சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எ.எம்.எம்.றியால் இன்று தீர்ப்பளித்தார். சுகாதார பரிசோதகர் பி.சஞ்ஜீவன், நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐஸ்கிறீம் வானின் சாரதிக்கும் விற்பனையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு
யாழில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலையை தொடர்ந்து இன்று மழை பெய்து வருகின்றது.
இன்று முற்பகல் யாழ் நகர் பகுதி மற்றும் வலிகாமம் மேற்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
வட பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவான வெப்பநிலை காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இன்று திடிரென மழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் மகிழ்சியடைந்துள்ளனர்.
கடும் வெப்பத்தின் கொடுமையை தாங்க முடியாது நேற்றைய தினம் முதியவர் ஒருவர் உயிரிழந்தமை
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 4 பேர் சவூதி அரேபியாவில் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை என்று கூறி அவர்களது உறவினர்கள் நாகபட்டினம் ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர். காலைவாணன், ராமன், எபனேசர் லுகாஸ், தாமஸ் ஆகிய 4 பேரும் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை செல்போனில் படம் பிடித்து அதை தங்கள் உறவினர்களுக்கு
அனுப்பியுள்ளனர்.
ஓட்டுநர் வேலைக்காக சவூதி வந்த தங்களுக்கு கால்நடைகளை வேலை தரப்பட்டதாகவும், அதை செய்ய மறுத்ததால் அடித்து உதைக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை நேர வகுப்பு தொடர்பில் பேச வேண்டும் என்று அழைப்பு
விடுத்திருக்கின்றார்.
ஆனால் குறித்த மாணவியின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளமையினால் அந்த தகவலை அதிபருக்கு தெரியப்படுத்த மாணவி பாடசாலைக்கு
சென்றுள்ளார்.
இதன் போதே தனிமையில் இருந்த அதிபர் குறித்த ஒன்பதாம் ஆண்டு மாணவியை தனது மடியில் இருத்தி பெண்களுக்குரிய உடல் அங்கங்களை பிடித்து வருடியதோடு முத்தமும் கொடுத்துள்ளார்.
இதனால் மாணவி குழப்பமடைந்து அதிபரின் பிடியிலிருந்து விடுப்பட்டு வெளியேறிய போது 1500 பணத்தை வழங்கி வெளியில் தகவலை கூறவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவி பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதேவேளை நேற்று செவ்வாய் கிழமை விடுமுறை நாளன்றும் அதே பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஏழு மாணவன் ஒருவரிடம் குறித்த மாணவியை பாடசாலைக்கு வருமாறு அதிபர் தகவல் அனுப்பியுள்ளார். ஆனால் மாணவி
செல்லவில்லை.
இந்த நிலையில் குறித்த மாணவி சக மாணவிகளிடம் அதிபர் இவ்வாறு தன்னோடு நடந்துகொண்டதாகவும் எனவே உங்ளையும் அதிபர் அழைத்தால் செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அத்தோடு நேற்று செவ்வாய் கிழமை தனது பெற்றோர்களிடம் காரணம் தெரிவிக்காமல் இனி பாடசாலைக்கு செல்லமாட்டேன் எனத்
தெரிவித்துளளார்.
இதன் போதே குறித்த சம்பவம் பற்றி மாணவியின் நண்பி ஒருவரினால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டமையினை அடுத்து இன்று பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் ஒன்று திரண்டதோடு பொலிஸாருக்கும் தகவல்
அனுப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் பாடசாலை அதிபரான சந்தேக நபர் நாகராசா உதயகுமார் என்பவரை கைது
செய்துள்ளனர்.
மேலும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் கரைச்சி கோட்டக் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் ஆகியோரும் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்துள்ளனர்.
மலையகத்தில் இருந்து வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வந்த மக்களே பன்னங்கண்டி பிரதேசத்தில் வாழ்கின்றனர். இவர்கள் இன்றும் மிக
ஏழைகளாக வாழ்ந்து வரும் நிலையில் பாடசாலையின் சில ஆசிரியர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை நோக்கி ஸ்டேட் (தோட்டக்காட்டு மக்கள்) மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என்று மிக மோசமாக பிரதேசவாதம் பேசியுள்ளமையும் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது..
தற்போதைய செய்தி:விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்கொலை பெல்ட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.படுகாயம் அடைந்தவர்களில் பலர் தங்கள் கால்களை இழந்துள்ளனர் .
நடைபெற்றுள்ள இரண்டு தாக்குதல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களே என பெல்ஜியத்தின் தலைமை அரச வழக்கறிஞர் கூறுகிறார்
இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் சிலர் கருத்துக்களை கூறி வருவதாக பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டிடியே ரெய்ண்டர்
தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரில் உடலுக்கு அருகில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஜாவுண்டெம் விமான நிலையத்தில் முதல் தாக்குதல்
இடம்பெற்றது
இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
விமான நிலையத்தில் 81 பேரும், ரயில் நிலையத்தில் 55 பேரும் காயமடைந்துள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.
பிரஸல்ஸ் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என பெல்ஜியப் பிரதமர் ஷார்ல் மிஷேல் கூறுகிறார்.
எது நடைபெறும் என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்தோமோ அது நடைபெற்றுவிட்டது எனக் கூறியுள்ள அவர், மிகவும் துக்ககரமான ஒரு நேரத்தை நாடு எதிர்கொள்வதாகவும்
தெரிவித்துள்ளார்.
---------------
பெல்ஜியத் தலைநகர் பிரச்ஸ்லில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதாக பிரஸல்ஸிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
பெல்ஜியம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது என பிரதமர் மிஷேல் கூறுகிறார்.
பல இடங்களில் இராணுவத்தினர் கூடுதலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக பெல்ஜிய பிரதமர் ஷார்ல் மிஷேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெல்ஜியம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்
விமான நிலையத்தில் 14 பேரும் ரயில் நிலையத்தில் 20 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக இப்போது வரும் தகவல்கள் கூறுகின்றன
------------
இந்தத் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக கோழைகளால் நடத்தப்பட்டவை என பெல்ஜிய அதிபர் ஷார்ல் மிஷேல் கூறியுள்ளார். இந்த நாள் ஒரு கருப்பு தினம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சிலர்
தாக்குதல்களை அடுத்து பிரஸல்ஸ் நகரின் அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன.
நகரின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அணுமின் நிலையங்களில் மேம்பட்ட பாதுகாப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலகளவில் எழுந்துள்ள அச்சுறுத்தலில் வெளிப்பாடே பிரஸல்ஸ் நகரில் இடம்பெற்றத் தாக்குதல்கள் என பிரெஞ்ச் அதிபர் ஒலாந் கூறியுள்ளார்.
இப்படியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச அளவில் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்
பயங்கரவாதத்துக்கு எதிரான நீண்டபோரை உலகம் எதிர்கொண்டு வருகிறது எனவும் பிரெஞ்ச் அதிபர் எச்சரித்துள்ளார்.
பிரஸல்ஸின் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் இதுவரை குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஐரோப்பா மீதான தாக்குதல் என பன்னாட்டுத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஜாவுன்டெம் விமான நிலையத்தில் நடைபெற்றத் தாக்குதலில் 11 பேரும், பிரஸல்ஸ் சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்றத் தாக்குதலில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் குறைந்தது 35 பேர் காயமடைந்துள்ளனர்
பெல்ஜியத்தில் நடைபெற்றுள்ள இத்தாக்குதல்கள் ஐரோப்பாவை இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸ் சுரங்க ரயில் சேவை மூடப்பட்டுள்ளது
தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகே இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திலுள்ள அனைவரும் அலுவலகத்தைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடைபெற்றுள்ள இத்தாக்குதல்கள் பயங்கரவாத்ததுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் முடுக்கிவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன என்று பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெஹ்நாஹ் காசநோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரஸல்ஸுக்கு வந்துசெல்லும் அனைத்து யூரோஸ்டார் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
----------------------
பிரஸல்ஸ் நகரில் இடம்பெற்றத் தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து பெல்ஜியத்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடும் பாதுகாப்பு மற்றும் சோதனைகள்
யூரோஸ்டார் மூலம் லீலுக்கு பயணம் செய்து அங்கிருந்து வாகனம் மூலம் பிரஸல்ஸ் செல்பவர்கள் சோதனைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரஸ்ஸல்ஸிலுள்ள அரண்மனையில் சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்வர்ப் ரயில் நிலையத்திலுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு, பிரஸ்ஸல்ஸிலுள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என பெல்ஜிய அரச வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
----------------------------
பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸின் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஜாவெண்டென் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன
பிரஸல்ஸ் நகரிலுள்ள ஜாவுண்டெம் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகளும், நகரின் மத்தியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் வெடித்துள்ளன.
விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து கிடப்பதையும், கூரையின் சில பகுதிகள் இடிந்து அந்த இடிபாடுகள் தரையில் விழுந்துள்ளதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
இத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜாவுண்டெம் விமான நிலையத்தில் உள்ளோர்களை வெளியெற்றும் பணி நடைபெறுகிறது.சுரங்க ரயில் பாதையும் மூடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புகளுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பாரிஸ் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முக்கிய நபரான சாலஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெறுள்ளன
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் காணியொன்றில் இருந்து இரண்டு மீதிவெடிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியில் இருந்த தனியார் காணியொன்றில் இருந்தே மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன
குறித்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இரண்டு நாட்கள் பின்னர் காணியை துப்பரவு செய்யும் போது மீதி வெடியொன்று வெடித்து ஒருவர் காயமடைந்திருந்தார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பகுதியில் விசேட அதிரடி படையினர் மற்றும் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் இணைந்து வெடிபொருட்களை மீட்கும் பொருட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியும், வண்ணார்பண்ணைச் சிவன் கோவில் வடக்கு வீதியும் இணையும் சந்தியில் இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற கனரக வாகன – மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை முடித்து விட்டு தமது இல்லம் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரையும் கொக்குவில் பக்கமாகவிருந்து வந்த கொழும்பு CITY HARDWARE STORS நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். குறித்த கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இளைஞர் சந்தியில் சிக்னல் போட்டு வாகனத்தைத் திருப்பாததுடன், வீதி ஒழுங்கை மீறி வாகனத்தைத் திருப்பியமையுமே இந்த விபத்துச் சம்பவத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்துச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்துக்குக் காரணமான வாகனம் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பண்டத்தரிப்புப் பகுதியினைச் சேர்ந்த ஜே.கிறிஸ்ரியன் (வயது-21), ரி.இரட்ணசீலன் (வயது-25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தவர்களாவார் .
இலங்கையில் போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யும் நீண்ட தூர பேருந்து சாரதிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நுகர்ந்துள்ளனரா எனக் கண்டுபிடிப்பதற்காக உடனடி போதைப்பொருள் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வாகனப் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனரத்ன
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மதுபானம் அருந்தும் சாரதிகளை மட்டுமே உடனடியாக அறியக் கூடிய கருவிகள் தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுய தேவைக்கான மின்பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மின்சாரமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரு நாட்களாக மின்பிறப்பாக்கிகள் விற்பனை சடுதியாக அதிகரித்துள்ளது. வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் 650 வாற் மின்சக்தியை வெளியிடும் மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்திலுள்ள மின்பிறப்பாக்கி விற்பனை நிலையங்களில்
முடிவடைந்துள்ளது.
தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்படும் 2.5 கிலோவாற் தொடக்கம் 5.5 கிலோ வரையான மின்பிறப்பாக்கிகள் 60 ஆயிரம் தொடக்கம் விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கடைக்காரர் ஒருவர் கூறுகையில், இன்று மாத்திரம் தனது
கடையிலிருந்து
6 பெரிய மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், சிறிய ரக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கிகள் கடந்த 2 நாட்களில் விற்பனை செய்து முடிவடைந்துவிட்டதாகவும்
கூறினார்.
வியாபார நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மின்வெட்டால் ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் மின்பிறப்பாக்கிகளை கொள்முதல் செய்து தங்கள் தொழில் நடவடிக்கைகளை தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் மின்பிறப்பாக்கிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர் என அவர் மேலும் கூறினார்.
பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது.பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது.
இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாக கண்டு பிடிக்கமுடியவில்லை.
கரீபியன் தீவை சேர்ந்த மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
முதன் முறையாக பெர்முடா முக்கோண ரகசியம் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
கடற்பகுதியின் அடித்தட்டில் பெரிய எரிமலை வாய்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த எரிமலைவாய்கள் அரை மைல்கள் பரந்து விரிந்து கிடப்பதாகவும், இதன் ஆழம் சுமார் 150 அடி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவே நார்வே கடற்பகுதியில் அதிக இயற்கை வாயு கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த எரிமலைவாயில் இருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு அப்பகுதிகளில் சிதைவுகளை உருவாக்கி பின்னர் வெடித்துச்சிதறுகின்றது
அதிக எண்ணிக்கையிலான எரிமலைவாய்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதால், இவைகள் அளவுக்கு அதிகமான வாயுவை வெளியேற்றுகின்றன. எரிமலைவாய் அடிக்கடி வெடித்துச்சிதறுவதால் அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்றதொரு காரணங்களால்தான் பெர்முடா கடற்பகுதியிலும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் நடைபெறும் மாறுதல்கள் பெரும் பனிச்சரிவு போன்றோ அல்லது அணு எதிர்வினை போலவோ நடைபெறுவதாக
கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி கடல் மீத்தேன் வாயுவுடன் கலந்து கொதிநிலைக்கு வருவதால் கப்பல்கள் மூழ்கியதும் மாயமாகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இதனை விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கம், போக்குவரத்து திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், ஏனையோரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பலொன்று அதே பகுதியைச் சேர்ந்த கே.கேமராஜன் என்ற சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது. இதன்போது படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை
மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த கட்டடத்தில் சிறுமி மேலும் பலருடன் நின்று கொண்டிருந்த வேளையிலையே கீழே விழுந்துள்ளார்.காயமடைந்த சிறுமி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பம் தரிப்பதாகவும் அதில் 140 குழந்தைகள் பிறக்கும் போதே இறந்து விடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் சிறுவயது கர்ப்பிணிகள் 24,000 பேர் பதிவாவதாகவும்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரை அதிகாலை 3 மணிக்கு கடத்திச் சென்று முல்லைததீவில் வைத்து பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக மார்க்கண்டு செல்வகிருஸ்ணன் அல்லது செல்லப்பா என்ற 3 குழந்தைகளின் தந்தையான 35 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எதிரி பிணையில் விடப்பட்ட நிலையில் இந்தியாவுக்குத் தப்பியோடி அங்கு ஒளிந்து வாழ்கின்றார். இதனால் எதிரியின்றி வழக்கு விசாரணை நடைபெற்றது.
கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது, அந்த மாணவி 15 வருடங்கள் ஒரு மாத வயதுடையவராக இருந்தார்.
பாதிக்கப்பட்ட இந்த மாணவி தனக்கு நேர்ந்தது என்ன என்பதைத் தனது சாட்சியத்தில் நீதிமன்றத்திற்கு விளக்கிக் கூறினார்.
‘எதிரி, முதலில் என்னை மன்னாருக்குக் கூட்டிச் சென்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்ததன் பின்னர் முல்லைத்தீவுக்குக் கூட்டி வந்தார். அங்க 38 நாட்கள் இருந்தோம். அப்போது அவர் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தபோது, நான் அதற்கு உடன்படவில்லை. அவரை நான் எதிர்த்து நின்றேன். ஆயினும் எனது எதிர்ப்புக்கு மத்தியிலும் 6 தடவைகள் அவர் என்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார்.
‘நாங்கள் முல்லைத்தீவில் இருந்தபோது 40 ஆவது நாள் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அயல் வீட்டில் எனது பெற்றோர் வந்து என்னைத் தேடியபோது, என்னை அறையில் இருந்த அலுமாரிக்குள் ஒளிந்திருக்குமாறு எதிரி கூறினார்.
நான் அதற்கு உடன்படவில்லை. எனது பெற்றோரிடம் ஓடிச் சென்றேன். பின்னர், முல்லைத்தீவு பொலிசாரினால் நாங்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். அங்கு விசாரணைகள் நடைபெற்றன என்று பாதிக்கப்பட்ட பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் சாட்சியமளிக்கையில், பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தினார்.
சம்பவம் நடைபெற்ற அந்த இரவு தமது சகோதரியாகிய அந்த மாணவி தங்களுடன் நித்திரை கொண்டதாகவும் மறுநாள் காலை அவரைப் படுக்கையில் காணவில்லை என்றும் அவர் கடத்திச் செல்லப்பட்டதைப் பின்னர் அறிந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதர சகோதரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் கூறினர்.
வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களை அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி நெறிப்படுத்தினார்.
விசாரணையின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:
பதினாறு வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைப் பாதுகாவலரின் அனுமியின்றி அழைத்துச் செல்வது ஆட்கடத்தல் குற்றமாகும். அதேநேரம்,16 வயதுக்குக் குறைந்த சிறுமியை அவருடைய சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ பாலியல் துஷ்பிரயோகம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தண்டனைச் சட்டக் கோவை கூறுகின்றது.
இந்த வழக்கில் சம்பவ தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு 16 வயதுக்குக் குறைந்த பள்ளி மாணவியை கடத்தி எதிரி ஆட்கடத்தல் குற்றம் புரிந்துள்ளார். அத்துடன் 16 வயதுக்குக் குறைந்த அந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் மூலம் பாலியல் வல்லுறவு குற்றத்தையும் புரிந்துள்ளார்.
விசாரணையின்போது சாட்சியங்களின் மூலம் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய இரண்டு குற்றங்களையும் எதிரி புரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எதிரியைக் குற்றவாளியாகக் கண்டுள்ள இந்த நீதிமன்றம் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டமும் கட்டத்தவறினால் ஒர் ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கின்றது.
பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் பாலியல் வல்லுறவு கொண்ட குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்ச ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும். தவறினால் 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என
இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
குற்றம் சாட்டப்பட்ட எதிரி இந்தியாவில் இருப்பதாக மன்றில் சாட்சியமளிக்கப்பட்டிருப்பதனால், சர்வதேச பொலிசாரின் ஊடாக அவரைக் கைது செய்யுமாறு பகிரங்கப் பிடியாணை பிறப்பித்து பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடப்படுகின்றது.
அதேபோன்று சார்க் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையைப் பாவித்து, இந்தியாவால் உள்ள எதிரியை நாடு கடத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்து எதிரியை இலங்கைக்கு நாடு கடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.
யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய பணிப்பாளராக திரு. முகுந்தன் அவர்கள் இன்று முதல் பணிப்பாளர் நாயகம் திரு. து. யு. ரஞ்சித் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார்.
வாழ்க்கை திறன் மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்கவும் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் எதிர்வரும் 04.03.2016 அன்று யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்ய இருக்கின்றனர்.
யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி சீராக இயங்க ஒத்துழைத்த முதலமைச்சர் வடமாகாணம், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
உண்மை நிலையை
வெளிக்கொண்டு வர பாடுபட்ட இணைய மற்றும் பத்திரிகை செய்தி நிறுவனங்களுக்கும் தமது நன்றிகளை தொழில்நுட்பவியல் கல்லூரி சமூகம் தெரிவித்துக் கொண்டுள்ளது
பதுளை உடுவரை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் பலியானார். அத்துடன் இருவர் படுகாமயடைந்தனர்.
டபிள்யூ.எம்.பிரியலதா (வயது 47) என்ற ஆசிரியையே விபத்தில் நடந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தையடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி பஸ்ஸை சுற்றிவளைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்புக்காக பொலிஸார் களமிறக்கப்பட்டனர். பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக பிரதான வீதியில் காத்திருந்த போது,
அவ்விடத்துக்கு வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது பஸ்ஸுக்கு
பின்னால் வந்த லொறி ஒன்று பஸ்ஸூடன் மோதியதையடுத்து ஆசிரியை தவறி கீழே விழுந்து பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையே நசுங்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அவருடன் இருந்த இரு ஆசிரியைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை கைதுசெய்துள்ளனர் .
இதேவேளை -
பண்டாரகம பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் பலியாகினர். அத்துடன் நலவர் காயமடைந்தனர்.
பண்டாரகம - கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல என்ற இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்றும் ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பலியானவர்களில் இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும்