மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை பழைய பிரதான வீதியில் 5ம் கட்டை ஆரையம்பதி -மண்முனை சந்தியில் நேற்று 15 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக இலங்கை
வந்திருந்திருந்த
மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு பூவரசன்குடா வீதியைச் சேர்ந்த புண்ணியமூரத்தி தயாபரன் 27வயது இளைஞன் ஸ்தலத்தில் தலை இரண்டாக சிதறி உயிரழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.
மேற்படி விபத்து தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இவ் விபத்தில் பலியான புண்ணியமூரத்தி தயாபரன் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தியதாக பொலிசாரின்
ஆரம்ப கட்ட
விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், குடி போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குறித்த இளைஞன் அவ் வழியால் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஒல்லிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்
முஹம்மது முஸ்தபா
முஹம்மது ரஊப்தீன் வயது 44 சைக்கிளில் மோதி அதன் வேகத்தில் அவ் வீதியின் முன்னாலுள்ள காணி ஒன்றியில் வேலிக் கட்டை கம்பியில் மோதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் செலுத்தியவருடன் வந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த
தவராசா புஷ்பராசா (வயது 25)
என்பவரும், துவிச்சக்கர வண்டியில் வந்த முஹம்மட் ரஊப்தீன் வயது 42 ஆகியோரும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், விபத்தில் சேதமடைந்த இரு வாகனங்களும் காத்தான்குடி பொலிஸ் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.
இதே வேளை இன்று 16 செவ்வாய்கிழமை மதியம் குறித்தி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.ரத்நாயக்க, காத்தான்குடி
பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர, அதன் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குழு இப் விபத்து தொடரப்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக