கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி; மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக
பதில் பதிவாளர் ஏ.பகிரதன் தெரிவித்தார். கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட 06 மாணவிகள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தின்
விரிவுரைகள் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக