வணக்கம்

சனி, 10 அக்டோபர், 2015

யாழ்.பண்பாட்டுப் பெருவிழாவில் முதலமைச்சர் பங்கேற்பு?

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா  நடைபெற்றுள்ளது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய யாழ்.பண்பாட்டு பெருவிழா இன்றைய தினம் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில்
 நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து
 கொண்டார்.
சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் இ.ரவீநர்திரனும் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி 
கலந்து கொண்டார். சர்வமத தலைவர்களின் ஆசி உரைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நாட்டார் பாடல்கள், கிராமிய நடனம், தென்மோடி கூத்து போன்ற பண்பாட்டு கலைகள் நிகழ்த்தப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இதில் நெடுந்தீவு- மதியாபரணம் கந்தையா(கூத்து), வேலணை- நல்லான் தங்கவேலு (நாடகம்), ஊர்காவற்றுறை- அந்தோனி சவரிமுத்து(கூத்து), காரைநகர்- கந்தையா வடிவேலு(வாத்தியம்) யாழ்ப்பாணம்- நீக்கலான் பிலிப்பு(கூத்து), நல்லூர்- சபாபதிப்பிள்ளை 
பாலசிங்கம்(கர்நாடக இசை)
கோப்பாய்- வைத்தியலிங்கம் குணசேகரம்(இலக்கியம்), உடுவில்- இராசு புண்ணியம்(தவில்), சங்கானை- செல்லத்துரை சிவசுப்பிரமணியம்(இலக்கியம்), சண்டிலிப்பாய் -  சூசைப்பிள்ளை அகஸ்ரின்(வாத்தியம்), தெல்லிப்பளை- அமரசிங்கம் இராசதுரை(இலக்கியம்)
கரவெட்டி- செல்வி பேரின்பநாயகி சிவகுரு(நடனம்), பருத்துறை- காத்தமுத்து அமிர்தலிங்கம்(வாத்தியம்), மருதங்கேணி- கதிர்காமு வல்லிபுரம்(கூத்து), தென்மராட்சி- பொன்னையா இராசகுலசிங்கம்(ஓவியம்) ஆகி ய மூத்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக