வணக்கம்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மீண்டும் கிழக்கில் 29,04,19, மாலை முதல் ஊரடங்குச் சட்டம்

இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் 
$காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக்
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 29 ஏப்ரல், 2019

விசேட அறிவித்தல் பொனி சூறாவளியின் தாக்கம்

 பொனி சூறாவளியானது மட்டகளப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் தற்போது
 நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பொனி 
சூறாவளியின் தாக்கத்தினால், நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ந்துவரும் மணித்தியாலங்களில் நூறு மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம்
 எதிர்வு கூறியுள்ளது.
மேலும், சிலப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யக் கூடுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்களுடன் இணைந்துக்கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹின்.

இங்குஅழுத்தவும் நிலாவரை .கொம் செய்திகள்

சனி, 27 ஏப்ரல், 2019

அரசாங்க வேலை வாய்ப்பு க.பொ.த உயர்தரத்துடன்


இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர்
 பதவிக்கு வெற்றிடம்*
🌐 *(தகைமை – க.பொ.த உயர் தரத்தில் சித்தி + 6 மாத கணணிக் கற்கை + 2 வருட வேலை அனுபவம்)*
🌐 *(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)*
🌐 *விபரமாக -* https://goo.gl/rPNfny
🌐 *விண்ணப்ப முடிவுத் திகதி – 05.03.2019*
விண்ணப்ப படிவத்தைப் பெற இங்கே அழுத்துங்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில 
இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
 மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காலநிலை குறித்த விசேட எச்சரிக்கைவடபகுதியில் வாழும் மக்களுக்கு

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 நாள்கள் பலத்த காற்றுடன் அதிகரித்த மழை பெய்யும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.வங்காள விரிகுடாவில் 
ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வடக்கில் 28 ஆம் 29ஆம் 30ஆம் திகதிகளில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும்.எதிர்வு கூறப்படும் மழை
வீழ்ச்சி 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் ஆக காணப்படுகிறது.ஆகவே வெள்ள மூழ்கடிப்பு நிலை ஏற்படும். சுமார் 
70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.வேகமான காற்றுடன் அதி கூடிய மழை வீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது.ஆகவே வடக்கு மாகாண மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
இடர் நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் 1990 என்ற நோயாளர் காவு வண்டி சேவை இலக்கத்துக்கும் அழைத்து சேவைகளை பெற்று கொள்ளலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 24 ஏப்ரல், 2019

வழங்கும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்

பல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில், இந்தியாவுக்கான வீசா வழங்கும் ஐ.வீ.எஸ். லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா
 வழங்கும் வீ.எப்.எஸ். குலோபல் வீசா நிலையம் என்பன மூடப்பட்டுள்ளன.
அத்துடன், மலேசியா, தாய்லாந்து மற்றும்
 சீனா ஆகிய நாடுகளுக்கு வீசா வழங்கும் தூதரகங்களுடன் இணைந்து இயங்கும் நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் 
குறிப்பிடப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தொடர் குண்டு வெடிப்புகள் நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது

1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்
2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்
3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்
4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்
5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்

6. கொழும்பு, சினமன் கிராண்ட்
7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்
8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1
9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர்
 காயமடைந்துள்ளனர்.
இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றுல் இரண்டு ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அனைத்து வடமாகாண சபைக்கு உள்பட்ட அரச அலுவலகங்கள் விடுமுறை

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால்,22,04,2019 நாளையும் 23,04,2019  நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 
வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் 22,04,19 நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 
பணிப்புரை விடுத்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை ஊடரங்கு நடைமுறைக்கு பாதுகாப்பு அமைச்சு

நாடுமுழுவதும் ஊடரங்கு இன்று மாலை 6 மணி தொடக்கம் 
நாளைக் காலை 6 மணிவரை
நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் இன்று காலை 6 இடங்களிலும் பிற்பகல் தெஹிவளை மற்றும் தெமட்டகொடவில் என 8
இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன்இ சமூக வளைத்தளங்களும் 
தடை செய்யப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இலங்கையில் 3 நாட்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் பல பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.
குறித்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அதிகளவு நீரை அருந்த வேண்டும் என்றும், தங்களது பணியிடங்களில் தேவையான அளவு ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேநேரம், முதியோர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன், குழந்தைகளையும், சிறுவர்களையும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்றும் அந்த நிலையம் 
அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அதிக பணிச்சுமையை தவிர்க்குதாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 15 ஏப்ரல், 2019

யாழில் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் மோதல்

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துகு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில்  சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்களை தாக்க முற்பட்டதால் 
பதற்றம் ஏற்பட்டது.
வரணி இயற்றாளையில்  மாணவன் தாக்கப்பட்டார். வைத்தியசாலைக்குள் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் நந்தகுமார் பாருகன்  (வயது-19) என்ற மாணவனே வெட்டுக்காயத்துக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நண்பர்கள் கூடி மது அருந்தியுள்ளனர். அதன்போது அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு  கைகலப்பாக மாறியதில் ஒருவர் தாக்கப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் கும்பல் மோதலில் ஈடுபட அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து  சாவகச்சேரி பொலிஸார் அழைக்கப்பட்டனர். அதற்கு முன்னர் தாக்குதல் நமத்திய கும்பல் 
அங்கிருந்து தப்பித்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>