மலேரியா நோயைக் கட்டுப்படுத்திய முதலாவது வெப்பமண்டல நாடொன்றாக உலக சுகாதார நிறுவனத்தினால் உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிதியினை உலக நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் சுகாதாரப் பிரச்சினையாகியுள்ள எயிட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 2002 ஆம் ஆண்டில் உலக தலைவர்களின் பங்கேற்புடன் “ எயிட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய நிதியம்” .
ஸ்தாபிக்கப்பட்டது இந்நிதியம் ஆரம்பித்த நாள் முதல் இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நோய்கள் பரவக்கூடிய நாடுகளின் அரச நிறுவனங்களுக்கும் வேறு அமைப்புக்களுக்கும் நிதி வசதிகளை வழங்கும் நிறுவனமாக உலகளாவிய நிதியம் செயற்பட்டு
வருகின்றது. 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து இலங்கையில் மலேரியா நோய் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் பதிவாகவில்லை. தற்போது மலேரியா தொற்று இலங்கையில் முற்றாக நீங்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக