வணக்கம்

வியாழன், 8 அக்டோபர், 2015

இழுபறியில் இருந்து நெடுந்தீவில் அபிவிருத்திகள் ஆரம்பம்

நெடுந்தீவுப் பிரதேசத்தில் நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 அதற்கமைவாக நெடுந்தீவு மேற்கு குடாக் கேணிக்கிணறு பிடாரி அம்பாள் கோயில் வீதி, மீனவர் நலன்கருதி இரண்டு கலங்கரை விளக்குகள் அமைப்பதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மகா வித்தியாலய விளையாட்டரங்கில் மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இதேவேளை-நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனக் கிராமத்துக்கான பிரதான வீதி நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாதிருப்பதாகவும், மழை காலம் ஆரம்பித்துள்ள  நிலையில், இந்த வீதியால் பொது மக்கள் போக்கு வரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மட்டு 

மல்ல, வேறுசில வீதிகளும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. இதற்கான நடடிக்கைகளை மேற்கொள்ள   சம்பந்தப்பட்ட வர்களுடன் தொடர்புகொள்ள இருப்பதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் செ.ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக