வணக்கம்

வியாழன், 15 அக்டோபர், 2015

யூனியன் கல்லூரியின் 199ஆவது ஆண்டு விழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியின் 199ஆவது ஆண்டு விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று  கல்லூரியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கல்லூரியின் அதிபர் வே.க. இரத்தினக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அத்துடன், வடமாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் 
சிறப்பு 
விருந்தினராகவும், தெல்லிப்பளைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஈஸ்வரநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இன்று முற்பகல் பாடசாலைக்கு விஜயம் செய்த பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டதுடன், மங்கள் விளக்கேற்றி இன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வில் கல்லூரியின் 199ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் பல்வேறான கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், விருந்தினர் உரைகளும் இடம்பெற்றன
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக