கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக சுமார் 600 மில்லியன் ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையினால் மின்சார தடை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இந்த மின்சாரத்தடை ஏற்பட்டது.நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமையன்று ஏற்பட்ட மின் தடை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு நீடித்தது
.இதனையடுத்து வெள்ளிக்கிழமையும் சில மணித்தியாலங்களுக்கு பல இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கு இடம்மளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக