வடமராட்சி கரவெட்டி கப்பூது வெளிப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளோடு எரியுண்ட நிலையில் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கரவெட்டி கரணவாயிலிருந்து கப்பூது நோக்கி செல்லும்
வீதியில் மோட்டார் சைக்கிளுடன் எரியுண்ட நிலையில் இளைஞர்
ஒருவர்
உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து படுகாயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு மந்திகை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டவர் மத்தொனி கரவெட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய குமாரசாமி நிரோஐன் என்று அப்பகுதியில் மீட்கப்பட்ட ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. குறிப்பிட்ட சம்பவத்தில்
மோட்டார் சைக்கிள்
முற்றாக எரிந்து சேதமடைந்திருக்கிறது. இது யாருடையதும் கைவரிசையா அல்லது தற்கொலை முயற்சியா என்பது தொடர்பிலும் சந்தேகம் நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர் -
0 கருத்துகள்:
கருத்துரையிடுக