சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக்காக ஐந்து இலட்சம் யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும், பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாரியளவில் வாகனங்கள் சிவனொளி அடவிப் பகுதிக்கு வந்திருப்பதோடு, நல்லதண்ணியிலிருந்து மவுஸ்ஸாகெல வரையான 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலை உச்சிக்கு செல்லும் போது அதிகபடியான யாத்திரிகர்களின் நெரிசல் காரணமாக மலைக்கு செல்ல முடியாமல் திரும்புவதாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் தெரிவித்துள்ளார்.
யாத்திரிகர்கள் பலர் இசைக் கருவிகள் சகிதம் வந்திருப்பதனால் அவற்றை மஸ்கெலியா பொலிஸ் பாதைத் தடையில் விட்டு செல்ல பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
அத்தோடு மவுஸ்ஸாகெல, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க வேண்டாம் என தொடர்ச்சியாக யாத்திரிகர்களுக்கு பொலிஸாரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள், மதுபானம் மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை யாத்திரிகர்கள் தம்முடன் எடுத்துவரக்கூடாது என நல்லதண்ணி பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக