வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் பெரும் துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் 9.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
16 ஆவது தடவையாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை காலமும் நடைபெற்று முடிந்த 15 ந்து போட்டிகளில் இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் ஏழு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி சம நிலையில்
முடிவடைந்துள்ளன.
ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினர் கே.பிரசாந் தலைமையிலும் மகாஜனாக் கல்லூரி அணியினர் கே.பிரணவன் தலைமையிலும் களமிறங்குகின்றார்கள்.
இரு அணிகளும் இந்தாண்டு தலா ஐந்து போட்டிகளில் மோதிக் கொண்டுள்ளன. இதில் மகாஜனாக் கல்லூரி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியும் தாம் மோதிய போட்டிகள் நான்கில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியை சம
நிலைப்படுத்தியும் உள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக