போட்டி போட்டோடும் பேருந்துக்களும் உயிரைக் கையில் பிடிக்கும் மக்களும்.
மனிதன் போக்குவரத்தினை ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரை தனது அறிவிற்கும், தொழிநுட்பத்திற்கும் ஏற்ப வளர்த்து வந்துள்ள படிமுறைகளையும், வளர்ச்சியினையும் கற்றும் அறிந்தும் இருக்கின்றோம். அதன் அடிப்படையில் மனித வாழ்க்கையில் இன்று போக்குவரத்தானது துரித வளர்ச்சி அடைந்து காணப்படுவதோடு, நினைத்த மாத்திரத்தில் குறித்த இடத்தினை குறிப்பிட்ட மணி நேரத்தில் அச்சொட்டாக அடையவும் முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க இதனூடாக தற்செயலான விபத்துக்களும், சேதங்களும் ஏற்படுவதும் மறுக்க முடியாதது. இருந்தும் சில விபத்துக்கள் சாரதிகளுடைய, பயணிகளுடைய, பாதசாரிகளுடைய கவனக்குறைவின் காரணமாக இடம் பெறுவதும் உண்மை. அந்தவகையில் சில அரச பேருந்துச் சாரதிகளும்,
சில தனியார்
பேருந்துச் சாரதிகளும் கூடுதலான பயணிகளை தங்களின் பேருந்துக்களில் ஏற்றுவதை நோக்காகக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திச் செல்ல எத்தனித்து மிக அதிவேகமாக பேருந்துக்களை இயக்குவதோடு, வீதி விதி முறைகளையும் கடைப்பிடிப்பதில் தவறி
விடுகின்றனர்.
இதன் பொருட்டு வீதியில் இருக்கின்ற சில பயணிகளை ஏற்றிச் செல்லவும் தவறுவதுடன் முன்னால் வரும் வாகனங்களுக்கும், பின்னால் வரும் வாகனங்களுக்கும் அவை செல்வதற்கான இடைவெளியினை சில சமயங்களில் கொடுக்க சில சாரதிகள் மறுக்கின்றனர்.
மேலும் ஏனைய பேருந்துக்களோடு போட்டி போட்டு
அதிவேகமாக
சில சாரதிகள் பேருந்துக்களைச் செலுத்திச் செல்வதனால் பேருந்துக்குள் இருக்கும் பயணிகள் எந்த நேரத்திலாவது விபத்து நடந்து விடுமோ எனும் அச்சத்தினால் தங்களின் உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு எப்போது தாங்கள் அடையும் இடம் வருகிறது எனப் பார்த்துக்கொண்டு இருப்பதனைக் காணமுடிகின்றது. இதனால் பயணிகளுக்கும் சில சாரதிகளுக்குமி;டையே முரண்பாடுகளும் ஏற்படுவதுண்டு.
சுpல பயணிகள் அவசர வேலையின் நிமிர்த்தம் பேருந்துக்காக காத்திருந்து அதில் செல்ல முற்படும் போது அவர்களை ஏற்றாமல் சில சாரதிகள் செல்வதோடு, பேருந்தினை ஓரம்கட்டாமல் நடு வீதியில்
சில பயணிகளை
இறக்கிவிட்டு செல்கின்றனர் இதனால் பின்னால் வரும் வாகனங்கள் பயணிகளை மோதவும் வழியமைக்கின்றனர். இதன் காரணம் பேருந்தை நிறுத்தி குறிப்பிட்ட சில பயணிகளை ஏற்றும் போது ஏனைய பேருந்துக்கள் முந்திச் சென்று கூடுதலான பயணிகளை ஏற்றிச் சென்றுவிடும் என்ற நோக்கமே எனலாம்;.
கூடுதலான மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளை, சேவைகளை பேருந்துக்கள் மூலமே பயணித்து நிறைவேற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமின்றி தாங்கள் போகும் பயணத்திற்கும், தங்களுக்கும் எந்த வித பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளமை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இன்றைய நிலையில் பல செய்திகளை அறிந்தும், கேட்டும், பார்த்தும் இருக்கின்றோம் அவற்றில் கூடுதலான விபத்துக்கள் வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறிய விபத்துக்களாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 3ம் திகதி இ.போ.ச பேருந்தும், தனியார் பேருந்தும் பலாலி வீதியில் போட்டி போட்டு; ஓடியதில் தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியை மோதி அப்பாவி ஆறு வயது மாணவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தமையை ஊடகங்களினுடாக சான்று பகிர்கின்றமை ஒரு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். இது போன்று பல சம்பவங்களை கூற முடியும்.
காலையில் எழுந்து உற்சாகத்துடன் தங்கள் கடமைகளுக்காக செல்வபர்கள் தங்களின், சாரதிகளின், பாதசாரிகளின் கவனக்குறைவின் காரணமாக சாவினை வரவழைக்கின்றமையினையும் உணர முடிகின்றது. சில சாரதிகள் தாங்களின் சுய நலனுக்காக அப்பாவி உயிர்கள் பறிபோவதனை
யாராலும்
ஏற்றுக்கொள்ள முடியாது இவர்ளை நம்பி போக்குவரத்துச் செய்யும் பெரியவர்கள், சிறுவர்கள், சாதாரன மக்களின் நிலை என்ன? என கேள்வி எழுகின்றது. இவ்வாறு சில சாரதிகள் செயற்படுவதனால் தாங்கள் உட்பட ஏனையவர்களும் பாதிப்பை எதிர்நோக்கவேண்டி வரும் என்பதனை அறிந்தவர்களா? இல்லையா?
ஏதிர் காலத்தில் இவற்றை மனதில் கொண்டு சில சாரதிகள் செயற்படாவிடின் இன்னும் பல இழப்புக்களை நாம் சந்திக்க வேண்டி ஏற்படலாம்
சாரதிகளை நம்பியே மக்கள் வீதிகளில் பயணிக்கின்றனர். ஆவர்களை பத்திரமாகப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு
சாரதிகளின்
கடமையாகும.; எனவே வேகமாக வாகனங்களை இயக்குவதனை தவிர்ப்பதன் மூலமும். ஈட்டிக்கு போட்டி போட்டு வாகனங்களை இயக்குவதனை தவிர்ப்பதன் மூலமும். வீதி விதி முறைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் பல விபத்துக்களிலிருந்து பல உயிர்களைப் பாதுகாக்கமுடியும் என்பதில்சந்தேகமில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>