கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனத்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கிச் பயணித்த இளைஞனின் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இதன் போது இளைஞன் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் தலைக் கவசத்துடன் உட்புகுந்து தொங்கிய நிலையில் பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் பலியான இளைஞன் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இன்று மாலை மல்லாவியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே
பலியாகியுள்ளார்.
உந்துருளியில் வேகமாக சென்றபோது உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த இளைஞன் மின்சார கம்பத்துடன் மோதுண்டு இரண்டு தூண்களுக்கு இடையில் சிக்கிய நிலையில்
உயிரிழந்துள்ளார்.
சடலம் மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>