வணக்கம்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

கடும் மழையால் வவுனியாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

வவுனியாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடனான காலநிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் இன்று காலையிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் மக்களின்
 இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.அத்துடன் வர்த்தக நிலையங்கள்இ தூர இடங்களிலிருந்து நகருக்கு வந்த பயணிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன.

இன்று (21.12.2018) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.இதன்படி, 92,95 ஒக்ரெய்ன் பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலையில் 92 ஒக்ரெய்ன் 125 ரூபாவும், 95 ஒக்ரெய்ன் 149 ரூபாவாகவும் 
விற்கப்படும். டீசல் 5 ரூபாவும், சுப்பர் டீசல் 10 ரூபாவும் குழறக்கப்படுகிறது.கடந்த ஒக்டோபர் மாதம்
 10ஆம் திகதியன்று, எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்ட போது, ஒரு பெரல் கச்சா எண்ணெய், 85 டொலராகக் காணப்பட்டது. இந்த விலை தற்போது, 57 டொலராகக் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்துக்கு அமைய, எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக, திறைசேரித் தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 1 டிசம்பர், 2018

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்கள் விலை குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்படும் என பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே 
தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய வளத்துறை அமைச்சில்.30.11.2018. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
 குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும், குறித்த எரிபொருட்களின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, ஒக்டேன் 92 வகை பெட்ரோல் 135 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளதுடன், 95 வகை பெட்ரோல் 159 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 106 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 131 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மண்ணெண்ணெய் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>