வணக்கம்

வியாழன், 1 அக்டோபர், 2015

வைரவர் கோயிலடி வாழைத்தோட்ட கிணற்றிலிருந்து பெண் சடலம்?

யாழ்.சிறுப்பிட்டி கிழக்கு, வைரவர் கோயிலடி வாழைத்தோட்ட கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான ஜெயமோகன் விஜயமாலா (வயது-41) என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (புதன்கிழமை) அதிகாலை தனது கணவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற பெண், வீடு திரும்பாததையடுத்து நடத்திய தேடுதலில், கிணற்றிற்கு நீர் அள்ளச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பான விசாரணைகளை, அச்சவேலி பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக