வணக்கம்

சனி, 17 டிசம்பர், 2016

இயந்திரம் கண்டுபிடித்த மாணவிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கபபடடது !

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே இன்று(16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இம்மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை தயாமதி பிரேம்குமாருக்குப் பாராட்டுக்களையும் 
தெரிவித்தார்.
பாடசாலை ரீதியாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான குறித்த மாணவி இறுதிப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற புத்தாக்க போட்டியிலும் இப்பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்ற மாணவன் ஜீவரெத்தினம் பிரதீபன் நீரூற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தமைக்காக தேசிய மட்டத்தில் 5 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக