதிய உத்தரவுகள் அமுலாகும் முன்னர்
 உற்பத்தியாளர்களும்.பொதுமக்களும் புதிய ஏற்பாட்டுக்கு உகந்தவகையில் பழகி க்கொள்ள வேண்டும் இதற்கு 6 – 7 மாதங்கள் சலுகை காலமாக வழங்கப்படும் 
தற்போது 20 மைக்ரோன்களுக்கு
 குறைந்த பொலித்தின் இறக்குமதி செய்வதை நாம் முற்றாக நிறுத்தியுள்ளதுடன், விற்பனையாளர்களை முற்றுகையிட்டு வருவதாக 
பணி ப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 19 டிசம்பர், 2016

பொலிசாரால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட வயோதிபத் தாய் மீட்பு!

      வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியில் கடந்த பல நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 70வயதுடைய வயோதிபத் தாய் இன்று (18.12.2016) மாலை 5.30மணியளவில் பொலிசாரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்த 70வயதுடைய பெண் வயோதிபர் கணவன் கடந்த 7நாட்களுக்கு முன்னர் உறவினருடைய வீட்டிற்கு கொழும்பு சென்றுள்ளார்.
 குறித்த வயோதிப தாய் கடந்த சில தினங்களாக அருகிலுள்ள கடையில் சாப்பாடு எடுத்துச்சாப்பிட்டு வந்துள்ளார் எனினும் நேற்றும் இன்றும் குறித்த வயோதிபர் வெளியே செல்லாததால் சந்தேகம் ஏற்பட்ட பக்கத்து வீட்டு 
உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்குத் தகவல் வழங்கியடையடுத்து இன்று மாலை 5.30மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் பெண்பொலிசாரின் உதவியுடன் பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்றபோது குறித்த வயோதிப தாய் மயக்கமற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 17 டிசம்பர், 2016

இயந்திரம் கண்டுபிடித்த மாணவிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கபபடடது !

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே இன்று(16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இம்மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை தயாமதி பிரேம்குமாருக்குப் பாராட்டுக்களையும் 
தெரிவித்தார்.
பாடசாலை ரீதியாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான குறித்த மாணவி இறுதிப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற புத்தாக்க போட்டியிலும் இப்பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்ற மாணவன் ஜீவரெத்தினம் பிரதீபன் நீரூற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தமைக்காக தேசிய மட்டத்தில் 5 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>